மத்திய அரசு ஊழியரான (தென்னக ரயில்வே)
அனிதா பால்துரைக்கு பத்மஸ்ரீ! வாழ்த்துகிறோம்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
அனிதா பால்துரைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி
உள்ளது. இவர் கூடைப்பந்து வீராங்கனை. கிரிக்கெட்
ஆடுபவர்களைத் தவிர தமிழகம் வேறு விளையாட்டு
வீரர்களை அறிந்து கொள்வதில்லை. எனவே அனிதா பால்துரை
என்றால் தெரிந்தவர்கள் பொதுவெளியில் பூஜ்யமே. விளையாட்டுத்
துறையினருக்கு மட்டுமே அனிதாவைத் தெரியும்.
தமது 19 வயதிலேயே இந்திய தேசிய அளவிலான மகளிர்
கூடைப்பந்து அணியின் (national team) கேப்டனாக இருந்தவர்
அனிதா. உரிய GK புத்தகங்களை படித்து அவரின்
சாதனைகளை அறிந்து கொள்ளுமாறு வாசகர்களைக்
கேட்டுக் கொள்கிறோம்.
அனிதா பால்துரை ஒரு தமிழ்ப்பெண் ஆவார்.
மத்திய அரசு ஊழியரும் ஆவார். தென்னக ரயில்வேயில்
TTEஆக (Travelling Ticket Examiner) பணிபுரிந்து வருகிறார்.
காங்கிரஸ் அரசு இவரைக் கண்டுகொள்ளவில்லை.
இவருக்கு அர்ஜுன் அவார்டு கூட வழங்கவில்லை.
தற்போது பத்ம விருது வழங்குவதில் உள்ள இழிந்த
அரசியல் வெகுவாகக் குறைந்துள்ளது. காங்கிரஸ்
ஆட்சியின்போது இது கொடிகட்டிப் பறந்தது.
எனினும் விருது வழங்குவதில் உள்ள இழிந்த அரசியல்
பாஜக அரசில் முழுவதுமாகக் குறையவில்லை. அப்படி
முழுவதும் குறைந்திருந்தால் நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு, அதன் நிறுவனருக்கு அல்லவா பத்மஸ்ரீ
வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் ஒரு உண்மையைக் கூறிவிட வேண்டும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் தனக்கு விருது வழங்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் செயலாற்றுவதில்லை. நியூட்டன்
அறிவியல் மன்றத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் பட்டால்
அதை ஏற்க மறுப்பதே எங்கள் கொள்கை. நியூட்டன் அறிவியல்
மன்றத்துக்கு விருது அறிவிக்கப் பட்டால், உடனடியாக
அதை ஏற்க மறுத்து அறிக்கை வெளியிடுவோம் நாங்கள்.
மத்திய அரசு ஊழியரான அனிதா பால்துரை
பத்மஸ்ரீ விருது பெற்றமைக்கு நியூட்டன் அறிவியல்
மன்றம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனிதா பால்துரை விவரங்கள்:
----------------------------------------------
வயது: ஜூன் 22 1985, 35
படிப்பு: B.Com, MBA
Community: OBC Christian
Nationality: Indian, Tamil.
*************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக