செவ்வாய், 19 அக்டோபர், 2021

 இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று 

ஸ்மோட்டோ நிறுவனம் (உணவை வீடுகளுக்கு 

டெலிவரி செய்யும் நிறுவனம்) கூறுகிறது!

அரசமைப்புச் சட்டப்படி அதில் தப்பில்லை!

----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

தேசிய மொழி, ஆட்சி மொழி, அலுவல் மொழி 

என்பனவற்றுக்கு இடையில் வரையறுக்க இயலாத 

வேறுபாடெல்லாம் எதுவும் இல்லை. JUGGLARY! 


இந்திதான் இந்தியாவில் அதிகாரபூர்வமான 

மொழி என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.  


இந்தியாவின் ஆட்சி மொழி எது?

ஆட்சிமொழி = (official language) 

 இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று

அம்பேத்கார் எழுதிய அரசமைப்புச் சட்டம் 

தெளிவாகக் கூறுகிறது.


"The official language of the Union shall be 

Hindi in the Devanagari script".

(Indian constitution article 343)


தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்ட இந்தியே 

இந்தியாவின் ஆடசிமொழி என்று இந்திய 

அரசமைப்புச் சட்டம் ஷரத்து 343 கூறுகிறது.


எனவே ஸ்மோட்டோ நிறுவனம் தமிழர்களுக்கு 

இந்தி தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது 





இயல்பே. 


இந்திக்கு இந்த அளவு முக்கியத்துவம் 

தேவையற்றது. இந்தியானது உற்பத்தியில் 

இருக்கும் மொழியும் அல்ல. இந்தி அறிவியல் 

மொழியும் அல்ல.


இந்த ஷரத்தை நீக்க வேண்டும்.

இதற்குப் போராட வேண்டும்.

இதற்கு இந்தி எதிர்ப்பு என்னும் கபட நாடகம் 

ஆடும் யாரும் தயாராக இல்லை.  



ஆட்சி மொழி தேசிய மொழி அலுவல் மொழி 

எல்லாமே இந்திதான் இந்தியாவில்!

இவற்றுக்கு இடையில் வரையறுக்க இயலாத 

வேறுபாடு எதுவும் இல்லை. Mere jugglery! 


நியூட்டன் அறிவியல் மன்றம் 




வாசகர்களே,

நீங்கள் உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் 

சொல்லுங்கள். இந்தி எதிர்ப்பு என்று போலிக் 

கூச்சல் போடும் யாராவது அரசமைப்புச் 

சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் 

ஷரத்து 343ஐ நீக்க வேண்டும் என்றும் 

குரல் கொடுத்து இருக்கிறார்களா?



மிஸ்டர் ஷா ஜஹான்,

உங்களுக்கு நான் எதுவும் கற்றுத் 

தரவில்லை. தரவும் விரும்பவில்லை.

நீங்களாக உங்களின் 

அறியாமையை வெளிப்படுத்தினீர்கள்.


மொழிபெயர்ப்பு விஷயமாக உங்களைப் 

போன்றோருடன் நான் விவாதிக்க 

விரும்பவில்லை. 

பேதை கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று 

என்பது போல நீங்கள் செயல்படுகிறீர்கள்.

இது இழிந்த குட்டி முதலாளித்துவம்!


By the by, what is your academic qualification 

என்பதைத் தெரியப் படுத்தினால் நல்லது.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 

அணியுமாம் தன்னை வியந்து.







சீமான் குரல் கொடுத்தாரா? இல்லை.

பொழிலன் குரல் கொடுத்தாரா? இல்லை.

திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் 

குரல் கொடுத்தார்களா? இல்லை.


திருமாவளவனோ  ரவிக்குமாரோ எம்பிக்கள்

என்ற முறையில் நாடாளுமன்றத்தில் 

ஷரத்து 343ஐ ரத்து செய்ய வேண்டும் என்று 

என்றாவது குரல் கொடுத்தார்களா?


இல்லை, இல்லை.

அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்தை எதிர்த்துப் 

பேசினால் எம்பி பதவியோ எம்எல்ஏ பதவியோ 

பறிபோய் விடும்.


திமுக எம் எல் ஏக்கள் 10 பேரின் MLA பதவியை

அன்றைய சபாநாயகர் பி ஹெச் பாண்டியன் 

ரத்து செய்தாரே? நினைவு இருக்கிற்தா??


கனிமொழி என்றாவது நாடாளுமன்றத்தில் 

ஷரத்து 343ஐ ரத்து செய்ய வேண்டும் என்று 

குரல் கொடுப்பாரா?


இந்த 343ஆவது பிரிவுதான் இந்தியை  ஆட்சி 

மொழி ஆக்கிய ஷரத்து என்ற உண்மையாவது 

சீமானுக்குத் தெரியுமா?


பெ மணியரசன் என்றாவது ஷரத்து 343ஐ நீக்கச் 

சொல்லி மக்களை ஆயத்தப் படுத்தி இருக்கிறாரா?   


ஷரத்து 343ஐ காகிதத்தில் எழுதி, அந்தக் 

காகிதத்தைத் தீ வைத்து எரிக்க 

திருமாவளவனோ, ரவிக்குமாரோ, மார்க்சிஸ்ட் 

வெங்கடேசனோ, கனிமொழியோ தயாரா?

ஒருநாளும் செய்ய மாட்டார்கள்.        

  

எனவே இந்தி எதிர்ப்பு என்பது போலித்தனம்!

இங்குள்ள இந்தி எதிர்ப்புக் கயவர்கள் அத்தனை 

பேரும் பித்தலாட்டமும் மோசடியும் செய்து 

மக்களை ஏமாற்றும் கயவாளிப் பயல்கள்.


மகாத்மா காந்தி இந்தியாவுக்குச் செய்த கணக்கற்ற 

தீமைகளில் இந்தியை ஆட்சி மொழியாக்கியதும் 

ஒன்று. கடைசி வரை இந்தியை ஆட்சி மொழியாக

ஏற்றுக் கொள்ள மறுத்தார் அம்பேத்கார். ஆனால் 

காந்தி இந்தியைக் கொண்டு வந்து இந்தியாவை 

நாசமாக்கி விட்டுப் போய்ச் சேர்ந்தார்.  

-------------------------------------------------------------------------

சுதந்திரம் அடைந்த அதே மாதத்திலேயே 

அதாவது 1947 ஆகஸ்டு மாதம் 29ஆம் 

தேதியன்றே அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு 

(CONSTITUTION DRAFTING COMMITTEE)

அமைக்கப் பட்டு விட்டாது. இதன் தலைவராக 

அம்பேத்கார் நியமிக்கப் பட்டார். எனவே 

காந்தியின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்ட 

வரைவுக் குழுவின்மீது 1947 ஆகஸ்டு முதலே 

சக்தி மிக்க செல்வாக்கைச் செலுத்தின. 


ஆட்சி மொழி மட்டுமல்ல எந்த ஒரு 

விஷயத்திலும் காந்தியின் கருத்துக்கு எதிராக 

யாரும் எதையும் எழுதி விட முடியாது. எனவே 

இந்தியாவின் ஆட்சிமொழி இந்திதான் 


என்பதில் காந்தி தனது கருத்தை சாகும் 

வரை அனைவரிடமும் வலியுறுத்திக் 

கொண்டே இருந்தார். அதை மீறும் 

சக்தி நேருவுக்கோ அம்பேத்காருக்கோ 

இல்லை.   

  


இக்கட்டுரை அம்பேத்காரைப் பற்றிய 

திறனாய்வு இல்லை. இந்தியாவின் 

அரசமைப்புச் சட்டம் ஷரத்து 343ன் படி 

இந்திதான் ஆட்சிமொழி என்ற உண்மையைக் 

கூறுவதும் அது பற்றிய பிரக்ஞையை 

ஏற்படுத்துவதும்தான் இக்கட்டுரையின் 

நோக்கம்.


இந்திதான் ஆட்சிமொழி என்பது fait accompli

ஆகும். அதாவது முடிந்து போன விஷயம் ஆகும்.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இதுவரை 

எத்தனை முறை திருத்தப் பட்டது?

105 முறை திருத்தப் பட்டுள்ளது.

இந்திதான் ஆட்சிமொழி என்ற ஷரத்தை நீக்கும் 

பொருட்டு ஏதேனும் திருத்தம் கொண்டு 

வரப் பட்டதா? இல்லை, இல்லை.


எனவே இந்தி எதிர்ப்பு என்ற கூச்சல்கள் 

99.99999999 சதவீதம் போலியான கூச்சலே.

இதை எனது கட்டுரை நிரூபித்து உள்ளது.  

  



இதுவரை அரசமைப்புச் சட்டம் 105 முறை 

திருத்தப் பட்டது. இந்திதான் ஆட்சிமொழி 

என்ற 343ஆம் ஷரத்தை ரத்து செய்ய ஏதாவது 

திருத்தம் கொண்டு வரப்பட்டதா? இல்லை!




நீங்கள் எனக்குத் தமிழ் கற்றுத் தர 

வேண்டாம், மிஸ்டர் ஷா ஜஹான்.

OFFICIAL LANGUAGE = ஆட்சி மொழி.

இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.


ரைட் மிஸ்டர் ஷா ஜஹான். நீங்கள் 

வாட்சப்பில் படித்ததை எல்லாம் 

என்னிடம் சொல்லிக் காட்ட வேண்டாம். 

HINDI IS OFFICIAL LANGUAGE

என்பதன் பொருள் ஏனைய மொழிகள் 

அனைத்தும் UNOFFICIAL என்பதுதான்.


இந்தியாவில் ஒரே ஒரு மொழிதான் 

சகல அதிகாரமும் படைத்த மொழி.

அதுதான் இந்தி. அதை OFFICIAL 

LANGUAGE என்று அழைக்கிறது இந்திய 

அரசமைப்புச் சட்டம்.


மற்ற மொழிகள் எந்த அதிகாரமும் 

இல்லாதவை. அவை UNOFFICIAL.   


காணியொழி 


343ஐ ரத்து செய் என்று கனிமொழி

ஏதேனும் திருத்தம் கொண்டு வந்தாரா?

திருச்சி சிவா ஏதேனும் திருத்தம் 

கொண்டு வந்தாரா?


திருமமாவளவன், ரவிக்குமார் ஆகிய 

விசிக ஆசாமிகள் அல்லது அன்புமணி 

போன்ற பாமக ஆசாமிகள் இப்படி 

யாராவது கொண்டு வந்தார்களா?


இல்லை, இல்லை.

இவர்கள் அனைவரும் போலிகள்.

இந்தியை ஒன்றும் செய்ய முடியாது என்று 

இவர்களுக்குத் தெரியும்.

இந்தியை ஆட்சிமொழி என்ற 

அந்தஸ்தில் இருந்து நீக்குவதற்கு 

இவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.


ஷரத்து 343ஐ மக்கள்மத்தியில் பரவலாக்க 

நான் ஒருவன் மட்டுமே முயன்று வருகிறேன்.


343 போக இன்னொரு ஷரத்தும் இருக்கிறது.

அது இந்தியைக் கட்டாயம் ஆக்குகிறது.

அதுதான் ஷரத்து 351.


ஷரத்து 351ன் ஆங்கில வாசகங்கள் பிவருமாறு:

(ஆங்கிலம் தெரியாதவர்கள் தெரிந்த எவரிடமாவது 

கேட்டுக் கொள்ளுங்கள்).இந்திய முன்னேற்ற 

ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்கிற 

கட்டளையைக் கொண்டது இந்த ஷரத்து 351.

        ஐஐ யை 



பல ஆண்டுகளுக்கு முன்பே ஷரத்து 343 பற்றிக் 

கூறினேன். விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றேன்.

குட்டி முதலாளியம் சீந்தவில்லை.


அப்போதே ஷரத்து 351 பற்றியும் கூறினேன்.

குட்டி முதலாளியம் சீந்தவில்லை.


ரோமாபுரியில் அடிமைகளுக்கு முதுகிலும் 

நெற்றியிலும் சூடு போட்டு நம்பர்களைப் 

பொறித்து இருப்பார்கள்.


அது போலவே தமிழ் அடிமைகளுக்கு 

நெற்றியில் ஷரத்து 343ம் 

முதுகில் ஷரத்து 351ம் சூட்டுக்கு கோலால் 

பொறிக்கப் பட்டுள்ளன.


அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்த இரு 

ஷரத்துக்களையும் நீக்க வேண்டும்.

இந்தி எதிர்ப்பு என்று கூச்சலிடும் 

எந்தப் போலியும் இதற்குத் தயாராக இல்லை.



ஷரத்து 343

ஷரத்து 351

இந்த இரண்டையும் தீ வைத்து எரிக்க நான் தயார்.

கனிமொழி தயாரா?

திருமாவளவன் தயாரா?

சீமான் தயாரா?

பெ மணியரசன் தயாரா?

இன்னும் பல்வேறு கயவாளிகள் தயாரா? 


எல்லாரும் போலிகள்!

இவர்களை அன்று காங்கிரஸ் மிரட்டி 

ஒடுக்கி வைத்திருந்தது.


இன்று பாஜக இவர்களின் முதுகில் 

சூடு போட்டு இவர்களை அடிமை ஆக்கி விடும்.

இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவர்கள் போலிகள்.


      

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக