வியாழன், 8 ஜனவரி, 2015

லெட்டர் பேடு இரண்டாகக் கிழிந்தது!
நாம் தமிழர் கட்சி இரண்டாக உடைந்தது!
------------------------------------------------------------------
புலவர் வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------- 

கட்சியில் இருந்ததே மொத்தம் இரண்டு தலைவர்கள்தான்.
ஒருவர் சீமான்; மற்றொருவர் அய்யநாதன்.
எனவே  இரண்டாக உடைந்தது.
மூன்று தலைவர்கள் இருந்தால், மூன்றாக 
உடைந்து இருக்கும்.

பிளவுக்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.
சாதி ஒரு காரணம் என்று  சொல்லப் படுகிறது.
சீமான் நாடார், அய்யநாதன் தேவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பணத் தகராறும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப் 
படுகிறது.  புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உலகெங்கும் 
பரவி இருக்கிறார்கள். ஈழ விடுதலைக்காக அவர்கள் 
புலி ஆதரவாளர்களுக்குப் பணம் அனுப்புகிறார்கள்.கோடி கோடியாகக் கொட்டும் இந்தப் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் 
ஏற்பட்ட தகராறுதான் கட்சி உடைந்ததற்குக் காரணம் 
என்கிறார் பேர் சொல்ல விரும்பாத ஒரு கட்சி அனுதாபி.

சினிமாத் துறையில் இருந்த சீமான், பட வாய்ப்பு 
இல்லாமல் போனதால் அரசியலில் குதித்தார்.
ஆடம்பரமாகச் செலவு செய்வது, ஊதாரித்தனமாகச் 
செலவு செய்வது ஆகிய பழக்கங்கள், சினிமாத் 
துறையில் இருந்ததால் அவரைச் சுலபத்தில் 
தொற்றிக் கொண்டன. கற்பழிப்பு வழக்கு ஒன்று 
அவர் தலை மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டு 
இருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுபட,
பெரும்பணம் அவருக்குத் தேவைப் பட்டது. 

கடந்த ஆண்டுதான் அவர் திருமணம் செய்து கொண்டார். 
திருமணத்துக்குப் பின்னர் அவரது வாழ்க்கை, மென்மேலும் 
ஆடம்பரம் நிறைந்ததாக மாறிப்போனது.

இதனால் அவர் பெரிதினும் பெரிதுக்கு ஆசைப்பட்டார்,
முழுப்பங்கையும் ( LION's SHARE ) அபகரிக்க விரும்பினார் 
என்று கூறப் படுகிறது. இதை அய்யநாதன் விரும்பாதது 
இயற்கையே. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அய்யநாதன் 
லெட்டர் பேடை இரண்டாகக் கிழித்து விட்டார்  என்கிறது 
தகவல் அறிந்த வட்டாரம்.

அய்யநாதன் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச ஊடகப் 
பொறுப்பாளர் என்ற பதவியில் இருந்தார். தற்போது,
சீமானைக் கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம் 
இந்த சர்வதேசப் பதவியைத் தக்க வைத்துக் 
கொண்டு உள்ளார். இந்தப் பதவிதானே அவருக்கு அமுதசுரபி!

விடுதலையை நேசிக்கும் அப்பாவித் தமிழ்  இளைஞர்கள் 
இவர்களை எல்லாம் நம்பி, இவர்கள் பின்னால் போய்க் 
கொண்டு இருப்பது ஒரு முடிவுக்கு வரும் என்பதே 
இந்தப் பிளவினால் விளைந்த நல்ல செய்தி!

          கண்டதைச் சொல்லுகிறேன்--உங்கள் 
          கதையைச் சொல்லுகிறேன் 
          இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்குக் 
          காரணம் உண்டென்றால் 
          அவமானம் எனக்குண்டோ?
                    --ஜெயகாந்தன்          

*************************************************************8    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக