வியாழன், 21 அக்டோபர், 2021

ஆட்சிமொழிக்கும் அலுவல் மொழிக்கும் என்ன வேறுபாடு?

official language என்பதன் பொருள் என்ன?

குட்டி முதலாளித்துவக் கசடுகளின் பட்லர் இங்கிலீஷ்!

------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

ஆங்கில டிவி சானலில் ஒரு நேர்காணல் ஓடிக் 

கொண்டிருந்தது. "We are not afraiding" என்றார் 

அந்த திராவிடத் தலைவர். தமது அஞ்சாமையை 

வெளிப்படுத்தினார். இதை வரவேற்போம்!


அஞ்சாமை என்றதுமே  உங்களுக்கு நாவுக்கரசரின் 

பின்வரும் தேவாரம் நினைவுக்கு வருகிறதா?  


நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை


நினைவுக்கு வரவில்லை, அப்படித்தானே! 

தேவாரத்துக்கெல்லாம் நாங்கள் எங்கே போவது 

என்கிறீர்களா? சரி, விடுங்கள்.


"We are not afraiding" என்று அந்த திராவிடத் தலைவர் 

சொன்னதுமே, அவரை நேர்காணல் செய்து 

கொண்டிருந்த  அந்த ஆங்கில சானலின் நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி பயந்து விட்டார். ஆக்ஸ்போர்டில் 

முதுகலை படித்த அர்னாப் கோஸ்வாமியால் "We are not afraiding" 

என்ற வாக்கியத்தின் அனலை எதிர்கொள்ள முடியவில்லை.

இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மிகவும் சகஜம்.

வேறெந்த மாநிலத்தையும் விட இங்கு பட்லர்கள் அதிகம்.


RULING LANGUAGE எனப்படும் பட்லர் இங்கிலீஷ்!

-------------------------------------------------------------------------- 

"இந்தி ஆட்சிமொழி என்றால் இந்தியை 

RULING LANGUAGE என்று அம்பேத்கார் எழுதி 

இருப்பாரே! RULING LANGUAGE என்றால்தான் 

ஆட்சிமொழி என்று பொருள்படும்" என்றான்

ஒரு குட்டி முதலாளித்துவக் கசடு (Petti bourgeois scum).


Ruling language என்ற சொல்தான் "ஆட்சிமொழி"யைக்  

குறிக்கும் என்று உளறும் அந்தக் குட்டி முதலாளித்துவ 

பட்லரிடம்,  "இது பட்லர் இங்கிலீஷ் முட்டாளே" என்று 

சொல்ல இயலுமா? சொன்னால் அந்தக் குட்டி 

முதலாளித்துவக் கசடால் புரிந்து கொள்ள முடியுமா?

Every fool is fully convinced!!


பட்லர் இங்கிலீஷுக்கும் முறையான இங்கிலீசுக்கும் 

இடையிலான வித்தியாசத்தை இந்த சிந்தனைக் 

குள்ளர்களால் என்றாவது உணர முடியுமா? இவர்களின் 

அறிவெல்லைக்குள் அது என்றேனும் வசப்படுமா?. 


தங்களின் அறியாமையையே தங்களின் தகுதியாகக் 

கருதும் இதுபோன்ற குட்டி முதலாளித்துவக் கசடுகளை 

எவரேனும் திருத்த முடியுமா? They are living in Fool's paradise. 


குட்டி முதலாளித்துவ முகாமில்  தான் எவ்வளவு பெரிய முட்டாள் 

என்று உணரக்கூட இயலாத பெருந் தற்குறிகளும் உண்டு. 

இந்தத் தற்குறிகளின் மண்டையில் ஏறும்படி  

எதையேனும் சொல்ல வேண்டி இருந்தால் 

அவர்களின் மூளையில் முதலில் ECT கொடுக்க 

வேண்டும். (ECT = Electro Convulsive Therapy). அதாவது 

மின்னதிர்ச்சி (electric shock) கொடுக்க வேண்டும். 


இழிந்த இந்தக் குட்டி முதலாளித்துவ பட்லர்களுக்கு 

ACADEMICALLY எந்தத் தகுதியோ அருகதையோ 

கிடையாது. பட்லரே, உனது கல்வித் தகுதி என்ன 

என்று கேட்டுப்  பாருங்கள். பதில் சொல்ல மாட்டார்கள்.


உன் அப்பன் பெயர் என்னடா என்று கேட்டால்.

சட்டென்று பதில் வர வேண்டும். அதைப்போல 

உன் கல்வித் தகுதி என்ன என்றால் உடனே  

பதில் சொல்ல வேண்டும். அப்படிப் பதில் 

சொல்ல இயலாதவன் இழிந்தவன்! 


RULING LANGUAGE என்ற பதமே தவறானது; அருவருக்கத் 

தக்கது. அது இழிந்த பட்லர் இங்கிலீஷ் ஆகும். எனவே 

RULING LANGUAGE  என்ற பதம் பரிசீலனைக்கு ஏற்கப் 

படாமல் இகழ்ச்சியுடன் நிராகரிக்கப் படுகிறது.


official language என்றால் அதிகாரபூர்வமான மொழி என்று

பொருள். What does this imply? மற்ற மொழிகள் 

அதிகார பூர்வமற்றவை (unofficial) என்பது implied.  

எனவே official language = அதிகாரமுறு மொழி.


என்ன அதிகாரம் அந்த மொழிக்கு வழங்கப் படுகிறது?

வேறு என்ன அதிகாரத்தை ஒரு மொழிக்கு வழங்க 

முடியும்? ஆட்சி செய்யும் அதிகாரத்தை மட்டுமே 

வழங்க முடியும். Therefore this further implies that the term 

OFFICIAL LANGUAGE means a language that governs.   

எனவே, official language = அதிகாரமுறு மொழி = ஆட்சி மொழி.

 

அடுத்து, அலுவல் மொழி என்ற பதத்திற்கு என்ன பொருள்?

அ) அதிகாரபூர்வமானது என்று பொருள் அல்ல.


ஆ) ஆட்சி மொழி என்றோ ஆளுகை செலுத்தும் மொழி 

என்றோ பொருள் அல்ல.


இ) அலுவல் மொழியை ஆங்கிலத்தில் WORKING LANGUAGE

என்று கூறலாம். இதற்கு, அதாவது working languageக்கு 

எந்த விதமான locus standiயும் கிடையாது. Locus standi ஏதுமற்ற 

ஒரு பஞ்சைப் பராரியால் அரசமைப்புச் சட்டத்தில் இடம் 

பெற இயலாது.


ஈ) ஆட்சிமொழி = official language (locus standi உண்டு)

அலுவல் மொழி = working language (locus standi இல்லை)


உ) working majority என்ற தொடரைக் கருதுங்கள்.

working majority என்பது ஒருவிதமான பெரும்பான்மையே.

என்றாலும் அது அறுதிப் பெரும்பான்மை அல்ல

(not an absolute majority). அது போலத்தான் working language

என்பதும். அதாவது அலுவல்மொழி என்றால் அது 

ஆட்சிமொழி என்பதைவிட அந்தஸ்து குறைவானது.

சட்டபூர்வத் தன்மை (legal status) குறைந்தது.                 


இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்தியை 

இந்தியாவின் ஆட்சிமொழி (OFFICIAL LANGUAGE)

என்று சொல்கிறது. Official language  என்றால் 

ஆட்சிமொழி என்று பொருள். என்று மட்டுமே பொருள்.


தமிழ்நாட்டில் 1965 முதல் 1970 வரை இந்தி எதிர்ப்பு வீரியமாக 

இருந்தது. காலப்போக்கில் அது நீர்த்துப் போனது. 

அன்று வெறும் குட்டி முதலாளித்துவ மற்றும் ஏழை 

எளிய மக்களின் கட்சியாக இருந்த திமுக, அதிமுக 

போன்ற கட்சிகள் இன்று பணமூட்டைகளின் கட்சிகள் 

ஆகி விட்டன. எனவே முன்பு போல் இந்தியை 

எதிர்க்கும் தேவை அவர்களுக்கு இன்று இல்லை.


எனவே நீர்த்துப் போன இந்தி எதிர்ப்பைச் 

சுட்டுவதற்கு ஒரு பொருத்தமான சொல் வேண்டும். 

அதற்காகவே அலுவல்மொழி என்ற சொல்லை 

உருவாக்கினர். அலுவல் மொழி என்பது ஆங்கிலத்தில் 

working language என்று பொருள்படுமே தவிர, official language

என்று பொருள்படாது. 


இந்தி "ஆட்சிமொழி" என்றால், அந்தச் 

சொல்லாட்சியானது ஒரு ஆபத்தைச் சுட்டுகிறது. 

நம்மை, நம் மொழியை இந்தி ஆட்சி செய்கிறது

என்ற ஆபத்துணர்வை  நம் மனத்தில் ஏற்படுத்துகிறது.  


இந்தி ஆபத்தானது என்ற இந்த உணர்வை நீர்த்துப் 

போகச் செய்ய வேண்டும். இந்தியால் எல்லாம் பெரிய 

ஆபத்து எதுவும் கிடையாது என்ற RELAXED MOODஐ 

மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.


எனவே, இந்தி ஆட்சிமொழியாக எல்லாம் இல்லை; அது 

after all வெறும் அலுவலக மொழிதான் என்று underplay

செய்தனர் திராவிடப் பணமூட்டைகள்.   இவ்வாறு 

மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை நீர்த்துப் 

போகச் செய்யவே அலுவல் மொழி என்ற சொல்லாக்கம் 

திட்டமிட்டு mala fide intentionஉடன்  உருவாக்கப் பட்டது.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ஆட்சிமொழி என்ற 

சரியா சொல்லை வேண்டுமென்றே புறக்கணித்தனர். 


திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியைக் கருதுவோம்.

திமுகவின் நிரந்தர வாக்கு வங்கியாக இஸ்லாமிய 

வாக்கு வங்கி உள்ளது. இஸ்லாமியச் சகோதரர்கள் 

இந்தியைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அவர்கள் 

ஒருபோதும் இந்தியை எதிர்க்க மாட்டார்கள்.

1937ல் தந்தை பெரியாரே முன்னின்று நடத்திய இந்தி 

எதிர்ப்புப் போராட்டத்தில், முஸ்லிம்கள் என்ன செய்தனர்?

உருது பேசும் முஸ்லிம்கள் பெரியாரை ஆதரிக்கவில்லை. 

அவர்கள் இந்தியை எதிர்க்க மாட்டோம் என்று சொல்லி விட்டனர்.


இந்தியும் உருதும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற 

உளவியல் நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இருப்பதால், 

இந்தி எதிர்ப்பு என்று வரும்போது அவர்கள் இந்தியை 

எதிர்க்க முன்வர மாட்டார்கள். 1960களில் இருந்தது போல்,

இந்தி எதிர்ப்பில் திமுக தீவிரமாக இருந்தால் என்ன ஆகும்?

தனது இஸ்லாமிய வாக்கு வங்கியை அது இழக்க நேரும்.

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் இந்தி எதிர்ப்பைப் 

பெயரளவுக்கு மட்டுமே திமுக கடைப்பிடித்து வருகிறது.

 

மத்திய அரசில் 33 ஆண்டு காலம் பணியாற்றிய எங்களைப்   

போன்றவர்கள் official language என்பதன் மெய்ப்பொருளை 

அறிவோம். ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை-டெல்லி 

சர்க்யூட்டானது சமயத்தில் படுத்து விடும். வேறு பெரிய பழுது 

எதுவும் இருக்காது. ஒருமுறை reset செய்தால் சரியாகி விடக்கூடும்.


டெல்லிக்காரனிடம் பேசி ரீசெட் செய்யச் சொல்ல 

வேண்டும். இதை இந்தியில் சொன்னால்தான் 

டெல்லியில் உள்ளவன் செய்வான். "Will you please 

reset our Chennai-Delhi circuit?" என்று ஆங்கிலத்தில் 

சொன்னால், எதிர்முனையில் உள்ளவன் எம்.டெக் 

படித்திருந்தால் கூட காதில் வாங்கமாட்டான்.  

             

இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் 

கிடையாது. அதாவது de jure national language

எதுவுமே கிடையாது. ஆனால் de facto national 

language உண்டு. அது இந்தி. இதை ஏற்க மறுப்பது 

பேதைமையுள் எல்லாம் பேதைமை! 


De facto national language என்று நான் ஏற்கனவே சொன்னேன். 

De jure, de facto என்ற பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தாமல் 

இதைச் சொல்ல இயலாது. 


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒலிக் மீட்டிங் 

(OLIC Meeting) என்றால் என்ன என்று தெரியும்.

அது என்ன ஒலிக் மீட்டிங்?

OLIC = Official Language Implementation Committee.


அதாவது இந்தி ஆட்சிமொழி என்பது வெறும் சட்ட 

வாசகம் மட்டும் அல்ல. அது in letter and spirit அமல்படுத்த

வேண்டிய விஷயம். அதற்காக ஒவ்வொரு மத்திய அரசு 

அலுவலகத்திலும் இந்த ஒலிக் மீட்டிங் நடப்பது உண்டு.


அரசமைப்புச் சட்டம் ஷரத்து 351 என்ன சொல்கிறது?

இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவதற்கு 

என்னென்னவெல்லாம்  செய்ய வேண்டும் என்று கூறுகிறது.


ஷரத்து 343ஆனது  இந்தியை வெறும் அலுவல் மொழி 

என்றுதானே கூறுகிறது என்று வரிந்து கட்டுபவர்கள், 

ஷரத்து 351 எதற்கு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது  என்று 

சிந்திக்க வேண்டும். இந்தி வெறும் அலுவல்  மொழிதான் 

என்றால், ஷரத்து 351 தேவையே இல்லையே! ஒலிக் மீட்டிங் 

தேவையே இல்லையே!


அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் இந்தியைப் பற்றி 

என்ன கருதினார்கள் என்பது முக்கியம். காந்தியும், நேருவும், 

பட்டேலும், அம்பேத்காரும், இவர்கள் நால்வரும்தான் 

நவ இந்தியாவை உருவாக்கியவர்கள். அவர்களின் பார்வையில்: 

1) இந்தியா என்பது ஒரு ஒற்றை நாடு.

2) இந்தியன் என்பது மட்டுமே இந்த நாட்டின் ஒற்றை தேசிய இனம்.

3) இந்த நாட்டின் ஆட்சிமொழி இந்தியே.


அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் நடைபெற்ற 

விவாதங்கள் பற்றி நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் 

உள்ளன. அவற்றைப் படிக்க வேண்டும். படிக்காமல் 

சபை ஏற வேண்டாம்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 

நூலின்றிக் கோட்டி கொளல்.   


ஷரத்து 343 பற்றியும் ஷரத்து 351 பற்றியும் முதன் முதலில் 

கூறியவன் நான்தான். நீங்கள் உங்களின் மனச்சாட்சியைத்

தொட்டுப் பார்த்து பதில் சொல்லுங்கள். நான் சொல்லாமல் 

நீங்களாகவே தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டிவி சானல் நடத்திய 

விவாதத்தில் பங்கேற்று ஷரத்து 343ஐ வாசித்துக் 

காண்பித்தேன். அத்தனை பேரும் அதிர்ச்சி 

அடைந்தார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் 

unassailable evidence பொதுவெளியில் இருக்கிறது.  


இறுதித் தீர்ப்பு!

-------------------------

OFFICIAL LANGUAGE = ஆட்சிமொழி. 

இதுதான் சரியான முறையான ஆங்கில மொழிபெயர்ப்பு. 

அதாவது Royal British English, Oxford English, Cambridge English என்று 

அனைத்து வகையான ஆங்கிலத்தின்படியும் ஏற்கத் தக்க 

ஏதுவான மொழிபெயர்ப்பு.


Official language = அலுவல் மொழி. 

இந்த மொழிபெயர்ப்பு பட்லர் இங்கிலீஷின்படியான 

மொழிபெயர்ப்பு. இது பொருத்தமற்றது. எனவே 

இகழ்ச்சியுடன் நிராகரிக்கப் படுகிறது.


With authority and aplomb நியூட்டன் அறிவியல் மன்றம்

இத் தீர்ப்பை வழங்குகிறது.

-----------------------------------------------------------------

பின்குறிப்பு:

சோவியத் ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டம் என்று 

ஒரு சிறிய புத்தகம் (தமிழில்) அன்று NCBH தோழர்களால் 

வெளியிடப்பட்டது. மொழிகளின் சமத்துவத்தை மெய்யாகவே 

நடைமுறைப் படுத்திய  உலகின் ஒரே அரசமைப்புச் சட்டம் 

அது. மார்க்சிய மூல ஆசான் லெனின் உருவாக்கியது அது.

இன்று சோவியத் ஒன்றியம் இல்லைதான். என்றாலும் 

அந்நூலைப் படிக்காமல் மொழிகள் குறித்து தெளிவு 

பெற இயலாது. 

***********************************************


 

 ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக