வெள்ளி, 29 ஜனவரி, 2021

மாவோவும் மாபெரும் பாய்ச்சலும்!

---------------------------------------------------- 

மாவோ தவறுகளைச் செய்தார் என்று  கூறுவது அபத்தம்.

மாவோ ப்ளண்டர்களை (blunders) செய்தார் என்பதும் 

அவற்றில் சில himalayan blunders என்பதும் உண்மை.   

Mistake, blunder இரண்டுக்குமே தாலியறுத்த தமிழில் 

தவறு என்றுதான்  சொல்ல முடியும். இதனால் வீணான குழப்பம் நேரும். நிற்க.


நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்தமட்டில் 

திரு  கே ஆர் அதியமான் எழுதி இருப்பது முற்றிலும் 

உண்மைக்குப் புறம்பானது. இரும்பு  என்பது infrastructureல் 

வரும். அன்று சீனாவுக்கு இது பெரிதும் தேவைப்பட்டது.


அதே நேரத்தில் சீனாவில், மக்கள் தங்களிடம் பயன்படுத்தப் 

படாத, பயன்படுத்த இயலாத இரும்பை தங்களின் வீடுகளில் 

வைத்து இருந்தனர். அவற்றை  அரசிடம் ஒப்படைக்குமாறு 

மாவோ கூறினார். எனவே வீடு வீடாக இரும்பு சேகரிக்கும் 

பணி தொடங்கியது. இதை சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி 

தன பொறுப்பில் எடுத்தது. நாடெங்கும் CPC கேடர்கள் 

இரும்பு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் சில இடங்களில் 

அத்துமீறல்கள் (excesses) நடந்திருக்கக் கூடும். விவசாயத்துக்குத் 

தேவையான கருவிகளை (மண்வெட்டி போன்றவை) CPC 

கேடர்கள் பறித்துச் சென்று இருக்கக் கூடும். இதுதான் உண்மை.


Decentralised இரும்பு உற்பத்தி நடைபெற்றதாக அதியமான் 

கூறுவது அப்பட்டமான பொய். இரும்பு சேகரிப்பு நடந்ததே 

தவிர, இரும்பு உற்பத்தி ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் 

நடக்கவில்லை. நடந்தது என்று அதியமான் கூறுவது 

இழிந்த கற்பனை. வார்ப்பு இரும்புக்கும் எஃகுக்கும் மாவோவுக்கு 

வித்தியாசம் தெரியவில்லை என்று அதியமான் கூறுவது 

இழிந்த அவதூறு. 


மாவோ எம்ஜியார் அல்ல. எம்ஜியாருக்கு RDOவுக்கும் DROவுக்கும் 

வித்தியாசம் தெரியாது என்பது அக்காலத்தில் பிரசித்தி பெற்ற 

வாக்கியம். அது உண்மையும் கூட. 

RDO = Revenue Divisional Officer 

DRO = District Revenue Officer.

புழுவினும் இழிந்த ராமச்சந்திர மேனன் ஒரு தற்குறி. ஆனால் 

மாவோ தற்குறி அல்ல. He may be a dictator but not an illiterate person.   

வார்ப்பு இரும்புக்கும் எஃகுக்கும் மாவோவுக்கு வித்தியாசம் 

தெரியாத அளவுக்கு மாவோ ஒரு தற்குறி என்று எழுதுவது 

வெறும் அவதூறு.


வீடு வீடாக இரும்பை சேகரித்து, மையப்படுத்தப்பட்ட 

முறையில் தாலுக்கா கமிட்டியிடமும் ஒப்படைக்கப்பட்டு 

முறையான industrial process மூலம் இரும்பு உற்பத்தி நடைபெற்றது.


மாபெரும் பாய்ச்சல் என்பது மாபெரும் படுதோல்வி 

அடைந்ததன் காரணங்கள் நிறைய உள்ளன. அது 

மாவோவின் himalayan blunder ஆகும். இது பற்றி  

அறிய CPCயின் அதிகார பூர்வ ஆவணங்களையும் இது 

தொடர்பான பிற அறிக்கைகளையும் படிக்க வேண்டும்.

இயற்றில் எதையும் அதியமான் படித்ததே இல்லை.

அதியமான் கூறுகிற மாதிரி இரும்பு உற்பத்தி என்னும் 

ஒற்றைக் காரணியால் மாபெரும் பாய்ச்சல் தோல்வி 

அடையவில்லை. 


திரு அதியமான் மிகவும் மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்.

இணையத்தில் கிடைக்கும் ஏதோ ஒன்றை வாசித்து விட்டு

அதிலிருந்து OPINIONஐ உருவாக்கிக் கொள்பவர். எத்தகைய 

ஆழமும் இல்லாத வெறும் நுனிப்புல்வாத குட்டி முதலாளித்துவ 

பிலின்ஸ்டைன், மாவோவுக்கு எதிராக எழுதுவதாக 

நினைத்துக்கொண்டு, தன்னுடைய முட்டாள்தனமான 

எழுத்தால், மாவோவுக்கு ஆதரவான ஒரு பட்டாளத்தையே 

உருவாக்கி விடுபவர். He is a simpleton and one should ignore him. 

************************************************************ 

இரும்பு உற்பத்திக்கும் இரும்பு சேகரிப்புக்கும் வித்தியாசம் 

தெரியாத முட்டாள்தனத்தால் அதியமான் இப்படியெல்லாம்

எழுதித்  தன் அறியாமையை வெளிப்படுத்துகிறார்.

இரும்பு சேகரிப்பு என்பது decentralisedஆகத்தான் 

நடைபெற முடியும். இரும்பு உற்பத்தி என்பது அப்படி 

decentralisedஆக நடைபெற முடியாது. 


ராமச்சந்திர மேனனின் ரசிகர்கள் மட்டுமே இப்படிச்

சிந்திக்க முடியும். 

  

  


.                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக