செவ்வாய், 13 ஜனவரி, 2015

1948இல் தோழர் பி டி  ரணதிவே  பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியின் 
பொதுச்செயலளராக இருந்தபோது, இந்தியாவில் ஆயுதப் 
புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். தெலுங்கானா உள்ளிட்ட 
நாட்டின் பல்வேறு இடங்களில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. 
இது கடுமையாக ஒடுக்கப் பட்டது. பின்னர், மாவோவின் 
பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேனே என்று ரணதிவே 
சுய விமர்சனம் செய்து கொண்டார்.

அந்தக் காலக் கட்டத்தில், 
RIGHT PATH, RIGHT PATH
RANADIVE PATH RIGHT PATH 

என்று கம்யூனிஸ்ட் ஊர்வலங்களில் தோழர்கள் 
முழக்கங்கள் எழுப்புவது உண்டு. இந்தப் பழக்கம் நீண்ட காலம் 
நீடித்ததை, 1975 காலக் கட்டத்தில் கூட இந்த முழக்கங்கள் 
ஒலித்ததை நான் அறிவேன். அந்த முழக்கங்களை 
நானும் முழங்கினேன் என்பதை  கண்களில் கசியும் 
நீருடன் இந்த எளியவன் இன்றும் நினவு கூர்கிறான்.
..................பி இளங்கோ சுப்பிரமணியன்................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக