செவ்வாய், 5 ஜனவரி, 2021

BSNLம் 4ஜி சேவையும் தாமதமும்!

BSNL நிற்குமா? நிலைக்குமா? வளம் பெறுமா?

------------------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

முன்னாள் மாவட்டச் செயலாளர் 

NFTE BSNL, சென்னை.

--------------------------------------------------------------------------

தொடர்ந்து நஷ்டம்  அடைந்து வரும் பொதுத்துறை 

நிறுவனமான BSNLன் நிதி நிலைமை மற்றும் செயல்பாடு 

குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை 

அமைத்தது. Insipient sicknessஆல்  BSNL அவதிப்படுவதாக 

நிபுணர் குழு அறிக்கை அளித்தது.


டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது,

BSNLன் நிதிநிலைமை குறித்து ஆராய சாம் பித்ரோடா 

தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் 

Insipient sicknessஆல் BSNL அவதிப்படுவதாக அறிக்கை 

அளித்தது.


சாம் பித்ரோடா யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியாது. இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் 

முதன் முதலாக அவரைப் பற்றிக் கேள்விப் படுகிறேன் 

என்று நீங்கள் சொல்வீர்களேயானால், மேற்கொண்டு 

இக்கட்டுரையைப் படிக்கும் தகுதியை நீங்கள் 

இழக்கிறீர்கள். அருள்கூர்ந்து வெளியேறவும்.

டெலிகாம் கமிஷன் என்றால் என்ன என்று உங்களுக்குத் 

தெரியுமா? அதன் தலைவராக சாம் பித்ரோடா 

இருந்தார் என்ற உண்மையாவது உங்களுக்குத் 

தெரியுமா?


ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு 

தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவர்

சாம் பித்ரோடா. பின்னர் டாக்டர் மன்மோகன் சிங் 

பிரதமராக இருந்தபோதும் அவருக்கு இதே துறையின்

ஆலோசகராக இருந்தவர் சாம் பித்ரோடா. 


சாம் பித்ரோடா அன்று கூறியது BSNL நிறுவனம் 

insipient sickness ஆல் அவதிப் படுகிறது என்று. கிட்டத்தட்ட

10 ஆண்டுகள்  கழித்து, மோடி அரசு நியமித்த 

அகமதாபாத் ஐஐஎம் (IIM) நிபுணர் குழுவும் அதே 

insipient sicknessஐயே கூறுகிறது.


Insipient sickness என்றால் ஆரம்ப நிலையில் உள்ள 

நலிவு என்று பொருள்.  சாம் பித்ரோடா காலத்திலும் சரி,

இன்று மோடி காலத்திலும் சரி, இந்த 10 ஆண்டு கால 

இடைவெளியில் BSNLன் நலிவு insipient என்ற 

நிலையிலேயே மாறாமல் ஒரு constantஆக இருக்கிறது 

என்பது குறிப்பிடத் தக்கது.


10 ஆண்டுகள் என்பது நிச்சயமாக ஒரு நீண்ட காலம்தான் 

என்ற போதிலும், இந்த 10 ஆண்டுகளில் BSNLன் நலிவு 

தீவிரம் அடையவில்லை, அதிகரிக்கவில்லை என்பது 

குறிப்பிடத் தக்கது. வேறு நிறுவனம் என்றால், தொடர்ந்த 

10 ஆண்டு கால நலிவில் நிறுவனமே மூழ்கிப் போயிருக்கும்.

அப்படியானால் BSNL பாதிப்படையாமல் இருப்பது எப்படி?


இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது 

BSNL க்கு சொத்துக்கள் அதிகம்; கடன் மிக மிகக்

குறைவு. BSNLன் Assets and Liabilities பற்றிய statementஐ 

படித்துப் பார்த்த எவருக்கும் இந்த உண்மை புலப்படும்.

நீங்கள் படித்து இருக்கிறீர்களா? இல்லை. நான் படித்து 

இருக்கிறேன். எனவே பிரளயமே வந்தாலும் சரி,

BSNLன் மயிரைக் கூடயாராலும் பிடுங்க முடியாது.


ஒரு பொதுத்துறை நிறுவனம் நலிவுறத் தொடங்கி இருந்தால் 

என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் அதற்கென்று 

தெளிவான சட்டங்கள் இருக்கின்றன. இதன்படி நலிவுறத்

தொடங்கியுள்ள ஒரு நிறுவனத்திற்கு பின்வரும் மூன்று 

வழிகளில் ஒன்றின் மூலம் தீர்வு காணப்படும்.

1) நிறுவனத்தை மூடுவது (CLOSURE).

2) இன்னொரு நல்ல நிறுவனத்துடன் இணைப்பது (MERGER)

3) நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்வது (REVIVAL).


இதன்படி, BSNLக்கு என்ன தீர்வை வழங்குவது என்று 

மத்திய அரசு தன்னிடம் உள்ள 50 துறைகளையும் 

கேட்டது. (மத்திய அரசில் சற்றேறக்குறைய 50 துறைகள் 

உள்ளன. உதாரணம்: ரயில்வே, அஞ்சல், பாதுகாப்பு etc).

மூடலாம் என்றும் இணைக்கலாம் என்றும் ஆளாளுக்கு 

ஒரு கருத்தைச் சொன்னார்கள். இவர்களின் கருத்து 

BSNLக்கோ நாட்டுக்கோ சாதகமாக இல்லை. அதே 

நேரத்தில் ஒரே ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. BSNLஐ 

மூடக்கூடாது என்றும் அதைப் புத்தாக்கம் செய்ய

வேண்டும் என்றும் அக்குரல் அதிர்ந்தது. ஒற்றைக் குரல் 

எனினும் காடுகளை அதிர வைத்த சிங்கத்தின் குரல்! 

அது யாருடைய குரல்?


அது பாதுகாப்புத் துறையின் குரல் (Voice of DEFENCE). 

தேசத்தின் ரகசியங்களைப் பாதுகாக்க BSNL வேண்டும். 

BSNL இல்லாமல் போனால், அரசின் ரகசியங்கள் 

தெருவுக்கு வந்து விடும். எனவே  எவ்வளவு செலவானாலும் 

சரி, BSNLஐ புத்தாக்கம் செய்ய வேண்டும்  (BSNL should be 

revived) என்று அடித்துப் பேசியது பாதுகாப்புத்துறை. 


அக்கூற்றின் நியாயத்தை உணர்ந்து  கொண்ட மோடி அரசும் 

BSNLஐ புனருத்தாரணம் செய்ய முடிவு செய்தது. 

(ஜெயகாந்தனின் சொல்வங்கியில் இருந்து:

புனருத்தாரணம் = புத்தாக்கம்= REVIVAL)


அக்டோபர் 23, 2019. BSNLன் வரலாற்றில் இது ஒரு பொன்னாள்.
(BSNL ன் வரலாற்றில் இன்னொரு பொன்னாள் 
இருக்கிறது; அது என்ன என்று தெரியுமா? தெரியாது.
அதுதான் 01.10.2000. அதாவது BSNL உதயமான நாள்).

அக்டோபர் 23க்கு என்ன சிறப்பு? அன்றுதான் BSNLக்கான 
புத்தாக்கத் திட்டம் (Revival plan) அறிவிக்கப் படுகிறது.       

ரூ 69,000 கோடி செலவில் அமைந்த BSNL புத்தாக்கத் 
திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
அளித்தது. புத்தாக்கத் திட்டம் குறித்து நான் முன்பு 
எழுதிய கட்டுரைகளைப் படிக்கவும். BSNL ல் உள்ள 
இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அரசு அறிவித்த 
BSNLன் புத்தாக்கத் திட்டத்தை முழுமனதுடன் 
வரவேற்றன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 
சங்கங்களான SNEA, AIBSNLEA, NFTE, BSNLEU ஆகிய 
இடதுசாரி சங்கங்களும் காங்கிரசின் INTUC சங்கமான 
FNTO, பாஜகவின் BMS சங்கமான BTEF ஆகிய 
சங்கங்களும் புத்தாக்கத் திட்டத்தை வரவேற்றன.
சுருங்கக் கூறின், சுதாகர் ரெட்டி (CPI), சீதாராம் 
யெச்சூரி (CPM) ஆகிய இரு பெருந்தலைவர்களின் 
ஆசி பெற்ற திட்டமே இப்புத்தாக்கம். 
A revival was long awaited and it was a demand by the unions indeed!              

புத்தாக்கத்தின் ஒரு அம்சமாக BSNLக்கு 4ஜி 
அலைக்கற்றையை வழங்குவது என்று அரசு 
முடிவெடுத்தது.
4ஜி அலைக்கற்றையின் விலை = ரூ 20,140 கோடி.
இதற்கான GST வரி .........................= ரூ    3,674 கோடி .
மொத்தம்............................................ = ரூ  23,814 கோடி.    

BSNLக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஆகும் செலவான 
ரூ 23,814 கோடியை அரசே ஏற்றுக் கொள்வது என்றும் 
இந்தத் தொகையை வரும் பட்ஜெட்டில் ஒதுக்குவது 
என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 
மேற்குறித்த ரூ 23,814 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப் 
பட்டது. தொடர்ந்து 2020 ஏப்ரல் முதல் நாளன்று 
வாக்களித்தபடி BSNLக்கு 4ஜி அலைக்கற்றை 
வழங்கப் பட்டது.

அலைக்கற்றை வழங்கப்பட்ட நாளில் இருந்து 
19 மாதங்களுக்குள் BSNL நிறுவனம் 4ஜி சேவையைத் 
தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.
அதாவது அரசு வழங்கிய கெடு எதிர்வரும் 2021  
நவம்பரில் முடிவடைகிறது. நவம்பருக்குள் BSNL 
நிறுவனம் 4ஜி சேயைத் தொடங்க வேண்டும்.
சேவையைத் தொடங்குவதை SERVICE ROLL OUT 
என்று சொல்லுவார்கள். ஒரு தொழிலில் 
புழங்குகிற சொற்களையும் அவற்றின் பொருளையும் 
அறிவார்ந்த வாசகர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள 
வேண்டும். எல்லாவற்றையும் தமிழில் தாலியறுக்க 
முடியாது.  
 

.இந்த இடத்தில் BSNL குறித்த பொய்களையும் 

அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது எங்கள் 

கடமை ஆகிறது. அம்பானியின் தாசர்களும், சுனில் 

மிட்டலின் சம்பள பட்டியலில் இருக்கும் ஒற்றர்களும் 

BSNLஐ இழிவு செய்வதையே குலத் தொழிலாகக் 

கொண்டு செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் 

போலி இடதுசாரிகள். இவர்களில் பெரும்பாலோர் 

லும்பன் வர்க்கத்தினர்; பிம்புகளும் கூட (pimps).


BSNLக்கு அரசு இன்னும் 4ஜி உரிமத்தை வழங்கவில்லை

என்பது ஒரு அவதூறு. இது பொய். அலைக்கற்றையை 

வழங்கும்போதே, UAL உரிமமும் வழங்கப்பட்டு விடுகிறது. 

((UAL = Unified Access License). ஏப்ரல் 1ஆம் தேதியே 

 வழங்கப் பட்டு விட்டன.


Service Roll out தாமதம் ஆகிறது. தாமதமும் இல்லை;

ஒரு ரோமமும் இல்லை. அரசு கொடுத்துள்ள கெடு

தேதி நவம்பர் 2021 வரை இருக்கிறது. அதற்குள் சேவை 

வழங்க முடியாவிட்டால்தான் தாமதம் என்ற பேச்சே 

எழும். தற்போது BSNL நாடு முழுவதும் 57,000 4G SITESஐ

அடையாளம் கண்டு அதற்கான டெண்டர் கோரி உள்ளது.

இந்த டெண்டர் இறுதி செய்யப் பட்டவுடன் சேவை 

தொடங்கி விடும்.


இந்தச் செய்திகள் எல்லாம் இந்தியாவின் தேசிய 

ஆங்கில ஏடுகளில் வந்துள்ளன. குறிப்பாக 

எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டிலும் இன்ன பிற ஏடுகளிலும் 

விலாவரியாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்ப் 

பத்திரிகைகளில் இச்செய்திகள் வருவது கிடையாது.

ஆங்கிலம் தெரியாதவர்களால் ஆங்கில ஏடுகளைப் 

படித்துப் புரிந்து  முடியாத நிலையில், BSNL குறித்து 

அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.


தற்போது வாசகர்களுக்கு BSNL குறித்த அனைத்து 

உண்மைகளும் விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம்.

இதைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்வது 

முற்போக்காளர்களின் கடமை.    

*******************************************************   

      

  


   

      ப் 

                 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக