நடிகர் கமல் ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியில்
வெல்லப் போவது யார்?
கேம் தியரி மூலம் முடிவை அறியலாம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக் பாஸ் (BIGG BOSS)
என்னும் 100 நாள் தொடர் நிகழ்ச்சியில் யார் வெற்றி
பெறுவார்கள் என்று கேள்விக்கு விடை கேட்டு என்னைச்
சில இளைஞர்கள் அணுகினர்.
விளையாட்டுகளில் வெற்றி யாருக்கு என்பதைக்
கண்டறிய அறிவியலால் கணிதத்தால் முடியும்.
கிரிக்கெட்டில் திடீர் மழை குறுக்கிட்டு ஆட்டம்
நின்று போனாலும், ஆட்டம் முழுமையாக
நடந்திருந்தால் யார் வெற்றி பெற்று இருப்பார்கள்
என்று துல்லியமாக (nearly accurate) கணிக்க இயலும்.
டக்வொர்த் லூயிஸ் (Duckworth-Lewis) முறை இதைச்
செய்கிறது. இது கிரிக்கெட்டில் பயன்படுகிறது.
டக்வொர்த், லூயிஸ் ஆகிய இருவரும் கிரிக்கெட்
ஆட்டக்காரர்கள் அல்லர். அவர்கள் கணித நிபுணர்கள்;
புள்ளியியல் நிபுணர்கள். இங்கிலாந்து நாட்டைச்
சேர்ந்தவர்கள். வெற்றி பெறுவது யார் என்பதைக்
கண்டறிய அவர்கள் வகுத்த கணித விதிகளே டக்வொர்த்
லூயிஸ் முறை என்று பெயர் பெற்றுள்ளது.
டக்வொர்த் லூயிஸ் முறைக்கு மாற்றாக, இந்தியப்
பொறியாளர் வி ஜெயதேவ் கண்டுபிடித்த VJD முறை உள்ளது.
VJD முறையின் தீவிர ஆதரவாளராக சுனில் கவாஸ்கர்
இருந்தார்.அவரின் முயற்சியின் பேரில் இந்தியாவில்
நடைபெற்ற ஒன்றிரண்டு ஆட்டங்களில் இம்முறை
கடைப்பிடிக்கப் பட்டது.
சதுரங்க விளையாட்டில் வீரர்களின் தரத்தை அளவிடும்
முறை ஈலோ கணிப்பு முறை (Elo rating) ஆகும். இதைக்
கண்டுபிடித்தவர் ஆர்ப்பட் ஈலோ (Arpad Elo 1903-1992) என்னும்
இயற்பியல் பேராசிரியர். ஹங்கேரியில் பிறந்து
அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
ஆக கணிதமும் அறிவியலும் இல்லாமல் எந்த
விளையாட்டையும் விளையாட முடியாது. சில
ஆண்டுகளுக்கு முன்பு சயன்ஸ் ரிப்போர்ட்டர்
(Science Reporter) ஆங்கில ஏட்டில் ஈலோ ரேட்டிங் பற்றிய
ஒரு விளக்கக் கட்டுரை வந்ததே, அதை எத்தனை பேர்
படித்தீர்கள்? படிக்கவில்லை! இதுதானே உண்மை!
சயன்ஸ் ரிப்போர்ட்டராவது வாங்குகிறீர்களா?
சயன்ஸ் ரிப்போர்ட்டர் ஏடு CSIR நிறுவனத்தால் நடத்தப்
படுகிறது. CSIR என்றால் தெரியுமா? தெரியாது.
CSIR = Council of Scientific and Industrial Research. இந்தியாவின்
அறிவியல் அமைப்பு இது. சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
என்னும் இந்திய அறிவியல் அறிஞரால் ஜவகர்லால்
நேருவின் ஆசியுடன் உண்டாக்கப் பட்ட அமைப்பு இது.
CSIR அமைப்பின் சார்பாக வெளியிடப்படும்
பத்திரிகையே சயன்ஸ் ரிப்போர்ட்டர். ஆங்கிலத்தில்
வெளிவரும் மாதாந்திர ஏடு இது. தனி இதழ் விலை = ரூ 30.
ஆண்டுச் சந்தா ரூ 300 மட்டுமே.
விலை உயர்ந்த காகிதத்தில் பக்கத்துக்குப் பக்கம்
வண்ணப் படங்களுடன் வெளியாகும் இந்தப் பத்திரிகையின்
ஒரு இதழின் அடக்க விலை குறைந்தது ரூ 300 இருக்கும்.
ரூ 300 செலவில் இதழைத் தயாரித்து விட்டு, அதை
ரூ 30க்கு விற்பது, அதாவது அடக்க விலையை விட
10 மடங்கு குறைவாக விற்பது அரசாங்கத்தால்தான்
முடியும். .சிந்தித்துப் பாருங்கள். இந்த சயன்ஸ்
ரிப்போர்ட்டரை ஒரு தனியார் நிறுவனம் நடத்தினால்
என்ன விலைக்கு விற்கும்? ரூ 30க்கு விற்குமா?
இல்லை.ரூ 400 என்று விலை வைப்பார்கள்.
இந்தப் பத்திரிகையை வாங்குகிறீர்களா? வாங்கிப்
படிக்கிறீர்களா? இல்லை! ரேஷன் கடையில் கருணாநிதியும்
ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு ஒரு கிலோ
அரிசியை கொள்ளை மலிவாக, ஆகக் குறைந்த விலையில்
விற்றார்களே! அதுபோல் அல்லவா CSIR நிறுவனம்
முந்நூறு ரூபாய்ப் பொருளை வெறும் முப்பது ரூபாய்க்கு
விற்கிறது!
இவ்வளவு மலிவாக இருந்தும், சயன்ஸ் ரிப்போர்ட்டர்
இதழை நீங்கள் வாங்கவில்லை என்றாலோ, நூலகங்களில்
சென்று படிக்கவில்லை என்றாலோ, நீங்கள் தேசத் துரோகிகளே!
(உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால்)
ஆங்கிலம் தெரியாத அன்பர்கள் தமிழில் வெளிவரும்
அறிவியல் ஒளி ஏட்டை வாங்கிப் படிக்கவும். நிற்க.
அறிவியல் ஒளி படிக்காதவன் தேசத்துரோகி
மட்டுமல்ல தமிழ்த் துரோகியும் ஆவான்.
நிற்க. மீண்டும் கமல் ஹாசனுக்கு வருவோம்.
நவீன கணிதத்தில் Game Theory என்று ஒரு பிரிவு
உண்டு. விளையாட்டுக்களில், சூதாட்டங்களில்
வெல்வது யார் என்று Game Theory கணித்து விடும்.
ஜான் வான் நியூமேன், லாயிட் ஷேப்லி,, ஜான் நாஷ்
ஆகியோர் கேம் தியரியை வளர்த்தவர்கள். அன்றாட
வாழ்வில் கேம் தியரி பயன்படும்.
சூதாட்டங்களில் கேம் தியரி குறித்து நிறைய ஹாலிவுட்
படங்கள் வந்துள்ளன. அவற்றைப் பாருங்கள்.
சரி, பிக் பாசில் வெல்லப் போவது யார்? நான் பிக் பாஸ்
சீரியலை ஒருநாள் கூடப் பார்த்ததே இல்லை. இதுவே
பிரதான காரணம் (main reason). மேலும் நான் கேம் தியரியை
அறிந்தவனே தவிர, அதில் நிபுணன் அல்லன். இது
secondary reason.
நீங்கள் பத்ரி சேஷாத்ரியை (கிழக்கு பதிப்பக அதிபர்)
அணுகலாம் என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினேன்.
பத்ரி அவர்களால் இக்கேள்விக்கு விடையளிக்க முடியும்.
ஒருவேளை அவரால் முடியாவிட்டாலும், விடையளிக்கக்
கூடியவர்களை அவருக்குத் தெரியும். எனவே அவரால்
ஒரு சரியான வழிகாட்டலைத் தர முடியும்.
*********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக