வெள்ளி, 22 அக்டோபர், 2021

 ஹில்பெர்ட் வெளி குறித்த சிறு குறிப்பு:

---------------------------------------------------------

1) ஹில்பெர்ட் வெளி என்பது ஒரு கணிதவெளி ஆகும்.

ஜெர்மானியக் கணிதமேதை டேவிட் ஹில்பெர்ட் இதை 

உருவாக்கினார். இது ஒரு பௌதிக வெளி அல்ல (not a physical space) .


2) யூக்ளிட்டின் வெளி போன்றதுதான் ஹில்பெர்ட்டின்

வெளியும். யூக்ளிட்டின் வெளி வரம்புக்கு உட்பட்ட 

பரிமாணங்கள் கொண்டது. ஆனால் ஹில்பெர்ட்டின் வெளி 

வரம்பற்ற பரிமாணங்களைக் கொண்டது (infinite dimensions).


3) நமது பிரபஞ்சம் யூக்ளிட் அல்லாத வெளியைக் கொண்டது 

(Our universe is non Euclidean).   


4) குவான்டம் துகள்களின் வெவ்வேறு நிலையிருப்பை

(various states) விவரிக்கும் அலைச் சார்புகள் (wave functions)

மொத்தமும் ஹில்பெர்ட் வெளியில் அமைந்து விடும்.

இவை அனைத்தையும் ஆராய்வதற்கு ஹில்பெர்ட் வெளி 

பயன் படுகிறது.    

--------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக