வெள்ளி, 22 ஜனவரி, 2021

 பூஜ்ய நிழல் நாட்கள்!

---------------------------------

வட அரைக்கோளத்தில், அட்சரேகையின் அளவு +23.5 டிகிரியாக 

இருந்தால் (latitude: +23.5) அது கடக ரேகை ஆகும். தென் அரைக்

கோளத்தில், அட்சரேகையின் அளவு மைனஸ்  23.5 டிகிரியாக 

இருந்தால் (latitude -23.5)  அது மகர ரேகை ஆகும். கடக மகர ரேகைகளுக்கு இடைப்பட்ட இடங்களில், தலைக்கு நேரே 

வானுச்சியில் (zenith) சூரியன்  பிரகாசிக்கும்போது, வெட்ட 

வெளியில் நிறுத்தப்பட்ட ஒரு பொருளின் நிழல் தரையில் 

விழுவதில்லை. ஒரு ஊரில் எல்லா நாட்களிலும் இப்படி 

நிகழ்வதில்லை. ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு 

இரண்டு நாட்கள் இவ்வாறு  நிழல் விழாது.  அந்தந்த இடத்தின் 

அட்ச ரேகையைப் பொறுத்து நிழல் விழாமலிருக்கும் 

தேதிகள் மாறுபடும். உதாரணமாக, 2020ஆம் ஆண்டின் 

நிழல் விழாத நாள் பெங்களூருவில் ஏப்ரல் 24 தேதியிலும், 

புனேயில் (Pune) மே 13 தேதியிலும் ஏற்பட்டுள்ளது. நிழல் 

விழாத இந்த நாட்களே  பூஜ்ய நிழல் நாட்கள் 

(Zero Shadow Days)  என்று அழைக்கப் படுகின்றன. 

இவை மனிதனால் செயற்கையாக உண்டாக்கப்பட இயலாத 

இயற்கையான வானியல் நிகழ்வுகளாகும் (celestial events). 

------------------------------------------------=============

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக