ஜோசியப் படிப்பைக் கொண்டு வந்த கலைஞர்!
மக்கள் வரிப்பணத்தில் என்ன மயிருக்கடா ஜோசியம்?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
காலம்: 1999-2004
பிரதமர்: வாஜ்பாய்.
வாஜ்பாய் அமைச்சரவையில் திமுக முக்கிய பங்கு.
1) திமுகவின் முரசொலி மாறன் வர்த்தகம் மற்றும்
தொழில் துறை அமைச்சர் (commerce and industry)
2) திமுகவின் டி ஆர் பாலு சுற்றுச்சூழல் அமைச்சர்.
3) திமுகவின் ஆராசா இணை அமைச்சர்.
பாஜகவின் ஜனா கிருஷ்ணமூர்த்தி சட்ட அமைச்சர்.
ரங்கராஜன் குமாரமங்கலம் எரிசக்தி அமைச்சர்.
பொன் ராதாகிருஷ்ணன் இணை அமைச்சர்.
பாஜக திமுக கூட்டணி அரசு நாட்டில் முதல் முறையாக
ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. அது பரிசுத்தமான
இந்துத்துவ அஜண்டா!
இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதல் முறையாக
ஜோதிடப் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப் பட்டது.
ஜோசியத்தில் BA, MA பட்டங்கள் வழங்கப்பட்டன.
கேவலத்திலும் கேவலமாக ஜோசியத்தில் டாக்டர்
பட்டமும் (PhD) வழங்கப் பட்டது.
இதையெல்லாம் கொண்டு வந்தவர் அன்றைய மனித
வள அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இது
முற்றிலுமான இந்துத்துவ அஜண்டா.
இதற்கு திமுக ஏதேனும் எதிர்ப்புத் தெரிவித்ததா?
இல்லை. திமுக அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில்
இதை எதிர்த்து முறியடித்தார்களா? திமுக
அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தார்களா?
இல்லை, ஒரு மயிரும் இல்லை.
சரி, வாஜ்பாய் ஆட்சி 2004ல் முடிவுக்கு வந்து விட்டது.
அதன் பிறகு 10 ஆண்டுகள் காங்கிரசின் ஆட்சிதான்.
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த
அந்தத் துயரமான நேரத்திலும் கூட, சக்கர நாற்காலியில்
அமர்ந்தபடி டெல்லி சென்று சோனியாவைச் சந்தித்து
பசையுள்ள துறைகளைக் கேட்டு வாங்கினார்
கலைஞர். நல்லது. அதை நாம் குறை சொல்லவில்லை.
ஆனால் சோனியாவிடம் சொல்லி, பாஜக காலத்தில்
கொண்டு வரப்பட்ட ஜோசியப் படிப்பை ரத்து செய்ய
கலைஞர் முயன்றாரா? டாக்டர் மன்மோகன் சிங்கிடம்
வலியுறுத்தினாரா? ஒரு மயிரும் இல்லை என்பதுதானே
உண்மை!
திமுக ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட ஜோசியப் படிப்பில்
இதுநாள் வரை லட்சக் கணக்கான BA (astrology)
பட்டதாரிகள் இன்று வரை உருவாகி விட்டனர்.
தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் BA, MA
ஜோசியப் படிப்பு இருக்கிறது.
ஏன் கலைஞர் ஜோசியப் படிப்பை நீக்க முயற்சி
செய்யவில்லை? கலைஞரே ஒரு ஜோசியப் பித்தர்.
ஜோசியன் சொன்னான் என்பதற்காக மஞ்சள் துண்டை
சாகும் வரை அணிந்த கலைஞர் எப்படி ஜோசியப்
படிப்பை நீக்குவார்?
இன்றைக்கு எடப்பாடி அரசு மழை பெய்ய வேண்டி
யாகம் செய்ய உத்தரவு போடுகிறது என்றால்,
அந்த தைரியம் எடப்பாடிக்கு எப்படி வந்தது?
கலைஞர் கொண்டு வந்த ஜோசியப் படிப்புதானே
அந்த தைரியத்தை எடப்பாடிக்கு வழங்கியது!
ராஜாத்தி அம்மாள் செய்த யாகம் எல்லாம்
பல்கலைக் கழகங்களில் கற்றுத் தரப்படும்
ஜோசியப் பாடத்திட்டத்தில் உள்ளதுதானே!
எனவே மீண்டும் கூறுகிறோம். திராவிட இந்துத்துவம்
மிகவும் ஆபத்தானது. அதை முறியடிக்காமல்
அறிவியல் இங்கு வளராது.
*********************************************
படங்களில்:
படம்-1 ஜோசியப் பட்டப் படிப்பு தமிழில் வினாத்தாள்.
படம்-2: திமுக வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து
அவர்களின் SRM பல்கலை உபி மாநிலத்தில்
ஜோசியத்தில் பயிற்சிப் பட்டறை நடத்துகிறது.
---------------------------------------------------------------------
ரகுபதி
ஏன் இல்லை? இன்றும் ஜோசியப் படிப்பு உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ளது. தமிழ்நாட்டிலும்
உள்ளது. ஆண்டுதோறும் ஜோசியத்தில்
பட்டதாரிகள், முதுநிலைப் படடதாரிகள்,
டாக்டரேட் PhD என்று வெளிவந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
BA (வரலாறு) படித்தவன் என்ன செய்கிறான்?
BA (இலக்கியம் ) படித்தவன் என்ன செய்கிறான்?
அதே போலதான். இங்கு கேள்வி அது அல்ல.
ஜோசியம் என்பது மூடத்தனம். அதைப் பல்கலைக்
கழகங்களில் கற்றுக் கொடுப்பது எவ்வளவு
அயோக்கியத்தனம்? இந்த அயோக்கியத் தனத்துக்கு
துணை போன கயவர்களை எதனால் அடிக்கலாம்?
இந்தப் படிப்பைக் கொண்டு வந்தவர்களுக்கு என்ன
தண்டனை? வாஜ்பாய் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
இந்தக் கருமத்தை பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி
ஏன் நீக்கவில்லை? இதுதான் கட்டுரையின் சாரம்/
பாரதியார் ஒரு ஆத்திசூடி எழுதினார்.அதில்
"சோதிடந்தனை இகழ்" என்றார்.
ஆனால் போலி நாத்திகக் கூட்டம் பாரதியை
இகழ்கிறது.புழுவினும் இழிந்த கயவர்கள்.
இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த
அறிவியல் பேரணியில் இதைத்தான் பேசினேன்.
வாஜ்பாய் கொண்டு வந்த ஜோசியப் படிப்பையும்
அதை கலைஞர் முழுமனதுடன் ஆதரித்த
ஈனத்தனத்தையும் வன்மையாகக் கண்டித்து
இன்றைய அறிவியல் பேரணியில் பேசினேன்.
தொடர்ந்து பேசியவர்களும் இதை வன்மையாகக்
கண்டித்தார்கள்.
இது உண்மையல்ல. ஒருவேளை வட இந்திய
மாநிலங்களில் குறைந்து கொண்டு இருக்கலாம்.
ஆனால் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு
வருகிறது. பகுத்தறிவு பேசிய போலி நாத்திக
திமுக கூட்டத்தில் ஒவ்வொரு பயலும் ஜோசியம்
பார்க்கிறான்.
திராவிட இந்துத்துவத்தை அழிக்காமல்
ஜோசியத்தை ஒழிக்க முடியாது.
கலைஞரின் மஞ்சள் துண்டும், ராஜாத்தி அம்மாளின்
யாகமும் கோடானு கோடி மக்களை சென்று
அடைந்துள்ளது. அவர்கள் எல்லோருமே
ஜோசியத்தின் இரும்புப் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.
இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக