சனி, 23 ஜனவரி, 2021

 PRECESSION என்றால் என்ன?

தமிழில் இதை எப்படிக் கூறலாம்?

தொல்காப்பியரால் முடியாது! என்னால் முடியும்!

நான் தமிழை வாழ வைக்கிறேன்!

-------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------

வானியலில் (ASTRONOMY) பூமியைப் 

பற்றிக் கொஞ்சம் ஆழமாகப் படித்தால்,

ப்ரிஸிசன் (precession) என்ற சொல் அடிக்கடி 

குறுக்கே வரும்.இச்சொல்லுக்குப் 

பொருள் தெரியாவிட்டாலோ precession 

என்றால் என்ன என்று புரியாவிட்டாலோ 

மேற்கொண்டு நகர முடியாது.


ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு 

இருக்கிறேன். அதில் precession அடிக்கடி 

வருகிரது. அதற்குத் தகுந்த கலைச்சொல் 

தமிழில் வேண்டும். 


எனவே ஒரு சொல்லை உருவாக்கினேன்.

அது முந்து சுழற்சி என்பது.

Precession = முந்து சுழற்சி.


Precession என்பது பூமியின் மூன்றாவது 

இயக்கம். இதைப் பலரும் அறியாதது. ஏன்?

காரணம்: பள்ளியில் சொல்லித் தரவில்லை.

பாடப்புத்தகத்தில் இது இல்லை.


1970ல் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு 

(11 வகுப்பு) பள்ளியை விட்டு வெளியேறினேன்.

11 வகுப்பு வரையிலான அறிவியல் 

மற்றும் பூகோளப் பாடங்களில் Precession 

இல்லை. அதன் பிறகு நாங்களெல்லாம் 

கல்லூரி சென்றோம். Physics (maths உட்பட) 

படித்தோம்.இறுதி வரை படித்தது 

physicsதான். ஆனால் அதில் precession 

பற்றி இல்லை.


Maths major எடுத்தவர்களுக்கு astronomy 

உண்டு. அதில் கண்டிப்பாக precession 

இருக்கும். ஆனால் physics, chemistryல் 

கிடையாது.Upto PG கிடையாது.

அன்றைக்கும் (1970s) கிடையாது; 

இன்றைக்கும் (2021) கிடையாது.


ஆனால் தாலியறுத்த வரலாறு பற்றி 

பக்கம் பக்கமாகப் பாடம் இருக்கும்.

சசிகலா தாலியறுத்த வரலாறு,

பு இ மேனன் ரெண்டாவது 

பொண்டாட்டி கட்டிய வரலாறு, 


கனிமொழியின் கலைச்சேவை 

இவை பற்றிப் பாடம் இருந்தது அல்லவா!

பு இ கருணாநிதியின் n concubines   

(n any number)   

பற்றியெல்லாம் பாடம் உண்டு.

ஆனால் precession பற்றிப் பாடம் 

கிடையாது! 

கனிமொழியின் கலைச்சேவை 

பற்றிப் பாடம்! அதில் compulsory question.  

நல்ல வேளையாக ஜெயலலிதா 

புண்ணியம் கட்டிக் கொண்டார். நிற்க.


மீண்டும் precessionக்கு வருவோம்.

இதன் தமிழாக்கம் என்ன என்று சொன்னேன்?

precession = முந்து சுழற்சி.


Precession என்பது நிரந்தர நிகழ்வு. 

எப்படி பூமியின் rotation நிரந்தரமோ 

எப்படி பூமியின் revolution நிரந்தரமோ 

அதே போல பூமியின் precessionஉம் 

நிரந்தரம்!


எனவே கலைச்சொல் ஆக்கும்போது  

"முந்துசுழற்சி"  என்று வினைத்தொகையாக 

ஆக்கி உள்ளேன்.

நேற்று முந்திய சுழற்சி 

இன்று முந்துகிற சுழற்சி 

நாளை முந்தும் சுழற்சி!


இந்தச் சொல்லை ஆக்க மிகக் குறைவான 

சில நிமிடங்களே ஆனது. இந்தச் சொல் 

எனக்கு நிறைவைத் தருகிறது.

இந்தச் சொல்லை தமிழ் கூறும் 

நல்லுலகிற்கு அர்ப்பணிக்கிறேன்.


கடந்த காலத்தில் எத்தனையோ 

கலைச்சொற்களை உருவாக்கி 

சமூகத்துக்கு அளித்துள்ளேன்.

அதற்கு எத்தகைய காப்புரிமையும் 

நான் கோரவில்லை. தேவையில்லை. 


இந்தச் சொல்லைப்  பயன்படுத்த வேண்டும்.

இதைவிடச் சிறந்த சொல்லை யார் எவராலும் 

உருவாக்க இயலாது. தொல்காப்பியராலும்  

இயலாது.


முந்திய பத்தியின் கடைசி வாக்கியம் 

தொல்காப்பியரை அவமதிக்கிறது என்று 

உனக்குத் தோன்றுகிறதா? ஆம் தோன்றுகிறது 

என்று நீ பதில் சொல்வாய் என்றால்,

உனக்கு SCHZOPHRENIA என்ற மனநோய் 

ஏற்பட்டுள்ளது என்று பொருள். நீ உயிர் 

வாழ வேண்டாம். அருகில் உள்ள ரயில்வே 

ஸ்டேஷனுக்குப் போய், ரயில் வரும்போது 

தலையைக் கொடு.  

      

PRECESSION = முந்துசுழற்சி.


இதை வாசிக்கக் கஷ்டமாக இருந்தால்,

முந்து என்றும் சுழற்சி என்றும் 

இரண்டாகப் பிரிக்கும் விதத்தில் 

"முந்து சுழற்சி" என்று எழுதித்தொலை!    

 

"முந்து சுழற்சி" என்றே எழுது. உனக்கு 

ஏற்றபடி, தமிழுக்கு நெகிழ்ச்சியான புதிய 

இலக்கணத்தைச் சமைப்போம்.

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் 

என்கிறார் தொல்காப்பியர். செய்யுளை விட 

வழக்கிற்கே முதன்மை தருகிறார்.


முந்துசுழற்சி என்று இடைவெளி விடாமல் 

எழுதினால் அது செய்யுள் என்று கொள்க.


முந்து என்றும் சுழற்சி என்றும் பிரித்து 

இரண்டு சொற்களின் கூட்டணி ஆட்சியை 

உண்டாக்கி.

"முந்து சுழற்சி" என்று எழுதினால் 

அது வழக்கு.


இலக்கணப்படி "முந்துசுழற்சி" 

என்பதுதான் சரி.

ஆனால் வழக்கு என்பதில் 

இலக்கணம் அவ்வப்போது அடி வாங்கும்.

அதைப்பற்றிக் கவலை இல்லை; வழக்குதான் 

முக்கியம் என்கிறார் தொல்காப்பியர்.


தொல்காப்பியர் கடவுளுக்குச் சமமானவர்.

நான் அவருடைய முரட்டு பக்தன்.


முந்து சுழற்சி என்ற சொல்லைப் 

பயன்படுத்த மறுக்கும் குட்டி முதலாளியக் 

கபோதிகளை தொல்காப்பியர் வழியில் 

முறியடிப்போம்.

**************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக