பத்ரியின் கருத்துக்கு எதிர்வினை
-------------------------------------------------------------
திமுக என்பது கிட்டத்தட்ட ஒரு ஒற்றைக்குரலில்
பேசும் கட்சி. அதாவது, monolithic party. ஆனால், திமுக
ஆதரவாளர் குழாம் என்பது ஒற்றைக்குரலில் பேசும்
அமைப்பு அல்ல. அப்படிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
பல்வேறு முகாம்களில் இருந்தும், பல்வேறு தரப்புகளில்
இருந்தும் பலர் திமுகவின் நிலைபாடுகளை
ஆதரிக்கக் கூடும். அவர்களுக்கு இடையில் ஓர்
ஒற்றுமை நிலவ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.
மார்க்சியக் கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய,
ஏற்றுக் கொள்ளக் கூடிய பல்வேறு தரப்பினரும்
ஓர் அணியாக, ஒரே அமைப்பில் திரள வேண்டிய
அவசியம் இல்லை அல்லவா! அதுபோலத்தான் இதுவும்.
நிற்க. திரு மனுஷ்ய புத்திரன் சிறந்தவொரு இசுலாமிய
அன்பர். ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்க்க வேண்டும் என்பதுதான்
அவருடைய ஒரே நிகழ்ச்சி நிரல், அதாவது அஜெண்டா.
எனவே, ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்ப்பதாகக் கருதிக்
கொண்டு, அவர் பெருமாள் முருகனை ஆதரிக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ஐயும் கருவறுக்க வேண்டும், பெருமாள்
முருகன் போன்ற குட்டி முதலாளித்துவக் கழிசடைகளையும்
கருவறுக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு.
என்னுடைய நிலைபாட்டை ஏற்றுத்தான் ஆக வேண்டும்
என்று மனுஷ்ய புத்திரனுக்கு எவ்வித அவசியமும் இல்லை.
அதேபோல், மனுஷ்ய புத்திரனோடு ஐக்கியப்பட வேண்டும்
என்று எனக்கு எந்த அவசியமும் இல்லை.
..................வீரை பி இளஞ்சேட்சென்னி............
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக