புதன், 6 ஜனவரி, 2021

மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே!

தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகள்! 

---------------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல்  மன்றம் 

---------------------------------------------------------------------

ஸ்மார்ட் ஜட்டிகள் தயாரிக்கப் படுகின்றன. SMART என்பது "சாமர்த்தியம்" என்னும் ஆங்கில அகராதிப் பொருளைத் 

தரும் சொல் அல்ல. 


SMART = Self Monitoring, Analysis and Reporting Technology 

என்று பொருள்படும்.  ஸ்மார்ட் ஜட்டிகள் விரைவில் 

சந்தைக்கு வந்து விடும். அவற்றில் ஐஓடி எனப்படும் 

(IoT Internet of Things) இன்டர்நெட் செயல்படும்.


ஏற்கனவே  உள்பாவாடைகளில், பிராவில் (bra = மார்க்கச்சு)

ஐஓடி செயல்படுவதைப் பற்றிக் கூறி இருக்கிறேன். 

எலக்ட்ரானிக் துணிகளுக்கான e textile conference 

ஆண்டுதோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கில ஏடுகளில் மட்டும் 

வெளிவருகின்றன. எனவே  ஆங்கிலம் தெரியாதவர்களால் 

இது போன்ற அறிவியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள 

இயலவில்லை. விளைவு அவர்களின் அறியாமை நீடிக்கிறது.

அவர்களின் அந்த அறியாமையைத் தீ வைத்துக் 

கொளுத்தவே அறிவியல் குறித்து தமிழில் எழுதி வருகிறேன்.


இந்த எலக்ட்ரானிக் துணிகள் espionage துறையில் 

பயன்படுகின்றன. Espionage என்பது ஐந்தாம் படை. அதாவது 

உளவு பார்க்கும் துறை. இதில் ஈடுபட்டு உளவு பார்க்கும் 

பெண் ஊழியர்களின் பாதுகாப்பை முன்னிட்டு   

எலக்ட்ரானிக் உள்பாவாடைகள் பயன்படுத்தப் 

படுகின்றன. இங்கு உள்பாவாடை என்பதற்கு in skirt 

என்றும் பொருள் கொள்ளலாம்; inner garment என்றும்

பொருள் கொள்ளலாம், இடத்துக்கு ஏற்றவாறு.


தொடுதிரைத் தொழில் நுட்பமும் (Touch screen technology)

ஸ்மார்ட் போன்களும் எலக்ட்ரானிக்சின் மாபெரும் 

பாய்ச்சலை அடையாளப் படுத்தின. வேறு எந்தத்

துறையை விடவும் தொலைத்தொடர்புத் துறையில்தான் 

எலக்ட்ரானிக்சின் பயன்பாடு பரவலாக உணரப்படுகிறது.


எனவே தொலைதொடர்பு சார்ந்த எலக்ட்ரானிக்சின் 

சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது 

அவசியம். ஐஓடி பற்றியும் 5ஜி பற்றியும் கணிசமாக 

எழுதி உள்ளேன். இதுவரை 10 கட்டுரைகளாவது 

எழுதி இருப்பேன். ஐஓடி பற்றியெல்லாம் தமிழில் 

எழுதுவது நான் மட்டுமே. வாசகர்கள் இவற்றைப் 

படிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.


அடுத்து Virtual Reality பற்றிய, செயற்கை நுண்ணறிவு 

(Artificial Intelligence) பற்றிய, ஐஓடியில் பயன்படும்

LoRa பற்றி (LoRa = Long Range என்னும் தொழில்நுட்பம்) பற்றிய  

பல்வேறு  அடிப்படையான விஷயங்களை அனைவரும் 

அறிந்து கொள்ள வேண்டும். அப்பொருளில் கட்டுரைகள் 

எழுத உள்ளேன். 


ஆனால் தற்போது எழுதப் போவதில்லை. ஒரு அறிவியல் 

பத்திரிகையின் ஆண்டுமலருக்கு மேற்கூறிய பொருளில் 

கட்டுரை எழுத ஒப்புக் கொண்டுள்ளேன். எனவே 

அந்த ஆண்டு மலர் (பெப்ரவரி 2021) வெளியான பிறகே

அக்கட்டுரையை முகநூலில் வெளியிட முடியும்.

அதுவரை வாசகர்கள் பொறுத்திருக்கவும்.

            

அறிவியலைத் தமிழில் சொல்வது எளிதல்ல. தமிழானது 

pre feudal language. அதாவது இனக்குழுச் சமூகம் தோன்றி 

வளர்ந்து நிலைபெற்ற காலத்தைச் சேர்ந்தது தமிழ். அது 

நிலவுடைமைச் சமூக காலத்தில் உச்சத்துக்குச் சென்றது.

அனால் அதன் பிறகான முதலாளிய ஏகாதிபத்திய 

காலத்தில், காலத்தை ஒட்டி தமிழ் வளரவில்லை.

எனவே தமிழ் ஒரு நவீன கால மொழி அல்ல. சரியாகவே 

அதைச் செம்மொழி (classical) என்று அழைக்கிறோம்.

செம்மொழி என்பது தொன்மையானது; நவீனமானது அல்ல.


மேலும் பொருள் உற்பத்தியின் மொழியாக தமிழ் இல்லை. 

இந்தியாவில் பொருள் உற்பத்தியின் மொழி ஆங்கிலமே.

எனவே உற்பத்தியில் இல்லாத தமிழ் மொழியில்  

அறிவியலைச் சொல்வது மிகக் கடினமான பணி.

அதிலும் படிப்பவர்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடியதாக

தொடர்புறுத்தும் மொழியில் (communicable language)

எழுதுவது எளிதல்ல. எனவே அவ்வாறு எழுதப்படும்

கட்டுரைகளைப்  படிப்பது, விவாதிப்பது, ஆதரிப்பது

ஆகியவை நல்ல வாசகர்களின் கடமை.


ஆனால் எனது அறிவியல் கட்டுரைகளுக்கு உரிய 

வரவேற்போ ஆதரவோ முகநூலில் கிட்டுவது இல்லை.

இது மிகவும் துரதிருஷ்ட வசமானது. கட்டுரை எழுதும் 

போதெல்லாம் போதிய ஆதரவு இருக்குமா என்ற கேள்வி 

எழுந்து கொண்டே இருக்கிறது. இது மருந்து சாப்பிடும்போது

குரங்கை நினைக்காதே என்ற கட்டளையைப் போல்  

உள்ளது.     

    

அண்மையில் "வரம்பற்ற குரங்குகள் தேற்றம்' என்ற தலைப்பில் 

ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அதற்கு மிகவும் 

குறைவான அளவு ஆதரவு மட்டுமே கிடைத்தது.

அத்தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் ஒரே ஒரு 

குரங்குதான் இருக்கும். அது வரம்பற்ற நேரத்துக்கு 

(infinite time) டைப் அடிக்கும். காலப்போக்கில் இத்தேற்றத்துக்கு 

இன்னொரு variant வந்தது. அதன்படி, ஒற்றைக்குரங்கு 

அல்ல, வரம்பற்ற குரங்குகள் (infinite monkeys) என்று ஆனது.

வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற டைப் ரைட்டர்களுடன்,

வரம்பற்ற நேரம் டைப் அடித்தால் சேக்ஸ்பியரின் 

ஹாம்லெட்டை ஒழுங்காக அவை டைப் அடித்துக் 

கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதே இத்தேற்றம்.

இது நிகழ்தகவு (probability சார்ந்தது.


குரங்குத் தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனை 

(Infinite monkey theorem) நான் எடுக்கவில்லை. அதன் variantஐயே 

நான் எடுத்துக் கொண்டேன். அதன்படி அத்தேற்றம் 

வரம்பற்ற குரங்குகளின் தேற்றம் (Infinite monkeys theorem) 

என்றானது. ஒரிஜினலுக்கும் அதன் variantக்கும் 

இடையிலான ஒருமை பன்மையைக் கவனிக்கவும்.


ஒரிஜினலை விட்டு விட்டு variantஐ எடுக்கக் காரணம் 

குரங்குகள் வரம்பற்றவையாக இருக்க வேண்டும் என்று 

நான் உறுதிபடக் கருதியதுதான். ஆர்தர் எட்டிங்டன் தமது 

நூலில் குரங்குகள் என்று பன்மையையே குறிப்பிடுகிறார்.

An army of monkeys என்று அவர் எழுதுகிறார். Infinity என்று

அவர் கூறாவிட்டாலும் an army என்று கூறுவதன் மூலம் 

ஒன்றுக்கு மேற்பட்ட பன்மைக் குரங்குகளையே 

குறிப்பிடுகிறார். 


வரம்பற்ற குரங்குகள் என்று இருந்தால்தான், குழப்பம் 

மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது chaos அதிகமாக 

இருக்கும். அந்த அதீத நிலையில் இருந்து ஒழுங்கு 

(order) பிறக்குமா? அதில் இருந்து பிறந்தால்தான் அதிசயம்.

அப்போதுதான் நிகழ்தகவுக் கோட்பாடும் புதிய 

உயரத்தை எட்டும். ஒற்றைக் குரங்கு என்றால், வரம்பற்ற 

(infinite) நேரத்துக்கு அது டைப் அடிக்கும்போது காரல் 

மார்க்சின் மூலதனம் முழுவதையுமே ஒழுங்காக 

டாய் அடித்து விடும் வாய்ப்பு அதிகமே. இது intuition 

மூலம் எனக்குத் தெரிகிறது. நிகழ்தகவு நன்கு கற்ற 

எவர் ஒருவருக்கும் அவரின் intuition இதே முடிவையே தரும்.


ஆனால் வரம்பற்ற குரங்குகள் என்னும்போது, திடமான 

முடிவுக்கு உடனடியாக வந்து விட முடியவில்லை. ஒரு 

non zero probability இருக்கக் கூடும் என்று தெரிகிறது. நிற்க.


வரம்பற்ற குரங்குகள் தேற்றம் எனக்கு 40 வயதின் 

பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை  

Thermodynamics and statistical mechanics பாடத்தை நடத்தும்போது 

என் 18ஆவது வயதில் நான் தெரிந்து கொண்டேன். 


இயற்பியல் வகுப்பு அது. வகுப்பு எடுத்தவர் பேராசிரியர். 

நாங்கள் படித்த காலத்தில்  புரபஸர் என்றால் பயம்; 

HoD என்றால் பயம். புரஃபஸருக்கும் HoDக்கும் பயந்துதான் 

நாங்கள் எல்லாம் படித்தோம். Science group என்றால் 

இப்படித்தான். ஆனால் Arts groupல் நிலைமை தலைகீழ். 

அங்கு மாணவனுக்கு பேராசிரியர் பயப்படுவார்.


சரி, அறிவியல் கட்டுரைகளைப் படியுங்கள்; விவாதியுங்கள்.

கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை எழுதுங்கள்.


வரம்பற்ற குரங்குகள் தேற்றம் பற்றியெல்லாம் என் 

மூலமாக அல்லாமல் வேறு யார் மூலமாகவும் நீங்கள் 

அறிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் 

வாழ்ந்தாலும் இவற்றையெல்லாம் என்னைத் தவிர வேறு 

யாரும் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதில்லை. 

இதை ஏற்கிறீர்களா? 


உங்களின் ஆதரவு இருந்தால் தினமும் ஒரு கட்டுரை 

எழுதலாம். ஆதரவு இல்லை என்று நான் உணர்ந்தால் 

கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும். அவ்வளவுதான்.

*************************************************************        

 வெகுவாகக் 

                           ரெக்கார்டில் bonafide certificate வாங்க வேண்டுமே! 


பசி இருந்தால் அல்லாமல் யாரும் உணவின் மீது 

நாட்டம் கொள்ளப் போவதில்லை. தாகம் இருந்தால் 

அல்லாமல்  எவரும் தண்ணீர் அருந்தப் போவதில்லை.

 அது போல அறிவைப் பெறும் நோக்கம் இல்லாத

எவரும் எனது கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை.



-----------------------------------

 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக