புதன், 27 ஜனவரி, 2021

 ஆனந்தும் மன்மோகன்சிங்கும்!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

10 ஆண்டுகளுக்கு முன்பு.

டாக்டர் மன்மோகன்சிங் இந்தியாவின் பிரதமர்.

பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி!


ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார்.

அவரை கெளரவிக்க ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் 

மன்மோகன் சிங். விருந்து நடைபெறும் நாள் 7 நவம்பர் 2010. 

(அன்றுதான் நவம்பர் புரட்சி நாள்) 


இந்த விருந்துக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து

ஒருவரை அழைக்க வேண்டும். யாரை அழைப்பது?

கொஞ்சமும் தயங்காமல் ஆனந்தை அழைப்பதென்று 

முடிவெடுத்தார் மன்மோகன்சிங். 


கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதால் மன்மோகன்சிங் 

ஆனந்தை அழைத்தாரா? அல்லது இதுபோன்ற அமெரிக்க 

அதிபர் பங்கு கொள்ளும் விருந்தில் IQ அதிகமான ஒருவர் 

பங்கேற்பது நல்லது என்று மன்மோகன்சிக் நினைத்தாரோ 

என்னவோ! 


ஆக இந்தியாவின் ஒட்டு மொத்த விளையாட்டு வீரர்கள் 

மத்தியில் ஒரே ஒருவர் கலங்கரை விளக்கமாகப் 

பிரகாசித்தார்; அவர்தான் ஆனந்த். 


ஆனந்துக்கு பாரதரத்னா வழங்கு என்று  மொத்த 

இந்தியாவிலும் குரல் கொடுப்பது நியூட்டன் அறிவியல் 

மன்றம் மட்டுமே.

************************************************** 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக