திங்கள், 11 ஜனவரி, 2021

 Master, Visa மற்றும் Rupay card இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன?

இவை மூன்றுமே பற்று அட்டைகள் தான்
அதாவது டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு வகைகளில் அடங்குபவை.
மிகவும் வெளிப்படையான வித்தியாசம்
Rupay card நம்முடைய உள்நாட்டு இணைய பண பரிவர்த்தனைகள் செய்ய உதவும் பற்றுஅட்டை.
Master கார்டு / VISA கார்டு இவை இரண்டும் அமெரிக்க நிறுவனங்கள்.
Rupay கார்டு
இந்தியா, UAE, பக்ரைன், சிங்கப்பூர், பூட்டான், சவுதி அரேபியாவில் மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
Master/ VISA கார்டுகளை எந்த நாட்டிலும் பயன்படுத்த முடியும்.
Rupay கார்டு-ஐ டெபிட் கார்டு சேவையை மட்டும் வழங்குகிறது
Master/ VISA கார்டுகளை டெபிட்- கிரெடிட் என இரண்டு சேவைகளையும் வழங்குகின்றன.
Master / VISA கார்டு சேவையை நாடும் ஒரு வங்கியானது அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு காலாண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.
Rupay கார்டுக்கு அப்படி கட்டணம் எதுவும் இல்லை.
பாதுகாப்பு என்று கருத்தில் கொள்ளும் பொழுது, Rupay கார்டில் பாதுகாப்பு இருக்கும்.
மாஸ்டர்/விசா கார்டர்கள் உலகளவில் செயல்படுவதால் அவை எளிதில் பாதிப்புக்குள்ளாகலாம்.
Rupay அட்டையை குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், இதன் மூலம் பரிவர்த்தனை செய்யும்பொழுது நாம் payment gatewayக்கு செலுத்தும் கட்டணம் Master / VISA கார்டுகளை காட்டிலும் மிகவும் குறைவு.
மேலும், Rupay கார்டு உபயோகிக்கும் பொழுது பண பரிவர்த்தனைகள் வேகமாக இருக்கும். (உள்நாட்டு சர்வர் என்பதால்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக