வெள்ளி, 24 மே, 2019

பிராணாப் முகர்ஜியின் மகன்   பி
அபிஜித் முகர்ஜி ஜங்கிபூர் தொகுதியில் தோல்வி!
திரிணாமூல் வெற்றி! காங்கிரஸ் 3ஆம் இடம்.
மார்க்சிஸ்ட் டெபாசிட் இழப்பு!

மே வங்கத்தில் 42 தொகுதிகளில்
ஒரே ஒரு தொகுதியில் (ஜாதவ்பூர்) மட்டும்
மார்க்சிஸ்ட் கட்சி டெபாசிட் பெற்றது.
மீதி அனைத்திலும் டெபாசிட் இழப்பு! 

தோல்விக்குப் பொறுப்பேற்று காங் தலைவர்
பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும்!
25 மாநில காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி!


மூல ஆசான் படத்தை எடுத்து விட்டு
மு க ஸ்டாலின் படத்தை மாட்டும் மார்க்சிஸ்டுகள்!
படம் உதவி: Haseef Mohammed


துர்கா ஸ்டாலினைச் சந்தித்து
நாத்தழுதழுக்க நன்றி கூறிய
மார்க்சிஸ்ட் உ வாசுகி! அடுத்து
கிருத்திகா உதயநிதியிடம் நன்றிகூற முடிவு!

இந்தியா முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி
அலுவலகங்களில் மு க ஸ்டாலின் படத்தை
மாட்ட சீதாராம் யெச்சூரி உத்தரவு!

தேமுதிகவின் இறுதி ஊர்வலத்தில்
பங்கேற்கிறேன். பெசன்ட் நகர் மின்மயானத்தில்
எரியூட்டு!

மே வங்கத்தில் மமதாவை தோற்கடிக்க பாஜகவுக்கு
உதவியது மார்க்சிஸ்ட் கட்சி! கேரளத்தில் மார்க்சிஸ்ட்டைத்
தோற்கடிக்க காங்கிரசுக்கு உதவியது பாஜக!

கேரளத்தில் காங்கிரஸ் பாஜக ரகசிய உறவு!
மார்க்சிஸ்டைத் தோற்கடிக்க 5 சதம் வாக்கை
காங்கிரசுக்கு அளித்தது பாஜக!

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில்
19 தொகுதிகளில் வென்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.
மார்க்சிஸ்ட் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி.
இதற்கு காரணம் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார்
50,000 வாக்குகளை பாஜக காங்கிரசுக்கு அளித்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில்
பாஜக காங்கிரஸ் இரண்டும் ஒரே நிலையை எடுத்தன.
இரண்டும் சேர்ந்து பொது எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியை
கருவறுத்தன.


ஜூன் மாதம் தினகரன் கைது செய்யப் படுகிறார்!
திகார் சிறையில் அடைக்கப் படுகிறார்!
எடப்பாடி ஓபிஎஸ் முயற்சி வெற்றி அடைகிறது!

CPI, CPM கட்சிகள் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டு
இருக்கிறது. 

2G வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது.
தீர்ப்பு வரட்டும். கார்த்திக் சிதம்பரம்
உள்ளே போகிறார். இது நடக்கப் போகிறது.

இன்னும் ஆறு மாத காலத்திற்கு தமிழகம் பக்கம்
திரும்ப மாட்டார் அமித்ஷா. மற்ற இடங்களில்
அவருக்கு வேலை இருக்கிறது. எனவே 6 மாதம்
கழிந்த பிறகுதான் சொல்ல முடியும்.


தேர்தல் முடிவுகளில் ராஜாத்தி அம்மாளுக்கு
திருப்தி இல்லை. ஏகப்பட்ட வருத்தம்!
மகள் கனிமொழி மத்திய அமைச்சராக முடியவில்லையே! 


பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் காரணம் இல்லை.
சித்தாந்த ஓட்டாண்டித்தனமே ஒரே காரணம்.
முழுமுதல் காரணம்.


வேலூரில் பிடிபட்ட பணம் யாருடையதோ ஓ
அந்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யக்கோரி
சுப்பிரமணியன் சுவாமி ECயில் புகார்!

தேர்தல்  ஆணையம் தகுதிநீக்கம் செய்ய மறுத்தால்
உச்சநீதிமன்றத்தை நாட டாக்டர் சுவாமி முடிவு!

200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும் சோரம் போய்
அவர் மத்திய உள்துறை அமைச்சர் ஆகிறார்,'
துணைப் பிரதமர் பதவிக்கு ராகுல் பரிசீலிக்கிறார்
என்றெல்லாம் கிளப்பி விட்ட குட்டி முதலாளித்துவ
மூடர்கள் தற்போது தலைமறைவாக ஆகி
விட்டார்கள்.

கண்டவனும் 4 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில்
ஜெயிக்கும்போது, பெரியாரின் பேரன்
EVKS இளங்கோவனை காயடித்து விட்டீர்களே
கயவர்களே! இதுவாடா பெரியார் மண்?  தா


100க்கும் மேற்பட்ட பதிவுகளில் இருந்து
நான் தெரிந்து கொண்டதுதான் இது.
 

தேனி முடிவு!
-----------------------
பதிவானவை = 11,734,489
ரவீந்திரநாத் அதிமுக = 5,03,459
EVKS இளங்கோவன் காங் = 4,25,785
தங்க தமிழ் அமமுக = 1,43,173
சாகுல் ஹமீது நாம் தமிழர் = 27438
ராதாகிருஷ்ணன் மநீம = 16708.
அதிமுக வெற்றி! சுமார் 77000 வாக்கு வித்தியாசம்.

தமிழ்நாடு வாரிசுகளை வாழவைக்கும் மண்!
இங்கு போட்டியே ஒரு வாரிசுக்கும் இன்னொரு
வாரிசுக்கும்தான்!

எனவே ஓபிஎஸ்சின் வாரிசு வென்றுள்ளார்.
பெரியாரின் வாரிசு தோற்றுள்ளார்!
-----------------------------------------------------------

 
    
  



  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக