5g இழிந்த பொய்கள்!
-----------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------
இந்தியாவில் 5g அலைக்கற்றை இன்னும்
எந்த நிறுவனத்துக்கும் ஒதுக்கப்படவில்லை.
பெப்ரவரி 2022ல் மட்டுமே ஒதுக்கப்படும்.
தற்போது எல்லா நிறுவனங்களுக்கும்
(ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்,
MTNL) 5g பரிசோதனை செய்து பார்க்க
அனுமதிக்கப் பட்டுள்ளது. இது ஒரு சில
நகரங்களில் மட்டும். அரசு நிறுவனமான
MTNLக்கு நாட்டின் தலைநகரான டெல்லியில்
5G சோதனைக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
எனவே ஜியோவுக்குமட்டும் அனுமதி என்பது
இழிந்த பொய்.
BSNLக்கு 4G அலைக்கற்றை வாங்கப்பட்டு
விட்டது. இதற்கான GST வரியும் செலுத்தப்
பட்டு விட்டது.இவ்விரு செலவுகளையும்
அரசே ஏற்றுக் கொண்டது. மேலும் 4G சேவை
வழங்க BSNLக்கு 20 ஆண்டு காலத்திற்கான
லைசன்ஸ் வழங்கப் பட்டு விட்டது.
அதாவது 29 பெப்ரவரி 2020 முதல்
29 பெப்ரவரி 2040 வரை 20 ஆண்டுகளுக்கு
லைசன்ஸ் வழங்கப்பட்டு விட்டது.
Service roll out விரைவில் நடைபெறும்.
(Service roll out என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?)
அலைக்கற்றை பற்றியும் தொலைதொடர்பு
பற்றியும் பேசுவதற்கும் இவற்றைப் புரிந்து
கொள்வதற்கும் அடிப்படை அறிவியலில் அறிவு
இருத்தல் வேண்டும். குறைந்தது ப்ளஸ் டூ
வரையிலான maths, physics, electronics
படித்திருந்தால் மட்டுமே telecom industry பற்றிப்
புரிந்து கொள்ள முடியும். கூடவே நல்ல ஆங்கிலப்
புலமையும் இருத்தல் வேண்டும்.
-------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக