சனி, 23 ஜனவரி, 2021

 உண்மை அறிவே மிகும் by Natesapillai Sivendiran

கடலூர் பிரச்சாரக் கூட்டத்தில் கமல்ஹாசன் "கிருமி கண்ட சோழன் என்னும் குலோத்துங்க சோழன் பெருமாளை தண்ணீரில் மூழ்கடித்த சரித்திரம்(!) நமக்குத் தெரியும்.இன்று நல்ல அரசு பரிபாலனம் இல்லாமல் சிதம்பரம் கோயிலே தண்ணீரில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்." என்று பேசியுள்ளார்.
அவர் கிருமி கண்ட சோழன் கதையை நம்புகிறார் என்பதைவிட தனது வைணவ மரபை சமகால சூழ்நிலைக்கு பொருத்திப் பார்க்கிறார் என்றே நினைக்கிறேன்.
பகுத்தறிவுவாதிகளின் மரபு அவர்களின் பகுத்தறிவில் பிரதிபலிக்கும்.ஆழ்மனதில் தெலுங்கராகவோ கன்னடராகவோ உணர்ந்ததால்தான் ஈவெராவால் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறமுடிந்தது.ஈவெரா ஒரு பூர்விகத் தமிழராக இருந்திருந்தால் இவ்வாறு கூறியிருக்கவேமாட்டார்.
அதேபோன்று ஈவெராவுக்கு தமிழ்நாட்டின் மரபான தமிழ்ச் சைவ, தமிழ் வைணவப் பின்னணி இல்லை.அவரின் பின்னணி விஜயநகர காலத்து வைணவம்.அது அதிகம் ஸ்மார்த்தக் கலப்பு உடையது.அவரின் மதம் குறித்த விமர்சனங்களுக்கு அந்தப் பின்னணியே காரணம்.
இதைத்தான் திருவள்ளுவர்,
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
(அதிகாரம்:ஊழ் குறள் எண்:373)
என்கிறார்.
மணக்குடவர் உரை: நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும் என்றவாறு.
மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
நான் உண்மை அறிவென்பதை சிந்திக்கும் முறை என்று புரிந்துகொள்கிறேன்.அது ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகளின் சார்பால் வேறுபடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக