வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?
விலகுவதற்கான நியாயங்கள் என்னென்ன?
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
இன்றைய தினத்தில் உலகின் மக்கள்தொகை = 783 கோடி.
இந்த 783 கோடியில் பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள்,
ஏனைய குழந்தைகள், செயலற்ற முதியோர், தற்குறிகள்
என்று பலரையும் கழித்தால், மீதி குறைந்தது 400 கோடி ஆகும்.
மொபைல் போனில் சமூக வலைத்தளங்களைப்
பார்ப்போர் = 326 கோடி. இது முன்னர்க் கூறிய
400 கோடியில் 81 சதவீதம்.
இந்தியாவில் வாட்சப்புக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள்
அதிகம். நம்பத்தக்க ஒரு புள்ளி விவரப்படி இது 34 கோடி ஆகும்.
(செப்டம்பர் 2019ல் MAU = 340 மில்லியன்; அதாவது 34 கோடி.
MAU = Monthly Active Users).
சிக்னலின் வாடிக்கையாளர்கள் உலக அளவிலேயே
1 கோடிதான். இந்தியாவில் எவ்வளவு? சில நூறு பேர்.
அவ்வளவுதான். சிக்னல் என்ற ஒன்று இருப்பதே
தமிழ் வாசகர்களுக்கு நேற்று நான் எழுதிய கட்டுரையைப்
படித்த பின்னர்தான் தெரியும்.
அடுத்து டெலிகிராமுக்கு இந்தியாவில் வாட்சப்பை விடக்
குறைவான வாடிக்கையாளர்களே உண்டு. உலக அளவில்
20 கோடி. இந்தியாவில் 3 கோடி இருக்கும். செப்டம்பர் 2019ல்
ஆண்டிராய்டில் மட்டும் டெலிகிராமின் MAU எண்ணிக்கை
2.9 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்.
வாட்சப் இந்தியாவில் 34 கோடி (உலகில் 200 கோடி).
டெலிகிராம் இந்தியாவில் 3 கோடி. (உலகில் 20 கோடி).
சிக்னல் இந்தியாவில் 1000 (approx). (உலகில் 1 கோடி).
ரஷ்யப் பின்னணியோடு கூடிய டெலிகிராமில்
end to end encryption ஆனது by defaultஆக இல்லை என்பது
அதன் மீதான குற்றச்சாட்டு.
வாட்சப்பில் இருந்து ஏன் விலக வேண்டும்?
------------------------------------------------------------------
1) Messaging supremacy என்பதில் நம்பர் 1 ஆக இருப்பது
வாட்சப். உலகில் 200 கோடி வாடிக்கையாளர்களைக்
கொண்டுள்ள இந்த ஏகபோகம் தகர்க்கப் பட வேண்டும்.
2) Security features என்னும் விஷயத்தில் பல்வேறு
நிறுவனங்களுக்கு இடையே மெல்லிய வேறுபாடுதான்
உண்டே தவிர பாரதூரமான வேறுபாடு கிடையாது.
எனவே எந்த நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதைத்
தீர்மானிப்பதில் Security featuresஆனது deciding factorஆக
இருக்க முடியாது. அப்படியே Security என்று எடுத்துக்
கொண்டால், வாட்சப்பை விட சிக்னல் ஆயிரம் மடங்கு
மேலானது.
3) பின் எதுதான் deciding factor? இந்தியாவைப் பொறுத்த
மட்டில், messaging இண்டஸ்டிரியை வாட்சப்தான்
ஏகபோகமாக வைத்துள்ளது (WhatsApp has monopolised).
34 கோடி வாடிக்கையாளர்களை வாட்சப் பிடித்து
வைத்துள்ளது. இது இந்தியாவின் சுதேசியான இளம்
நிறுவனங்களின் எதிர்காலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக
விளங்குகிறது.
Paytm என்ற நிறுவனத்தைப் பற்றிச் சிலர் கேள்விப்பட்டு
இருக்கலாம். அது ஓர் இந்திய நிறுவனம் என்ற
உண்மை கூட நம் நாட்டில் பலருக்குத் தெரியாது.
Paytm 2010 ஆகஸ்டில் தொடங்கப் பட்டது. இதன் Founder & CEO
இந்தியரான விஜய் சேகர் சர்மா.இதன் உபயோகிப்பாளர்கள்
10 கோடியைத் தாண்டி விட்டனர். Paytm Payments Bank என்றும்
Paytm Mall என்றும் அண்மை ஆண்டுகளில் சேவை
விரிவாக்கம் செய்தது இந்நிறுவனம்.
UPI paymentsஐ மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது
Paytmக்கு அனுமதி வழங்கி உள்ளது. எனவே UPI payment
சேவையை Paytm நடத்தி வருகிறது.
ஜூலை 2017ல் வாட்சப் நிறுவனம் UPI Payments சேவையை
இந்தியாவில் தொடங்கியது. இந்திய அரசின் NPCI இதற்கு
அனுமதி வழங்கியது. தற்போது நவம்பர் 2020ல்
UPI முறையில் 2 கோடி வாடிக்கையாளர்கள் வரை
வாட்சப் நிறுவனம் சேர்த்துக் கொள்ளலாம் என்று
சேவை விரிவாக்கத்துக்கும் NPCI அனுமதித்துள்ளது.
(NPCI = National Payments Corporation of India;
UPI = Unified Payments Interface).
இப்போது ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். UPI முறையில்
பணப் பரிமாற்றம் செய்வதை ஏற்கனவே இந்திய
நிறுவனமான Paytm செய்து வரும்போது, வாட்சப்
நிறுவனமும் பணப்பரிமாற்றம் செய்யலாம் என்றால்
பாதிப்பு யாருக்கு? நிச்சயம் இந்திய நிறுவனத்துக்குத்தான்.
அதனால்தான் Paytmன் CEO விஜய் சேகர் சர்மா வாட்சப்புக்கு
எதிரான நிலை எடுக்கிறார்.
வாட்சப் போன்ற ஏகாதிபத்திய நிறுவனமானது ஒவ்வொரு
இண்டஸ்டிரியாக ஏகபோகம் செய்ய முற்படுமானால்,
அந்த இண்டஸ்டிரியில் உள்ள இந்திய நிறுவனங்கள்
திவால் ஆகும். எனவே ஏகபோகத்தை-- யாருடைய
ஏகபோகத்தையும்-- அனுமதிக்காக கூடாது.
எனவேதான் வாட்சப்பில் இருந்து வெளியேறுமாறு
கேட்டுக் கொள்கிறோம். தனி ஒருவராக வெளியேறிப்
பயனில்லை. கூட்டம் கூட்டமாக குரூப் குரூப்பாக
வெளியேற வேண்டும். அட்மின்கள் முடிவெடுத்து
ஒரு குரூப்பில் இருந்த அனைவரும் அப்படியே
கூண்டோடு சிக்னலுக்குச் செல்ல வேண்டும்.
***************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக