ஞாயிறு, 3 ஜனவரி, 2021

 4ஜிக்கான கருவிகளின் டெண்டர் 

கோரியுள்ளது BSNL!

நாடு முழுவதும் 57,000 இடங்களில் (4g sites)

இருந்து BSNLன் 4ஜி செயல்படும்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

இந்தியா முழுவதும் 57,000 இடங்களை 

4g sites என்று அடையாளம் கண்டுள்ளது

BSNL. இந்த 57,000 இடங்களிலும் 

planning, installation முதல் annual maintenance 

வரையிலான அனைத்து வேலைகளையும் 

மேற்கொள்வதற்கு முன்வருமாறு இந்திய 

நிறுவனங்களை BSNL அழைக்கிறது.


NIT formalities என்று அழைக்கப்படும் இந்த 

Notice Inviting e Tender பற்றிய அறிவிப்பை  

டிசம்பர் 2020ல் BSNL வெளியிட்டது.இதன் 

மூலம் 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான 

இறுதிக்கட்ட வேலைகளை BSNL தொடங்கி 

விட்டது என்று அறிந்து .கொள்ளலாம். இது 

procurement of equipmentsக்கான டெண்டர் ஆகும்.   


இந்த டெண்டர் இறுதி செய்யப் படும்போது, 

4ஜி சேவை தொடங்குவதற்கான நாள் 

குறிக்கப் பட்டு விடும்.Once the tender is 

finalised, the service roll out obligations will be

over and the launch date may be determined. 

by BSNL.         


இதில் பங்குபெறும் நிறுவனங்கள் EoI மூலம் 

EoI = Expression of Interest) பதிவு செய்து 

கொள்ள வேண்டும். தங்கள் கருவிகளின், 

தொழில்நுட்பத்தின் திறமையை இதுவரை 

நிரூபித்திராத நிறுவனங்கள் கூட, PoC மூலம்         

(PoC = Proof of Concept) டெண்டரில் 

பங்கேற்கலாம். Proven-ness ஏற்கனவே 

இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

(இங்கு பயன்படுத்தப்படும் proven-ness என்ற 

சொல் ஆங்கில அகராதியில் இல்லை. இது 

அகராதிப்படி அல்லது இலக்கணப்படி 

அமைந்த சொல் அல்ல. ஆனாலும் 

தொழில்நுட்ப வட்டாரங்களில் இச்சொல் 

பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது).     


இந்த டெண்டர் முழுவதும் இந்திய 

நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு 

கிடைக்கும் விதத்தில் உருவாக்கப்  

பட்டுள்ளது.ஆனால் ஏர்டெல் ரிலையன்ஸ் 

ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற பிற 

தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு 

நிறுவனங்களிடம் இப்பணியை 

ஒப்படைத்துள்ளன.      

 

இந்திய நிறுவனங்களுக்கே வாய்ப்பளிக்கும் 

BSNLன் இந்த முடிவால் இரண்டு வெளிநாட்டு 

நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கு பெற 

இயலவில்லை. அந்த இரண்டு நிறுவனங்கள் 

எவை? 


பதில் சொல்ல ஒரு குறிப்பு (clue).

ஒன்று பின்லாந்து நிறுவனம்; இன்னொன்று 

சீன நிறுவனம். இப்போது பதிலளிக்க 

முடிகிறதா? முடியாது. இப்போது 

மட்டுமல்ல எப்போதுமே பதிலளிக்க 

முடியாது. எனவே நானே சொல்லி 

விடுகிறேன்.

ஒன்று: நோக்கியா (பின்லாந்து)

இன்னொன்று: ZTE (சீனா).


டெண்டரின் இன்னொரு ஷரத்தும் 

வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் 

பேரிடியாக அமைந்துள்ளது. அது இதுதான்!

மென்பொருளின் சோர்ஸ் கோட் (source code)

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சொந்தமாக 

இருக்க வேண்டும். அதை எஸ்க்ரோ 

அக்கவுண்டில் (Escrow account) வைத்துப் 

பாதுகாக்க வேண்டும். 


(Escrow account is a third party account 

which holds the asset until the conclusion 

of the specific event or time).


BSNLன் இந்த டெண்டரை Tech Mahindra,

Tejas Networks, Tata Consultancy Services(TCS)

TCIL, ITI ஆகிய இந்திய நிறுவனங்கள் 

வரவேற்றுள்ளன.


இதுதான் BSNLன் 4ஜி நிலவரம். டெண்டர்  

இறுதியாவது விரைவில் நடந்தேறி விடும்.

எனவே கூடிய விரைவில் BSNLன் 4ஜி 

நடைமுறைக்கு வந்து விடும். இந்தக் 

கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பது 

மட்டுமே உண்மை. இதைத்தவிர வேறு 

யார் என்ன சொன்னாலும் அது 

உண்மையல்ல.

------------------------------------------------------

பின்குறிப்பு:

1)நல்ல வளமான ஆங்கிலப் புலமை 

2) Physics அல்லது Electronicsன் BSc

அல்லது MSc பட்டம்,

3) B.E அல்லது B.Tech பட்டம் 

(தொலைதொடர்பு, எலக்ட்ரானிக்ஸ், 

கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் 

ஏதேனும் ஒன்றில்)

மேற்கூறிய பின்னணி உடையவர்களால் 

மட்டுமே இன்றைய நவீன டெலிகாம் 

இண்டஸ்ட்ரி பற்றியும் BSNL பற்றியும் 

எழுதப்படும் கட்டுரைகளைப் புரிந்து 

கொள்ளுவது எளிது. மற்றவர்கள் மிகவும் 

முயன்று கட்டுரையைப் படித்து உரிய 

புரிதலை ஏற்படுத்திக் கொள்ளவும்.                          


என்னுடைய கட்டுரை மேற்கூறிய 

எத்தகைய அறிவியல் பின்னணியும் 

இல்லாத வாசகர்களுக்காக தமிழில் எழுதப் 

படுகிறது. இதன் அருமையை உணர்ந்து 

கொள்வது நல்லது. இல்லையேல்,

I will feel that I am casting pearls before swine.    

****************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக