வெள்ளி, 15 ஜனவரி, 2021

 எதிர்காலத்தில் உதயநிதி தமிழக முதல்வர் ஆவார்!

அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது!

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

தமிழ்நாட்டின் முதல்வராக ஒருவர் வரவேண்டுமென்றால் 

அவர் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


நிபந்தனை-1: அவர் தமிழராக இருக்கக் கூடாது.

மலையாளியாகவோ தெலுங்கராகவோ கன்னடராகவோ 

இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் முதல்வராக முடியும்.

  

நிபந்தனை-2: அவர் ஒரு கூத்தாடியாக இருக்க வேண்டும்.

இது கண்டிப்பான நிபந்தனையே. தமிழரல்லாத வந்தேறி 

ஒருவர் சினிமாக் கூத்தாடியாகவும் இருக்கும்போதுதான் 

அவரால்  முதல்வராக முடியும்.


ஆக, மேற்கூறிய இந்த இரண்டு நிபந்தனைகளையும்

அழகாக நிறைவேற்றுகிறார் கூத்தாடி உதயநிதி.

முதல் நிபந்தனைப்படி, அவர் தமிழராக இல்லாமல் 

தெலுங்கராக இருக்கிறார். 


இரண்டாம் நிபந்தனைப்படி, உதயநிதி ஒரு சினிமாக் 

கூத்தாடி ஆவார்.  ஆக இரண்டு நிபந்தனைகளையம் 

கூத்தாடி உதயநிதி வெற்றிகரமாக நிறைவேற்றி விடுகிறார்.

அவர் கொடுத்து வைத்தவர்.


அப்படியானால் மு க ஸ்டாலின் முதல்வராக ஆக முடியுமா?

ஒருபோதும் முடியாது. ஸ்டாலின் அவர்கள் இரண்டு 

நிபந்தனைகளில் ஒன்றை மட்டுமே நிறைவேற்றுகிறார்.

அவர் தமிழர் அல்லாதவர்; தெலுங்கர் என்பதால் 

அரைக்கிணறு தாண்டி விடுகிறார். அதாவது முதல் 

நிபந்தனையை எளிதாக நிறைவேற்றி விடுகிறார்.

ஆனால் அவர் சினிமாக் கூத்தாடி அல்ல. இதனால் 

அவரால் இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்ற 

முடியவில்லை. எனவே மீதிக் கிணற்றைத் தாண்ட 

முடியாமல் போய்விடுகிறது அவருக்கு. அவருக்கு நமது 

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.


சரி, அன்புமணி ராமதாசால் என்றாவது  முதல்வர் ஆக 

முடியுமா? ஒருபோதும் முடியாது. என்ன காரணம்?

அன்புமணி சினிமாக் கூத்தாடி அல்ல. இது அவருக்கு 

மிகப்பெரிய disadvantage. இரண்டாவது அவர் பச்சைத் 

தமிழராகவும்  இருக்கிறார். இந்த இரண்டு அம்சங்களும் 

அவருக்கு எதிராக இருக்கும். எனவே அன்புமணியாலும்  

முதல்வராக முடியாது.


அண்ணாத்துரை, கருணாநிதி, ராமச்சந்திர மேனன் 

ஆகிய மூவரும் முதல்வராக இருந்தனர் என்றால்,

அவர்களில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் 

தெலுங்கர்கள். மேனனோ மலையாளி. அடுத்து,

மூவரும் புழுத்த கூத்தாடிகள். கூத்தாடியாகவும் 

இருந்து கொண்டு, தெலுங்கன், மலையாளியாகவும் 

இம்மூவரும் இருந்தமையால் இவர்களால் முதல்வராக 

முடிந்தது.


அதே நேரத்தில் காமராசர் ஏன் உருப்படாமல் போனார்?

அவருக்கு ஏன் எதிர்காலம் இல்லாமல் போனது? காரணம் 

இதுதான்; அவர் பச்சைக் தமிழராக இருந்து தொலைத்தார். 

மேலும் அவர் கூத்தாடியும் அல்ல. பின் எப்படி தமிழ்நாட்டில் 

அவரைப்போன்றோர் முதல்வராக முடியும்?


சிவாஜி கணேசன் கூத்தாடிதான். அவரும் அரசியலில் 

ஈடுபடத்தான் செய்தார். ஆனால் முதல்வராக 

முடியவில்லை. ஏன்? அவர் கூத்தாடியாக இருந்தபோதும் 

பச்சைத் தமிழராக  இருந்து தொலைத்தார். ஒரு தமிழன் 

எப்படி தமிழ்நாட்டில் முதல்வராக முடியும்? சிவாஜி 

கணேசன் மட்டும் ஒரு தெலுங்கராக இருந்து இருந்தால்

தமிழக முதல்வராக அவர்தான் இருந்திருப்பார். 

******************************************************

இப்போது இளமையாக 

இருக்கும் உதயநிதிக்கு தாத்தாவைப் போல  தலை 

வழுக்கையாகும் சமயத்தில் முதல்வர் பதவி தேடிவரும்.


நிரந்தரக் கூத்தாடியாக இருக்க வேண்டும்.

நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் தொலைக்காட்சி

நாடகத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக அரவிந்தனாக 

நடித்ததை நான் அறிவேன். மு க முத்து ஒரு நிரந்தரக் 

கூத்தாடியாக இருந்தார். ஸ்டாலின் அப்படி இல்லை.

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக