புதன், 29 மே, 2019

 பொதுத் தொகுதியில் இருந்து ஒரு தலித் எம்பி!
மார்க்சிஸ்டுகளை எதிர்த்து வெற்றி பெற்ற
கேரளத்தின் தலித் பெண் எம் பி ரம்யா ஹரிதாஸ்!
---------------------------------------------------------------------
1) கேரளத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
2) இந்த இருபதும் பொதுத் தொகுதிகளே. கேரளத்தில்
தலித் தொகுதிகள் (SC, ST) கிடையாது.
3) தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பலருக்கும்
இந்த உண்மை தெரியாது. ஆனால் கேரள மக்கள்
அறிவார்கள்.
4) கேரள மாநிலம் அமைக்கப் பட்டதில் இருந்து இதுவரை
இரண்டே இரண்டு தலித் எம்பிக்கள் மட்டுமே
தேர்வாகி உள்ளனர். அதாவது பொதுத்தொகுதியில்
இருந்து தேர்வானவர்கள் இதுவரை இரண்டு பேர்தான்.
5) 1971ல் அடூர் தொகுதியில் இருந்து கம்யூனிஸ்ட்
வேட்பாளர் (CPI) பார்கவி தங்கப்பன் எம்பி ஆனார்.
6) அதன் பிறகு, இத்தேர்தலில் (2019) ஆலத்தூர் தொகுதியில்
இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் (வயது 31)
எம்பி ஆகி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ 22000 மட்டுமே.
இவர் ஆதிவாசி (Tribe) சமூகப் பெண் ஆவார்.
7) இவர் இசையில் பட்டதாரி ஆவார். (Bachelor of music).
8) இவர் மீது கடும் அவதூறுகளை மார்க்சிஸ்ட்
வேட்பாளர் வீசினார். பொதுவாழ்வுக்கு வரும் பெண்கள்
மீது ஆணாதிக்க வெறி பிடித்த கயவர்கள் என்ன பழி
சுமத்துவார்களோ அதையே சுமத்தினார் கேரளா இடது
முன்னணி கன்வீனர். இந்த அவதூறுகள் மார்க்சிஸ்ட்
வேட்பாளருக்கு எதிராகத் திரும்பின.
9) வாக்கு விவரம்:
ரம்யா காங் = 5,33,815
பி கே  பிஜு  மார்க்சிஸ்ட் = 2,74,847
258968 வாக்கு வித்தியாசத்தில் ரம்யா வெற்றி!
10) ரம்யாவின் பெற்றோர்கள் தினக்கூலிகள்.

11) தமிழ்நாட்டில் இப்படி ஒரு வேட்பாளர் நிற்க இயலுமா?
நின்றால் ஜெயிக்க இயலுமா? முடியாது. ஏனெனில்
தமிழ்நாடு வாரிசு அரசியலின் மண்! இங்கு வாரிசுகள்
மட்டுமே தேர்தலில் நிற்கவே முடியும்!
****************************************************    

மேலாண்மை வாரியத் தீர்ப்பை ஏற்க மாட்டோம்!  மறுக்கும்
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மாட்டோம் என்கிறது
கர்நாடக காங்கிரஸ் அரசு! மு க ஸ்டாலின் தலையிட வேண்டும்.
   
டாக்டர் கிருஷ்ணசாமியை
அடிக்கப் போவதுபோல
கடும் கோபத்துடன் ஒரு விரலை உயர்த்தி
நிற்கும் ஊடக இளைஞன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக