புதன், 14 ஜனவரி, 2015

புத்தாண்டின் தொடக்கம் தை என்பதை 
மறுக்கும் ஆர்.எஸ்.எஸ். கயமையும் 
அதற்கு ஒத்து ஊதும் துரோகிகளும்!
------------------------------------------------------------- 
ஆண்டின் தொடக்கம் தை மாதமே என்பது 
தமிழ் அறிஞர்களின் முடிவு. இதை கலைஞர், 
தாம் முதல்வராக இருந்தபோது, 2008இல் 
தமிழக அரசின் அறிவிப்பாக வெளியிட்டார்.
ஆண்டின் தொடக்கம் தை என்பது கலைஞரின் 
கண்டுபிடிப்பு அல்ல. அது தமிழ் இலக்கியச் 
சான்றுகளின் அடிப்படையில் தமிழ் அறிஞர்கள் 
வந்தடைந்த முடிவு.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கப் பரிவாரங்கள்
இதை மறுக்கின்றன. அவை சித்திரையே ஆண்டின் தொடக்கம் 
என்று பொய் உரைக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கயமைத்தனமான பொய்களை 
மானம் உள்ள எவரும் ஏற்க முடியாது.

தமிழ் ஆண்டுகளாக 60 பெயர்கள் தமிழனின் 
மூலையில் திணிக்கப் பட்டன. இவற்றுள் ஒன்று கூட 
தமிழ்ப் பெயர்கள் இல்லை. யாவும் சமஸ்கிருதப்
பெயர்களே.

பிரபவ, விபவ, சுக்கில, பிரம்மோதூத, பிரஜோத்பதி ,
ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, .................................
................................. குரோதன, அட்சய என்று முடியும் 
இந்த 60 மாதங்களும் தமிழ் மாதங்கள் அல்ல.
பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியால் தமிழர்களின்  
மூளையில் கழித்த சம்ஸ்கிருத மலமே இந்த 
அறுபது பெயர்களும். 

எனவே, சம்ஸ்கிருத மயமாக்கலை எதிர்ப்போம்!
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கயமையை முறியடிப்போம்.
திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுவோம்!
ஆண்டின் தொடக்கம் தை என்பதை அட்டியின்றி ஏற்றுக் 
கொள்ளுவோம்.

இதை ஏற்க மறுப்பவன் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியே!

**************************************************************
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக