செவ்வாய், 5 அக்டோபர், 2021

 இந்தியாவில் கொரோனா மரணங்கள் 

மாநிலவாரியாக! 2021 அக்டோபர் 4 நிலவரம்!

ஆதாரம்: இந்திய அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை. 

-------------------------------------------------------------------   

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------

1) தமிழ்நாடு = 35,650 மரணங்கள் 


2) டெல்லி (கேஜ்ரிவால்) = 25,088

3) உத்திரப் பிரதேசம் (யோகி ஆதித்யநாத்) = 22,894.


4) மேற்கு வங்கம் (மமதா பானர்ஜி) = 18,825.

5) மத்தியப் பிரதேசம் (சௌகான்) = 10,522.

6) குஜராத் (பூபேந்திர படேல்) = 10,082.


7) பீகார் (நித்திஷ் குமார்) = 9661.       

8) ராஜஸ்தான் (அசோக் கெலாட்) = 8954.


உத்திரப் பிரதேசத்தின் மக்கள் தொகை எவ்வளவு?

20 கோடி. ஆனால் கொரோனா மரணம் 

மிகவும் குறைவு. 


தமிழ்நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு?

7.88 கோடி. உ.பி.யை விட 12 கோடி குறைவு.

ஆனால் கொரோனா மரணம் தமிழ்நாட்டில் 

அதிகம். உ.பி.யை விட அதிகம். 

உபி கொரோனா மரணம் = 22,894.

தமிழ்நாடு கொரோனா மரணம் = 35650.

நிச்சயமாக யோகி  ஆதித்யநாத் சிறந்த நிர்வாகி 

என்று நிரூபித்துள்ளார்.


பீகாரின் மக்கள்தொகை தமிழ்நாட்டை விட 

மிகவும் அதிகம். ஆனால் கொரோனா மரணம் 

மிக மிகக் குறைவு.

பீகார் மக்கள்தொகை = 10.4 கோடி 

கொரோனா மரணம் = 9661 மட்டுமே.


பீகாரை விடக் குறைவான மக்கள்தொகை உள்ள

(7.88 கோடி) தமிழ்நாட்டில் கொரோனா மரணம் 

35,650.


நிச்சயமாக பீகாரின் முதல்வர் நித்திஷ் குமார் 

மிகச்சிறந்த நிர்வாகி என்று நிரூபித்துக் 

கொண்டுள்ளார்.


மேற்கு வங்கம் பெரிய மாநிலம். தமிழ்நாட்டை 

விட மக்கள் தொகை அதிகம். ஆனால் அங்கு 

கொரோனா மரணம் குறைவு.


மேற்கு வங்கம் மக்கள்தொகை = 9.1 கோடி.

கொரோனா மரணம் = 18,825.

தமிழ்நாடு மக்கள்தொகை = 7.88 கோடி.

தமிழ்நாடு கொரோனா மரணம் = 35,650.


மேற்கு வங்கத்தைப் போல இரண்டு மடங்கு 

அதிகமான மரணம் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

மானமுள்ள தமிழனாக நான் இதற்கு வெட்கப் 

படுகிறேன்.


கொரோனாவைக் கட்டுப் படுத்துவதில் 

மமதா பானர்ஜி மிகச் சிறந்த நிர்வாகி என்று 

நிரூபித்துக் கொண்டுள்ளார்.


மிகப்பெரிய முற்போக்கு மாநிலம் என்று 

சவடால் அடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் 

ஏன் கொரோனா மரணம்  இந்த அளவுக்கு 

அதிகமாக இருக்கிறது என்று மூளை உள்ள 

தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


தமிழ்நாட்டில் முற்போக்கு என்றெல்லாம் 

எதுவும் இல்லை. சினிமாக் கூத்தாடிப் பயல்கள்,

பிரிட்டிஷ்காரனிடம் தமிழ்நாட்டுக்கு மட்டும் 

சுதந்திரம் வேண்டாம்; நாங்கள் அடிமையாகவே 

இருக்கிறோம் எனறு மனுக் கொடுத்த பயல்கள் 

இப்படி இழிந்த பிற்போக்குப் பிண்டங்கள் 

செல்வாக்கோடு வாழும் இடம் தமிழ்நாடு.

எனவே இங்கு தடுப்பூசித் தயக்கம் அதிகமாக 

உண்டு.


வட இந்திய மக்களை விடத்  தரம் குறைந்த 

மானம் குன்றிய, பிற்போக்குப் பிண்டங்கள் 

வாழும் இடம் தமிழ்நாடு. இது இங்கே நிரூபிக்கப் பட்டுள்ளது.

------------------------------------------------------------- 


    

 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக