இணையான தமிழ்ச்சொல் எது?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
vice versa என்ற சொல்லுக்கு இணையான
தமிழ்ச்சொல்லாக "திருப்பினும் அஃதே"
என்று ஏற்கலாம். இதுவே பொருத்தமானது.
Mass becomes energy and vice versa.
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு:-
நிறை ஆற்றல் ஆகிறது; திருப்பினும் அஃதே.
(அல்லது)
நிறை ஆற்றல் ஆகிறது மற்றும் திருப்பினும் அஃதே.
-------------------------------------------------------------------------------
என் எண்ணமும் அதுதான். மற்றும் என்ற சொல்லை
இங்கு பெய்வது தேவையற்றதுதான். ஆனால்
இன்றுள்ள பலருக்கும் புரியாதே! AND என்று
ஆங்கிலத்தில் வந்த பிறகு மற்றும்
என்று தமிழில் வர வேண்டும் என்பது
இங்கு அனைவரின் எதிர்பார்ப்பு.
மொழி என்பது OBJECTIVE விவகாரம்.
அதாவது புறநிலை சார்ந்தது. எனவே
புறநிலையில் உள்ள, மொழியைப்
பேசும் மக்களின் எண்ணங்களையும்
கணக்கில் கொண்டாக வேண்டி உள்ளது.
என்னுடைய SUBJECTIVE THINKINGஐ
(அகநிலைச் சிந்தனை) மட்டும்
செயலுக்குக் கொண்டு வர முடியாது.
----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக