இன்றோடு முடிகிறது இந்தியாவின் ஹைக் மெசஞ்சர்!
வாட்சப்பின் ஏகபோகத்தால் பலியான இந்திய ஹைக்!
வாட்சப்பை ஒழிக்காமல் வாழ்வு இல்லை!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ஏர்டெல்லின் அதிபர் சுனில் மிட்டல். இவரை அநேகமாக
எல்லோருக்கும் தெரியும். யாருக்குத் தெரியாவிட்டாலும்
1) போலி இடதுசாரிகள்
2) போலி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள்
3) போலி நக்சல்பாரிகள்
ஆகிய மேற்கூறிய கயவர் கூட்டத்துக்குத் தெரியும்.
இவர்கள் எல்லாருக்கும் படியளக்கும் முதலாளி
சுனில் மிட்டல்தானே!
BSNLக்கு எதிராக நாளொரு பொய்யும் பொழுதொரு
அவதூறுமாக அவிழ்த்து விட்டு, சுனில் மிட்டலின்
ஏஜெண்டுகளிடம் எச்சில் காசு வாங்கிச் சாப்பிடும்
இந்த ஈனப் பயல்களுக்கு சுனில் மிட்டல்தான் கடவுள்.
இந்த இடத்தில் லட்சுமி மிட்டல் பற்றியும் குறிப்பிட
வேண்டும். சுனில் மிட்டல் வேறு; லட்சுமி மிட்டல் வேறு.
லட்சுமி மிட்டல் இரும்பு எஃகு துறையின் கடவுளாக
இருப்பவர். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர்
பத்ம விபூஷண் விருது பெற்றவர். சுனில் மிட்டலுடன்
லட்சுமி மிட்டலை யாரும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
சுனில் மிட்டல் பத்ம பூஷண் விருது பெற்றவர்.
இந்தக் கட்டுரை கவின் மிட்டல் பற்றியது.
யார் இந்த கவின் மிட்டல்? இவர் சுனில் மிட்டலின் மகன்.
ஹைக் (HIKE) எனப்படும் messenger appஐ இவர் நடத்தி
வந்தார். (கவனிக்கவும்: வந்தார் என்பது past tense).
வாட்சப், டெலிகிராம், சிக்னல் போன்று ஹைக்கும்
ஒரு மெசஞ்சர் சேவையே.
லண்டன் இம்பீரியல் கல்லூரியில் Electrical and Electronics
engineering பிரிவில் M Tech படித்தவர் கவின் மிட்டல். மேலும்
நிர்வாகமேலாண்மையும் படித்துள்ளார். புழுவினும்
இழிந்த நம்மூர் எட்டாங்கிளாஸ் பெயிலாகிப்போன
போலி நக்சல்பாரிப்பயல் துலுக்காணத் தற்குறி இவரைத்
தரகு முதலாளி என்பான். என்னிடம் சொன்னால் புழுத்த
தற்குறி துலுக்காணத்தின் முதுகுத் தொலியை உரிப்பேன்.
இதற்கு முந்திய கட்டுரையில் Paytm நிறுவனர் மற்றும் CEO
விஜய் சேகர் சர்மா பற்றி எழுதி இருந்தேன். இவர்கள்
யாரும் தரகு முதலாளிகள் அல்லர். நிற்க.
அங்கீகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, ஹைக் மெசஞ்சர்
மே 2019ல் 16 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. எனினும்
இன்றுடன் இந்த சேவையை முடித்துக் கொள்வதாக இதன்
அதிபர் கவின் மிட்டல் அறிவித்துள்ளார். ஹைக் மெசஞ்சரை
இழுத்து மூடுகிறார்.
வாட்சப்பின் ஏகபோகத்துக்குப் பலியானது கவின் மிட்டலின்
ஹைக் மெசஞ்சர். இந்தியாவின் சுதேசி நிறுவனங்களுக்கு
வாட்சப் இருக்கும் வரை வாழ்வு இல்லை. எனவே வாட்சப்பின்
ஏகபோகம் தகர்க்கப்பட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக
இந்தியாவில் வாட்சப்பின் பயனர்கள் 34 கோடி என்பதை ஏற்க
இயலாது. இது உடைந்து துண்டு துண்டாகச் சிதற வேண்டும்.
உலக அளவில் வாட்சப்புக்குப் போட்டியாக சிக்னல்
வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. 200 கோடி பயனர்களைக்
கொண்ட வாட்சப்பை 1 கோடி பயனர்களை மட்டுமே
கொண்ட சிக்னல் எதிர்த்து நிற்பது என்பது டேவிட்
கோலியாத் (David and Goliath) கதையை நினைவூட்டுகிறது.
என்றாலும் இந்தச் சண்டையில் கோலியாத்தை (வாட்சப்பை)
டேவிட் வீழ்த்தி விடுவான் என்றே தோன்றுகிறது.
வாட்சப்பில் ஏகபோகத்தைத் தகர்ப்பது உலகளாவிய
ஒரு நிகழ்வு. இதில் வாட்சப்பை போல, அவர்கள்
நாட்டிலேயே உருவான சிக்னலுக்கு எலான் மஸ்க்
போன்றோரின் ஆதரவு உள்ளது. எனவே போட்டியாளர்களில்
சிக்னலுக்கு மற்றவர்களை விட edge உள்ளது. எனவேதான்
வாட்சப்பை எதிர்த்த போரில் உலகளாவிய நிகழ்வு என்ற
அடிப்படையில் சிக்னலை ஆதரிக்கிறோம்.
கவின் மிட்டல் தமது ஹைக் மெசஞ்சரை இழுத்து மூடிவிட்டார்
என்பது வருத்தம் தருகிறது. வாட்சப்பின் ஏகபோகம் அவரைப்
பலி வாங்கி விட்டது. அதற்குப் பதிலாக வேறு ஒரு appஐ
உருவாக்கி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அது நடக்கட்டும்.
வாட்சப்பில் இருந்து வெளியேறாமல் நமக்கு விடிவு இல்லை.
வாட்சப் தனது வாட்டர்லூவைச் சந்திக்கட்டும்!
----------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
போலி இடதுசாரித் தற்குறிகளும் போலி மார்க்சிஸ்டு
லெனினிஸ்டு தற்குறிகளும் வாட்சப்பை வரிந்து கட்டிக்
கொண்டு ஆதரிக்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கைக்கூலிகளான அவர்களின் முதுகுத் தொலியை
உரிக்காமல் அவர்கள் திருந்த மாட்டார்கள்.
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக