சனி, 9 ஜனவரி, 2021

இந்தியாவில் 3ஜி படுதோல்வி!

அன்றைய அமைச்சர் கபில் சிபல் ஒப்புதல் வாக்குமூலம்!

இதிலிருந்து ரவிசங்கர் பிரசாத் பாடம் கற்க வேண்டாமா?

3ஜி போல 5ஜியும் படுதோல்வி அடைய வேண்டுமா? 

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------

2010 மே மாதம் இந்தியாவில் 3g அலைக்கற்றைக்கான 

ஏலம் நடந்தது. ஏலத்தை நடத்தியவர் அன்றைய 

தொலை தொடர்பு அமைச்சர். யார் அவர்?


இக்கட்டுரையைப் படிப்பவர்கள் பதிலளிக்க வேண்டும்.

நீங்கள் பதிலளிக்க உதவியாக ஒரு குறிப்பு (clue)).

பின் வரும் ஆப்ஷன்களில் சரியானதை டிக் செய்யுங்கள்.


அ) தயாநிதி மாறன் 

ஆ) கபில் சிபல்  

இ) ராம்விலாஸ் பாஸ்வான்

ஈ) இவர்களில் எவரும் இல்லை.


மே 2010ல் நடந்த அந்த ஏலம் 34 நாட்கள் நடைபெற்றது.

பேராசை பிடித்த டிராய் (TRAI) ரூ 30,000 கோடியை 

BASE PRICEஆக நிர்ணயித்து இருந்தது. இண்டஸ்டிரியில் 

உள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏலத்தில் பங்கேற்றன. 

இனி அடுத்த ஏலம் எப்போது நடக்குமோ, அலைக்கற்றை 

கிடைக்குமோ என்றெல்லாம் கவலையில் இருந்தன 

நிறுவனங்கள். எனவே  என்ன விலை ஆனாலும் ஏலம் எடுத்து 

விடவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு எல்லா நிறுவனங்களும் 

ஆளாகி இருந்தன.


இறுதியில் இந்த ஏலம் அரசுக்கு ரூ 67,000 கோடி வருவாயை 

அள்ளிக் கொடுத்தது. எதிர்பார்த்தது ரூ 30,000 கோடிதான்.

ஆனால் கிடைத்தது இரண்டு மடங்கை விட அதிகம்; 

ரூ 67,000 கோடி.  


என்றாலும், 3g ஏலத்தில் PAN INDIA 3g licenseஐ யாரும் 

எடுக்கவில்லை  அன்றைக்கு market leader ஏர்டெல்தான். 

ஆனால் ஏர்டெல்  PAN INDIA எனப்படும் இந்தியா 

முழுமைக்குமான உரிமத்தைப் பெறவில்லை.  அதாவது 

PAN INDIA என்றால், இந்தியாவில் மொத்தமுள்ள  

22 LSAக்களிலும்  உரிமம் வாங்க வேண்டும். 

அப்போதுதான் இந்தியா முழுவதும் சேவை வழங்க முடியும்.


LSA = Licensed Service Area. ஒரு LSA என்றால் ஒரு மாநிலம் 

என்று புரிந்து கொள்ளுங்கள். ஏன் ஒரு நிறுவனத்தால் கூட 

PAN INDIA Licenseஐ எடுக்க முடியவில்லை?


வாய்க்கரிசி இல்லாததுதான் காரணம். அலைக்கற்றையின்  

விலை தாங்க முடியாத அநியாய விலை என்னும்போது 

எப்படி 22 LSAகளுக்கும் சேர்த்து உரிமம் பெற முடியும்?      

ஏர்டெல் நிறுவனம் market leaderதான். ஆனால் Market leader 

என்பதற்காக கத்தியை முழுங்க ஏர்டெல் தயாராக இல்லை.


சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு ஏலம் நடந்தது.

3ஜியை விட அதிகத் திறன் உடைய அலைக்கற்றை இது.

இதை 4ஜி என்று ஊடகத்தினர் அழைத்தனர். ஆனால் இது 

4ஜி அல்ல. இதன் பெயர் BWA Spectrum. 3.5g என்று வைத்துக் 

கொள்ளலாம். BWA = Broadband Wireless Access.


தொலைதொடர்புத் துறையின் தொழில்நுட்பப் 

பணியாளர்கள் (technical personnel) இதை வைமேக்ஸ் 

ஸ்பெக்ட்ரம் (WiMAX Spectrum) என்பார்கள். WiMAX என்று 

சொல்லி விட்டு நான் போக முடியுமா? முடியாது. 

WiMAX என்றால் என்ன என்று விளக்க வேண்டும்.

இதை விளக்க இயலாது. எல்லோரும் புரிந்து கொள்ள 

இயலாது. எனவே அதன் expansionஐ மட்டும் சொல்கிறேன்.

WiMAX = Worldwide Interoperability for Microwave Access.


Interoperability என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

அது தெரியாமல் இக்கட்டுரையை அல்லது இன்றைய 

டெலிகாம் சூழலைப் புரிந்து கொள்ள முடியாது. ஆரம்ப 

காலத்தில் WIRED NETWORKதான் இருந்தது. பின்னாளில் 

WIRELESSக்கு மாறினோம். இப்போது WIRED மற்றும் 

WIRELESS இரண்டும் உள்ளன. இரண்டுக்கும் இடையில் 

ஒரு சுமுகமான ஊடுவினை நடைபெற வேண்டும் அல்லவா?

இந்த ஊடுவினைக்குத் தகுதி படைத்திருப்பதுதான் 

Interoperability. 

(Interoperability என்ற சொல்லுக்குச் சமமான தமிழ்ச்சொல்லை 

"ஊடுவினைத் தகுதி"  என்ற சொல்லை அரை வினாடியில் 

உருவாக்கினேன்). நிற்க.


ஆக, இந்த WiMAX அலைக்கற்றை ஏலத்தின் மூலமாகவும் 

கணிசமாக அரசுக்குப் பணம் கிடைத்தது. 3ஜி மற்றும் 

வைமேக்ஸ் இரண்டும் சேர்த்து ஒரு லட்சம் கோடிக்கு 

மேல் அரசுக்கு வருவாயாகக் கிடைத்தது.


கிடைத்தது என்று கெளரவமாகச் சொல்லி இருக்கிறேன்.

உண்மையில் அடித்துப் பிடுங்கிய தொகை இது. 3ஜி 

அலைக்கற்றைக்கு ரூ 67,000 கோடி என்பது எவ்வளவு 

அசுரத் தனமான தொகை! ஒரு நடுத்தரக் குடும்பத்தில்

பெண்ணுக்கு வரதட்சணையாக அதிக பட்சமாக 

எவ்வளவு கேட்கலாம்? ரூ 5 லட்சம்! அல்லது ரூ 10 லட்சம்!

ஆனால் பணத்தாசை பிடித்த மாப்பிள்ளை வீட்டார் 

ரூ 1 கோடி வரதட்சணையாகக் கேட்டு வாங்கினால் அது 

எவ்வளவு பெரிய கொள்ளை! அதைப்  போன்றதுதான் 

3g ஏலத்தில் மத்திய அரசு அடித்துப் பிடுங்கிய தொகை!


வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் 

கோலோடு நின்றான் இரவு (திருக்குறள்)      

 

இந்தப் பேராசையின் விளைவு என்ன தெரியுமா? எவ்வளவு 

தீய விளைவு அது! அதை நான் சொல்ல விரும்பவில்லை.

இதோ அமைச்சர் கபில் சிபல் சொல்கிறார்; கேளுங்கள்.

"இந்தியாவில் 3g என்பது முற்றிலும் படுதோல்வி"

(3g is an utter failure in India) என்றார் கபில் சிபல்.

(பார்க்க: கபில் சிபல் பேச்சு: 10 ஏப்ரல் 2012; ஆங்கில ஏடுகள்)   


கபில் சிபல் சொன்னது உண்மைதானா? உண்மைதான்.

இந்த இடத்தில் கபில் சிபலின் IQ 119 என்பதைக் கருதுக.

3g என்றால் வீடியோ அழைப்பு (video call). அப்படிச் 

சொல்லித்தான் விளம்பரம் செய்யப் பட்டது. ஆனால் 

இந்தியாவில் 3gயின் வீடியோ அழைப்புக்கு  ஆதரவே இல்லை.

அதாவது அரசு வழங்கிய வீடியோ அழைப்பை மக்கள் 

சீந்தவில்லை. 3g enabled setsஐ மொபைல் போன் தயாரிப்பு

நிறுவனங்கள் தயாரிக்கவும் இல்லை. 


இதற்கு உங்கள் மொபைல் போனில் முன்புறமும் காமிரா 

இருக்க வேண்டும். ஆனால் அக்காலத்தில் ரூ 30,000 

கொடுத்து விலை கூடிய மொபைல் வாங்கியவர்கள்கூட 

3g enabled setஐ வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

முன்புறம் காமிரா இல்லாத மொபைல்களையே 

பலரும் வாங்கினர். வீடியோ அழைப்பை எவரும் சீந்தவில்லை. 


அது மட்டுமல்ல, மே 2010ல் அலைக்கற்றையை அரசிடம் 

இருந்து பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்களால் 

Service roll out செய்ய முடியவில்லை. காரணம் capex 

பேய்த்தனமாக எகிறியதுதான். 


3g ஏலம் 2010 மே மாதம் நடைபெற்றது என்று கூறினேன். 

இதற்கு முன்னதாகவே 2008ஆம் ஆண்டிலேயே BSNLக்கு 

3g அலைக்கற்றை வழங்கப்பட்டு விட்டது. அதாவது ஏலத்தில் 

பங்கெடுக்காமலும் எவ்விதமான upfront payment செலுத்தாமலும்   

BSNLக்கு 3g அலைக்கற்றை  வழங்கப்பட்டது. வழங்கிய 

புண்ணியவான் டாக்டர் மன்மோகன் சிங். 


மும்பை டெல்லியில் மட்டுமே இயங்கும் இன்னொரு அரசு 

நிறுவனமான MTNLக்கும் இதே போல் ஏலத்தில் 

பங்கெடுக்காமலும் upfront payment செலுத்தாமலும்  

3g அலைக்கற்றை வழங்கப் பட்டது. முன்கூட்டியே 3g spectrum 

கிடைத்தும் BSNL நிறுவனத்தால், service roll out செய்ய 

முடியவில்லை.


உண்மையிலேயே PAN INDIA 3g உரிமம் BSNLக்கு மட்டும்தான் 

கிடைத்தது. 22 LSAகளிலும் BSNLக்கு spectrum வழங்கப்பட்டு 

இருந்தது. இருப்பினும் BSNLன் service roll out வெகுவாகத் 

தாமதம்  ஆனது. இதற்கு ஒரு  காரணம் capex எகிறியதுதான். 


இது மட்டுமல்ல, WiMAX ஸ்பெக்ட்ரம் எனப்படும் 3.5 g 

அலைக்கற்றையை BSNL, MTNL ஆகிய இரு அரசுத்துறை 

நிறுவனங்களும் 2012ல் அரசிடம் திருப்பிக் கொடுத்து விட்டன.

WiMAX spectrumம் BSNL, MTNL நிறுவனங்களுக்கு ஏலத்தில் 

பங்கெடுக்காமலும், முன்கூட்டியே பணம் செலுத்தாமலும் 

(without any upfront payment) வழங்கப் பட்டதுதான். இருந்தாலும் 

நிதி நெருக்கடியால் எங்களால் சேவையைத் தொடங்க 

முடியவில்லை என்று WiMAX spectrum ஐ  BSNLம் MTNLம் 

அரசிடம் திருப்பிக் கொடுக்கக் காரணம் என்ன?  Capex 

எகிறியது  ஒரு காரணம். எகிறிய capexஐ சமாளிக்க 

வாய்க்கரிசி இல்லாமல் போனது ஒரு காரணம்.


தனியார்  நிறுவனங்களைப் பொறுத்த மட்டில், அவர்களிடம் 

இருந்த பணமெல்லாம் 3g அலைக்கற்றை வாங்குவதற்குச்

செலவாகி விட்டதால், Service roll outக்குப்  பணம் இல்லாமல் 

கஷ்டப்பட்டன அவை. வங்கிகளில் கடன் கேட்டு கடனாளி 

ஆயின அவை. ஆக  3g ஏலமானது இண்டஸ்டிரியில் உள்ள 

நிறுவனங்களின் கோவணத்தை உருவி விட்டது. ஆக 

service roll out  செய்ய முடியாமல் இண்டஸ்டிரி மொத்தத்திலும் 

ஒரு மந்தநிலை நிலவியது.


இதெல்லாம் 2010 மற்றும் அதன் பின்னரான கதை. தற்போது 

10 ஆண்டுகள் கழித்து, 2021ல் 5g ஏலம் நடக்க இருக்கும் 

நேரத்தில், இண்டஸ்டிரியின் நிலை எப்படி உள்ளது? 

முன்பு 2010 ஏலத்தின்போது கொண்டிருந்த அதே செருக்குற்ற  

மனநிலையில்தான் இப்போதும் அரசு உள்ளது. 


இண்டஸ்டிரியில் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே 

பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. 

அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR duesஐ செலுத்தவே 

வாய்க்கரிசி இல்லாமல் ஏர்டெல்லும்  வோடாபோனும் 

உள்ளன. BSNL பிச்சரிலேயே இல்லை  (Not in the picture). 


ஆக ஒரு suffocating atmosphere இண்டஸ்டிரியில் உள்ளது.

இந்நிலையில் 700 MHz அலைக்கற்றையின் விலையை  

ரூ 6568 கோடி என்பதில் இருந்து பைசா குறைக்க மாட்டேன் 

என்று DoT பிடிவாதம் பிடிப்பது நிலைமையை மேலும் 

மோசமாக்கும். இதே விலை நிலவரத்தில் ஏலம் 

நடத்தினால், பங்கேற்கும் நிறுவனங்கள் 700 MHz 

அலைக்கற்றையை  ஏலத்தில் எடுக்காமல் புறக்கணிக்கும்.

ஏலம் படுதோல்வி அடையும். 2012 ஏலத்தில் கபில் சிபல் 

அவமானப் பட்டதைப்போல் 2021 ஏலத்தில் ரவிசங்கர் 

பிரசாத் அவமானப் படுவார்.


History repeats itself because men repeat their mistakes.....Oscar Wilde.

********************************************************

பின்குறிப்பு:

1) இண்டஸ்டிரியில் புழங்கும் capex, service roll out, interoperability

உள்ளிட்ட சொற்களின் பொருளை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழில் தாலியறுக்க 

முடியாது. ஆங்கிலம் பொருள் உற்பத்தியில் உள்ள மொழி.

தமிழ் உற்பத்தியில் இல்லாத மொழி. இதை உணரவும். 


2) எனது கட்டுரைகளைப் படியுங்கள். UPSE. SSC போட்டித்

தேர்வுகளை எழுதுவோருக்கு உதவும் விதத்தில் 

எனது கட்டுரைகள் உள்ளன. தரவுகள் துல்லியமானவை; 

சரிபார்க்கப் பட்டவை. தமிழில் ஐஏஎஸ் எழுதுவோருக்கு 

இக்கட்டுரைகள் ஒரு வரப்பிரசாதம்.


3) எத்தனை காலம்தான் கமல் ஹாசனின் பிக்பாஸ் 

நடிகைகளையும் சீரியல் நடிகைகளையும் கட்டி 

அழுது கொண்டு இருப்பீர்கள்? 5ஜி குறித்தும்,

அலைக்கற்றை ஏலம் குறித்தும் அறிந்து கொள்வதில் 

எண்ணத்தடை? இப்பொருளில் இவ்வளவு விரிவாகவும் 

ஆழமாகவும் தமிழில் எழுதுவதற்கு என்னை விட்டால் 

நாதி இல்லை. I am writing with authority and aplomb. எனவே 

இக்கட்டுரைகளைப் படியுங்கள். முட்டாள்களாக 

இருப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

*********************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக