ஞாயிறு, 24 ஜனவரி, 2021

அமெரிக்காவில் மின்னணு வாக்கு எந்திரம் இல்லை!

இந்தியாவில் மட்டும் ஏன்?

------------------------------------------------------------ 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மின்னணு 

வாக்குப் பதிவு எந்திரங்களை (EVM) முற்றிலும் 

புறக்கணித்து விட்டார்கள்! கையால் முத்திரை குத்தி 

வாக்களிக்கும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு 

(NON ELECTRONIC MANUEL VOTING) மாறி விட்டார்கள்!

நாம் மட்டும் ஏன் EVMகளைக் கட்டிக் கொண்டு அழ 

வேண்டும்?  


தேர்தல் வரும்போதெல்லாம் இந்தக் கேள்வி கேட்கப் 

படுகிறது. வேறெங்கும் இல்லாமல் தமிழ்நாட்டில் 

மட்டும்தான் இந்தக் கேள்வி பலராலும் கேட்கப் 

படுகிறது. இதற்கு விடையளிப்பது இந்தியத் தேர்தல் 

ஆணையத்தின் கடமை. அறிவியல் கற்றவர்கள், 

தொழில்நுட்ப அறிவு உடையவர்கள் ஆகியோரும் 

சமூகப் பொறுப்புடன் இக்கேள்விக்குப் பதிலளிக்க 

வேண்டும். அந்த அடிப்படையில் நியூட்டன் அறிவியல் 

மன்றம் மேற்கூறிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.    


அமெரிக்காவில் ஒட்டுமொத்தத் தேர்தல் நடைமுறையுமே 

மின்னணுமயம் ஆக உள்ளது (the entire process is electronic).

வேட்புமனு தாக்கல் ஆன்லைன் மூலம் நடக்கிறது.

வேட்புமனு வாபஸ் ஆன்லைன் மூலம் நடக்கிறது.

வாக்காளர்கள் வாக்களிப்பது ஆன்லைன் மூலம்.

வாக்குகள் எண்ணி முடிவுகளை அறிவிப்பது ஆன்லைன் மூலம்.


ஆன் லைன் மூலம் என்றால், இன்டர்நெட் செயல்படுகிறது 

என்று பொருள். வாக்கு எந்திரங்கள் இன்டர்நெட்டுடன் 

இணைக்கப் பட்டுள்ளன. 


இன்டர்நெட்டுடன்  இணைக்கப் பட்டிருப்பது ஹேக் 

செய்வதற்கு இடமளிக்கும். யார் வேண்டுமானாலும் 

எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, 

வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட கணினிகளுக்கு  

EVMகளுக்கு கட்டளை இட  முடியும். தங்களின் விருப்பப்படி 

வாக்குகளை மாற்ற முடியும்..    


இந்தியாவில் இதற்கெல்லாம் அறவே வாய்ப்பில்லை.

இந்தியாவில் தேர்தல் முறை முழுவதும் மின்னணுமயம் 

ஆக்கப் படவில்லை. 

வேட்புமனு தாக்கல், வேட்புமனு வாபஸ் ஆகியவை 

இந்தியாவில் ஆன்லைனில் நடைபெறவில்லை.

வாக்களிப்பது ஆன்லைனில் நடைபெறவில்லை.

வாக்குகளை எண்ணி முடிவுகளைச் சொல்லுவது 

ஆன்லைனில் நடைபெறவில்லை. ஒட்டு மொத்தத் 

தேர்தல் நடைமுறையும் ஆன்லைனில் நடைபெறவில்லை.


வாக்களிப்பது மட்டும் EVM எந்திரங்கள் மூலம் 

நடைபெறுகிறதே தவிர ஆனலைனில் நடைபெறவில்லை.

இங்கு தேர்தலில் பயன்படும் எந்தக் கணினியும் 

இன்டர்நெட்டுடன் இணைக்கப் படவில்லை. இங்கு 

எதுவுமே ஆன்லைனில் இல்லை. இந்தியாவின் EVMகள் 

எந்த நெட்வொர்க்குடனும் இணைக்கப் படவில்லை.


தேர்தல் நடைமுறையைப் பொறுத்து, கணினிகள் இரண்டு 

வகைப்படும்.

1) STAND ALONE கணினிகள் 

2) Network Connected கணினிகள்.


இந்திய EVMகளை STAND ALONE கணினிகள் என்று 

சொல்லுவோம். Stand alone கணினிகள் எந்த  விதமான 

இன்டர்நெட் போன்ற வயர்டு அல்லது வயர்லெஸ் 

(wired or wireless) நெட்வொர்க்குடன் இணைக்கப் படாதவை. 

எனவே அவற்றை யாரும் ஹேக் பண்ண முடியாது. 

எங்கிருந்து கொண்டும் ரிமோட் மூலம் இயக்க முடியாது.  

உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவை இந்திய EVMகளே 

என்பது நிபுணர்களின் கருத்து. 


அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கணினிகள் அனைத்தும் 

நெட்வொர்க்குடன் இணைக்கப் பட்டவை. எனவே அவற்றை 

எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதைத் தடுக்கும் 

பொருட்டு, அந்நாடுகளில் காகித வாக்குச் சீட்டு 

முறைக்குத் திரும்பி உள்ளனர். இந்தியாவில் அதற்கான 

தேவையே இல்லை.


அமெரிக்காவுக்கு என்ன தேவையோ அதை அந்நாடு 

செய்யும். அமெரிக்காவில் EVMகல் வேண்டாம் என்று 

முடிவு செய்து விட்டதாலேயே, நாமும் EVMகளைக் 

கைவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை.


அமெரிக்காக்காரன் தன் பொண்டாட்டியை டைவர்ஸ் 

பண்ணி விட்டான் என்பதாலாயே நீங்களும் உங்கள் 

பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ண வேண்டும் என்று 

எந்த அவசியமும் இல்லை.

***********************************************


  

 



     

     


   .  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக