புதன், 13 அக்டோபர், 2021

 அணுஉலை பற்றி அறிந்து கொள்வோம்!

மிகவும் எளிமையான விளக்கம்!

---------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------

1) அணுகுண்டில் இரண்டு விதம்! 

அணுக்கருப் பிளவு (nuclear fission) மற்றும் 

அணுக்கருச் சேர்ப்பு (nuclear fusion).


2) ஒரு கனமான யுரேனியம் அணுக்கருவைப் 

பிளந்து அணுகுண்டு (nuclear bomb) செய்யப் 

படுகிறது. 


3) இரண்டு மெல்லிய அணுக்கருக்களைச் சேர்த்து

ஹைட்ரஜன் குண்டு எனப்படும் thermo nuclear bomb 

செய்யப் படுகிறது.


4) ஆனால் அணுஉலைகளைப் பொறுத்தமட்டில்

அணுக்கருப் பிளவின் (nuclear fission) அடிப்படையில் 

மட்டுமே அணுமின்சாரம் தயாரிக்கப் படுகிறது.


5) ஒரு அணுஉலையில் (reactor) மூன்று விஷயங்களை

கவனம் கொள்ள வேண்டும்.

அ) அணுஉலையின் எரிபொருள் (fuel)

ஆ) அணுக்கரு பிளவுறுதலை ஒரு கட்டுக்குள் 

வைக்கவல்ல moderator எனப்படும் மட்டுப்படுத்தி.

இ) அணுஉலையில் core பகுதியில் உண்டாகும் 

வெப்பத்தை வெளியேற்ற வல்ல குளிர்விப்பான் 

(coolant). ஆக fuel, moderator, coolant என்ற மூன்றும் 

முக்கியம்.


6) அணு மின்சாரம், அணுகுண்டு ஆகிய இரண்டுக்கும் 

ஒரே தொழில்நுட்பம்தான். அணு மின்சார 

உற்பத்தியின்போது அணுஉலையில் உள்ள 

moderator அணுக்கரு பிளவுறுதலை, அதன் 

தொடர் வினையை (chain reaction) கட்டுப் படுத்தி 

ஒரு வரம்புக்குள் வைக்கிறது.


அணுகுண்டு தயாரிப்பின்போது எத்தகைய 

மட்டுப் படுத்தலும் இல்லாமல் கட்டுப்பாடற்ற 

அணுக்கரு வினை நடைபெறும்.

Controlled chain reaction = அணுமின்சாரம்.

Uncontrolled chain reaction = அணுகுண்டு.     

-------------------------------------------------------------

தொடரும் 

-----------------------------------------------------


அணுஉலையில் முக்கியத்துவம் உடைய 

பல கூறுகள் உண்டு. அவை அனைத்தையும் 

இக்கட்டுரைத் தொடரில் விளக்கப் போவதில்லை.


அணுஉலை மற்றும் அணுமின்சாரம் குறித்து 

எழுதப்படும் பத்திரிகைக் கட்டுரைகள்,

விவாதங்கள், பேச்சாளர்களின் பேச்சுக்கள் 

ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும் 

மிகவும் பிரதானமான விஷயங்களைப் 

பற்றி மட்டும் இத்தொடரில் ஒரு அறிமுகம் 

செய்ய உள்ளேன்.


இக்கட்டுரைத் தொடர் ஒரு ஆர்வமுள்ள 

வாசகரை மேலும் படிக்கத் தூண்டும்.

அப்படிப் படித்து அவர் தேவையான 

அறிவைப் பெற இக்கட்டுரை உதவும்.

மிகவும் சுருக்கமாக எழுதவே 

திட்டமிட்டு உள்ளேன். 

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக