செவ்வாய், 19 அக்டோபர், 2021

 இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 

இந்திய அரசமைப்புச் சட்டமும்

சில குட்டி முதலாளித்துவ மூடர்களும்!

---------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------

1) 1965ல் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 

நடைபெற்றது. 


2) இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று 

கூறுகிற அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 343ஐ 

ரத்து செய்யக்கோரி அந்தப் போராட்டம் 

நடக்கவில்லை.


3) 1950 முதல் 15 ஆண்டுகளுக்கு, அதாவது 1965 வரை 

மட்டிலுமே ஆங்கிலமானது துணை ஆட்சிமொழியாக

இருக்கும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறிய .

அந்த 15 ஆண்டு கால அவகாசம் 1965உடன் முடிந்து 

விட்டது. எனவே ஆங்கிலமே தொடர்ந்து துணை ஆட்சி 

மொழியாக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை 

தமிழ்நாட்டில் எழுப்பப் பட்டது.


4) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் இறுதி விளைவாக

ஷரத்து 343 அப்படியே நீடிக்கும் என்றாலும்  

ஆங்கிலம் தொடர்ந்து இணை ஆட்சிமொழியாக

நீடிக்கும் என்றும் அன்றைய பிரதமர் லால் பகதூர் 

சாஸ்திரி உறுதியளித்தார். இது வரலாறு.


5) இந்தியாவுக்கு தேசிய மொழி எதுவும் உண்டா?

இல்லை. அரசமைப்புச் சட்டப்படி தேசிய மொழி 

என்று எதுவும் இல்லை.

அதாவது de jure national language எதுவும் கிடையாது.

ஆனால் de facto national languageஆக இந்தி 

இருக்கிறது.


6) மேற்கண்ட பத்தியில் (பத்தி-5) கூறி இருக்கிற 

de jure, de facto என்ற பதங்களுக்கு உரிய 

பொருள் நன்கு தெரிய வேண்டும். இதற்குச் 

சற்று வளமான ஆங்கிலப் புலமை வேண்டும்.  

குட்டி முதலாளித்துவ மூடர்களாலும் பட்லர் 

இங்கிலீஷ் பேசுபவர்களாலும் இதைப் 

புரிந்து கொள்ள முடியாது. 


7) இந்தியாவில் பல மாநிலங்கள், பல தேசிய 

இனங்கள்,.பல மொழிகள் இருப்பதால் 

மாநிலங்கள் தங்களுக்கு இடையே தொடர்பு 

கொள்ளவும், மாநிலங்களும் மத்திய அரசும் 

பரஸ்பரம் தொடர்பு கொள்ளவும் ஒரு இணைப்பு 

மொழி (link language) தேவை. அது இந்திய 

மொழியாக இருக்க வேண்டும்.


8) இதே போல பல தேசிய இனங்களும் பல 

மொழிகளும் பேசப்படும் சோவியத் ஒன்றியத்தில் 

ரஷ்ய மொழி இணைப்பு மொழியாக இருந்தது.


9) ஒரு இணைப்பு மொழியின் தேவை நிரந்தரமாக 

இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் 

இணைப்பு மொழியாக இந்தியும் ஆங்கிலமும்

இருக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்கள் 

தங்களுக்குள்ளும் மத்திய அரசுடனும் இந்தியில் 

தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்தி 

பேசாத மாநிலங்கள் தங்களுக்குள்ளும் மத்திய 

அரசுடனும் ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் 

மேற்கொள்கின்றன.


10) ஆங்கிலத்தின் நிலை இந்தியாவில் நன்கு 

உறுதிப் படுத்தப்பட்டு விட்டது. ஏனெனில் 

இந்தியாவின் உற்பத்தி மொழியாக ஆங்கிலம் 

இருக்கிறது. இதன் காரணமாக ஆங்கிலத்தின் 

அந்தஸ்தையோ முக்கியத்துவத்தையோ 

யாராலும் ரத்து செய்து விட முடியாது.


11) இந்தி ஆட்சிமொழி என்பதை மாற்றும் நோக்கம் 

உண்மையில் யாருக்கும் இல்லை. வாக்கு வங்கி 

அரசியலுக்காக போலியான இந்தி எதிர்ப்பு 

தமிழ்நாட்டில் பேசப் படுகிறது.   


12) 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குதல்  

 நடைமுறை சாத்தியம் அற்றதாகும்.


13) பிரிவு 343ல் இந்தியுடன் ஒரு தென்னிந்திய 

மொழியையும் சேர்க்க வேண்டும். அந்த 

மொழி தமிழ் என்பதை மலையாள கன்னட 

தெலுங்கர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். 

எந்த ஒரு தென்னிந்திய மொழியை ஆட்சி

மொழி ஆக்கினாலும் மற்ற மொழி பேசுவோர் 

ஏற்க மாட்டார்கள்.


14) எனவே உலகம் அழியும்வரை இந்த 

மொழிச்சண்டை தொடரும்.


15) ஷரத்து 343ஐத் திருத்தி 

இந்தி, சமஸ்கிருதம், தமிழ், வங்காளம் ஆகிய 

நான்கு மொழிகளையும் ஆட்சி மொழிகள் 

ஆக்கலாம். பல்வேறு நாடுகளில் ஒன்றுக்கு 

மேற்பட்ட மொழிகள் ஆட்சி மொழிகளாக 

இருக்கின்றன. ஆனால் இதற்கு வட இந்தியர்கள்

ஒத்துக் கொண்டாலும் தென்னிந்தியர்கள் 

ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.


16) தென்னிந்திய மொழிகளாக இருப்பவற்றில் 

மெய்யான தென்மொழித் தன்மை தமிழுக்கு 

மட்டுமே உண்டு. எனவே தமிழுக்குமட்டுமே 

ஆட்சி மொழி அந்தஸ்து கொடுக்க முடியும்.

சமஸ்கிருதத் தன்மை வாய்ந்த, சமஸ்கிருதத் 

தாக்கம் மிகுந்த மலையாளம், தெலுங்கு, 

கன்னடம் ஆகிய மொழிகள் தென்மொழித் 

தன்மை இல்லாதவை. எனவே தமிழுக்கு 

மட்டுமே தென்னிந்திய மொழி என்ற 

அந்தஸ்தை வழங்கி ஆட்சிமொழியாக ஆக்க 

முடியும்.        


17) 1937ல் நடந்தது போல 

1965ல் நடந்தது போல 

மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை 

தமிழ்நாட்டில் யார் எவராலும் நடத்த முடியாது.

1937ல் தந்தை பெரியாரே தலைமை தாங்கி 

இந்தி எதிர்ப்புப் போரை நடத்திய போதிலும்  

தமிழ் நாட்டு மக்கள் முழுவதுமாக அவரை 

ஆதரிக்கவில்லை. குறிப்பாக உருது பேசும் 

முஸ்லிம்கள் இந்தியை வரிந்து கட்டிக் கொண்டு 

ஆதரித்தனர்.பெரியாரின் போராட்டத்தை 

எதிர்த்தனர். தமிழைத் தாய்மொழியாகக்

கொண்ட முஸ்லிம்கள் மட்டுமே இந்தியை எதிர்த்தனர்.


18) இந்தியும் உருதும் ஒருதாய்ப் பிள்ளைகள்.

இந்திய முஸ்லிம்கள் இந்தியுடன் தங்களை 

அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

இந்தி எதிர்ப்பு என்பது இஸ்லாமிய எதிர்ப்பு 

என்னும் உளவியல் இந்திய முஸ்லிம்களிடம் 

இருக்கிறது. எனவே அவர்கள் இந்தி எதிர்ப்பை 

ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள்.


19) எனவே முன்யோசனை இல்லாமல் 

தற்குறித் தனமாக இந்தி எதிர்ப்பை எவரேனும் 

முன்னெடுத்தால், அது கிணறு வெட்டப் 

போனபோது பூதம் கிளம்பிய கதையாக முடிந்து விடும்.

மொழிப்பிரச்சினையானது மதப் பிரச்சினையாக 

மாறி விடும். இதைத் தவிர்க்க வேண்டும்.


20) இந்தியோ தமிழோ எதுவானாலும் இவை 

இந்தியாவின் உற்பத்தி மொழியாக இல்லை.

எனவே உற்பத்தியில் இல்லாத இரண்டு மொழிகள் 

தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது 

முட்டாள் தனம் ஆகும். குட்டி முதலாளித்துவ 

மூடர்கள் இதை உணர்வார்களா?

-----------------------------------------------------------------------

பின்குறிப்பு:

தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவது மட்டுமே 

ஒரே தீர்வு. இதை சளைக்காமல் செய்து கொண்டு 

இருப்பவன் நான் மட்டுமே. ஒவ்வொரு 

அறிவியல் ஒளி இதழிலும் நவீன அறிவியலைப் 

பற்றித் தவறாமல் கட்டுரை எழுதிக் கொண்டு 

இருக்கிறேன். தமிழை அறிவியல் மொழியாக 

ஆக்க முயல்கிறேன். எனது முயற்சிக்கு குட்டி 

முதலாளித்துவ மூடர்கள் ஆதரவு தரவில்லை.

அவர்கள் விரைவில் அழிந்து போவார்கள்.

---------------------------------------------------------   


   

  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக