செவ்வாய், 5 அக்டோபர், 2021

 advocate Rathnam in whatsapp

----------------------------------------

நான் ஊரில் கோழி மேய்த்துக் கொண்டிருந்தேன். கோழிக்குஞ்சுகள் என்மீது பாசமாக ஏறி விளையாடும். அதேபோல் இரண்டுக்கும் மேற்பட்ட குட்டிகளைச் சில ஆடுகள் பெற்றெடுக்கும். அந்த குட்டிகளுக்குப் பசும்பாலை பாட்டிலில் ஊற்றி அவைகளுக்கு கொடுக்கும் வேலையை செய்து வந்தேன். அந்த குட்டிகள் பாசமாக முன்னங்கால்களை தூக்கி சுற்றிக்கொண்டு என்னிடம் விளையாடும்.
இந்த வாய் பேச முடியாத பறவைகள், கால்நடைகள் இவைகள் காட்டுகின்ற நன்றி உணர்வை மனித சமூகத்தில் ஒரு பிரிவு மக்களிடம் துளியும் பார்க்க முடியாது, கேடுகெட்ட பிறவிகளாக பிணம் தின்னிகளாக சுற்றுகிறார்கள்.
என்னை நன்கு தெரிந்திருந்தும் விசிக கும்பல் கூச்சம் அற்று பொய்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் சாதி பார்ப்பவன் இல்லை. எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பம். என்னுடைய உறவினர்கள் ஆதிக்கச் சாதியினரை சார்ந்தவர்கள். எங்கள் குடும்ப நிலத்தில் பலவித சாதியைச் சார்ந்தவர்கள் பணியாற்றுவார்கள், தலித் மக்களும் பணியாற்றுவார்கள். ஆதிக்கச் சாதியை சார்ந்தவர்கள் சிறுவர்களிடம் அவளை தொட்டு விடாதே தீட்டு என்பார்கள். உடனே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களை தொட்டுப் பார்ப்பேன். தொட்டு தீட்டு ஏதும் ஒட்ட வில்லையே என்று காண்பிப்பேன். அவர்கள் இவனுக்கு என்ன ஆச்சு என்று புலம்புவார்கள். இப்படித்தான் நான் கேள்விகளை கேட்டு கேட்டு வளர்ந்தேன். அது இயல்பாகவே என்னை பற்றிக் கொண்டு விட்டது. இதுநாள் வரை அப்படித்தான் வாழ்கிறேன்.
திருமாவளவன், அதைவிட ரவிக்குமார் சிந்தனைச்செல்வன் போன்றோர் என்னுடைய அணுகுமுறையை நன்கு அறிவர். நான் இவர்களிடம் பைசா கூட வாங்கியது இல்லை. ரவிக்குமார் தலித் என்ற பத்திரிகையை தொடங்கினார். என்னிடம் விழுப்புரத்தில் பேட்டி எடுத்தார். தோழர் நீங்கள் எப்படி இவ்வளவு கறாராக வாழ்கிறீர்கள் என்றார். நான் மனிதனாக மட்டுமே வாழ விரும்புகிறேன் என்று பதிலளித்தேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சின்ன வீடு இரண்டு வைத்து இருக்கும் ரவிக்குமாருக்கும் தெரியும். ஒரு சின்ன வீடு வைத்திருக்கிற சிந்தனைச்செல்வனும் என்னை நன்கு அறிவார். ஒரு முறை நெய்வேலி சென்றிருந்தபோது பேருந்து நிலையத்தில் என்னை பார்த்த சிந்தனைச்செல்வன் ஒரு இளைஞரின் அம்மா இறந்துவிட்டதாகவும் அங்கு செல்வதற்கு புறப்படுகிறோம். நீங்கள் அந்த இளைஞனுக்கு சிறையில் இருந்தபோது ஜாமீன் எடுத்திருக்கிறீர்கள். அவருக்கு உங்களை நன்றாக தெரியும். எனவே நீங்களும் என்னோடு வாருங்கள் என்றார். காரில் அவரோடு சென்றேன். அவர் புலம்ப ஆரம்பித்து விட்டார். எங்கள் தலைவரை வின் டிவி தேவநாதன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். சப்ளை செய்கிறார் எங்கள் தலைவரும் அனுபவிக்கிறார். எங்களுடைய அமைப்பு என்னவாகுமோ என்றார். இந்த அசிங்கத்தை என்னிடம் ஏன் சொல்கிறீர்கள் என்றேன். பின்னர் வேறு விஷயங்கள் பற்றி பேசினோம்.
இந்த சிந்தனைச்செல்வன் உடைய பின்னணியை கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். இவர் இன்ஜினியரிங் டிப்ளமா ஹொல்டர். என்எல்சியில் பணியாற்றினார். இவரின் மனைவி தங்கம் பொறுப்பான பெண். கிராமப் பின்னணியில் இருந்து வந்தவர். இவர்களுக்கு 2 மகன்கள். டாக்டரான பெரிய மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக சொல்லுகிறார்கள். இவர் அரசியல் ரீதியாக திருமாவளவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பதாலும், சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாலும் கொஞ்ச தலைக்கனம். இதற்கு முன்பு தான் ஒரு தலைவனாக இருக்கின்ற சூழலில் மனைவிக்கு அந்தஸ்து இல்லாமல் கிராமத்து பெண் என்று ஒரு தலித் குடும்பத்தில் என்ஜினீயரிங் பட்டதாரியான பெண்ணை திருமணம் செய்து கொள்ள அந்த குடும்பத்தினரிடம் அணுகிய போது அவர்களும் ஒத்துக் கொண்டார்கள். அதை மனைவியிடமும் சொல்லி இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வேன் என்று சொல்லி அந்த குடும்பத்தினரை பார்த்து திருமணத்திற்கு உறுதிசெய்ய அனுப்பி வைத்தார். தங்கம் அதிர்ச்சியின் தாக்கத்தோடு அந்த குடும்பத்தினரை பார்த்து அழுதார். அவர்களிடம் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டினார். தான் உடல் ரீதியாக நோய் ஏதும் இல்லாத பெண்ணாக இருப்பதாகவும், இரண்டு மகன்கள் படித்துக் கொண்டிருப்பதாகவும் இந்த பின்னணியில் இன்னொரு திருமணம் எதற்கு? நீங்கள் என்னை பற்றி கவலைபடாமல் உங்கள் மகளை கட்டிக் கொடுக்க சம்மதித்து விட்டீர்கள். உங்கள் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்த உடனே அவர் ஒரு இளம்பெண்ணை தேடுவார். அப்பொழுது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்றார். அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பம் மன்னிப்பு கேட்டு பெண் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தனர். இது ஒரு சிறிய வட்டத்திற்குள் மட்டுமே தெரியும். எங்களது தோழர் மூத்த பொறியாளர் துரைக்கண்ணு 2 மகள்களுக்குத் தந்தை. இருவருக்கும் தற்பொழுது திருமணம் செய்து, சிறப்பாக வாழ வழி செய்திருக்கிறார். அவருக்கு சிந்தனைச்செல்வன்னுடைய அதிர்ச்சியூட்டும் வேலைத்திட்டம் தெரியவந்தது. எனக்கு தொலைபேசியில் இதையெல்லாம் தெரிவித்தார். சில நண்பர்களுக்கும் சொல்லி வைத்துள்ளார். இதை அறிந்த சிந்தனைசெல்வன் எனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தெம்பு இருக்கிறது என்றும், இவருக்கு முடியாவிட்டால் வாயை பொத்திக்கொண்டு வாழ வேண்டியது தானே என்று கொக்கரித்தார். இதுதான் விசிகவின் முன்னோடிகளின் அசிங்கமான வேலைத்திட்டங்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு வழிகாட்ட முடியும். மாமனிதர் அம்பேத்கர் ஒழுக்கமே புத்தநெறி புத்த நெறியே ஒழுக்கம் என்று வாழ்ந்து காட்டியவர். அவரின் பெயரை உச்சரிக்கும் தகுதி துளியும் இல்லை. இந்த கும்பல் என் போன்றோரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று இவர்களது மோசடி சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்து விட்டது. விரைவில் தரைமட்டமாக்கும். அந்த சாதனைகளை இவர்களே நடத்துவார்கள்.
ஆனால் இந்த விசிக கும்பலின் பரவிவிட்ட புற்றுநோய் அவர்களே விரைவில் முடமாக்கி விடும். அவர்களுடைய கட்டப்பஞ்சாயத்து சொத்துக்கள் அவர்களுக்கு பெரும் தீங்கை கொண்டு வர உள்ளது. நான் இந்த வெளியீட்டை அவசரமாக செய்வது ஊடகங்களின் கோயபெல்ஸ் பொய்களை தோற்கடிக்கும் அளவு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள். அதாவது தலித் மக்களின் மேலும் வழக்குகளை அவர்தான் என்னிடம் கொடுத்ததாக தயக்கமில்லாமல் பொய்களை சொல்லி வருகிறார்கள். அப்படி என்றால் வழக்கறிஞர் தொழிலில் வழக்கு பிடித்து வருகிற நபர்கள் உண்டு அவர்களை டவுட் (புரோக்கர்) என்று சொல்வார்கள். அந்த வேலையை செய்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். என்னுடைய இயல்பே பாதிக்கப்பட்ட மக்களுடைய இடத்திற்குச் சென்று நேரிலேயே தகவலை திரட்டிக் கொள்வது, அதற்கு நான் ஏஜெண்டுகளை பயன்படுத்த மாட்டேன். ஒழுக்கங்கெட்ட இந்த சில்லறை மனிதர்கள், கொக்கரிப்பு அதற்கு காரணமே இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் துவங்கப்படவில்லை. ஆதிக்கச் சாதியினர் நடத்தும் தேர்தல் விபச்சாரத்திற்குத் துணை போகும் கட்சிகளாக தான் பரவிக்கிடக்கின்றன. உணர்வுள்ள தோழர்கள் குழுக்களாக தனி நபர்களாக சிதறுண்டு
கிடக்கிறார்கள். இந்த சூழலில் இவர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.
கசமுசா என்று எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் கொஞ்சம் சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் திருவிளையாடல்களை கொஞ்சம் வெளியிடுகிறேன். சுவையாக இருக்கட்டுமே.
திருமாவளவன் ராமசாமி என்ற தன் அப்பா பெயரை தொல்காப்பியன் என்று மாற்றினார். உலகில் எங்கும் நடக்காத மாபெரும் சாதனை. பெயரை மாற்றி விட்டால் உள்ளடக்கம் மாறிவிடுமா? எவ்வளவு கேடுகெட்ட சிந்தனை இவருக்கு. பல பெண்களுடன் தொடர்பு இருந்தது போல் ஒரு நடிகையிடம் தொடர்பு இருந்தது. அந்த நடிகை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்தார். இதை அறிந்த அவருடைய சீடர்கள் சில கார்களில் அந்த நடிகையை கடத்தி வர ஓடினார்கள். ஆனால் திருப்பதி காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டார்கள். காவல்துறையினரும் அவர்கள் பாணியில் விருந்து வைத்தார்கள். இதை வெளியே சொல்லாமல் சென்னை வந்து வைத்தியம் செய்து கொண்டார்கள்.
சரி அவருடைய அடுத்த தோழர் 3 பெயர்களுக்கு சொந்தக்காரர், எங்களுக்கெல்லாம் சிந்தனைச்செல்வன் என்பதுதான் தெரியும். மதுரையில் பெரும் திரளாக கூடி இவரது ரசிகர்கள் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சிந்தனைச் செல்வனசெல்வனும் தன் பெயரை செஞ்சுடர் என மாற்றிக் கொண்டார். அவரிடம் நான் ஏன் இப்படி நடிக்கிறீர்கள் என கேட்டேன். தோழர் மாற்றாமல் இருந்தால் அண்ணன் கோபித்துக் கொள்வார் என்று புலம்பினார். அவரிடம் நான் சொன்னேன். அவர் பெயரை அவர் மாற்றவில்லை அதற்கு ஒரு புத்திசாலித்தனமான பதிலை சொன்னார். தன் பெயர் திருமால்வளவன் அல்ல, திருமாவளவன் என்பதால் மாற்ற வேண்டிய தேவையில்லை என்ற பதிலை சொன்னார். கருணாநிதி இதைக்கேட்டு குறைந்தது இரண்டு நாள் தூக்கத்தில் புலம்பி இருப்பார். தன்னுடைய யுத்தியை காப்பியடித்து தன்னை மிஞ்சி விட்டாரே என்ற ஆதங்கம் அவருக்கு வந்திருக்கும்.
நான் தற்பொழுது கண்ணகி முருகேசன் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை தமிழிலிருந்து ஆங்கிலப் அடுத்த தோழர் தியாகுவிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் ஆர்வத்துடன் பணியை துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழில் உள்ள தீர்ப்பை அப்படியே சில முன்னுரைகளோடு புத்தகமாக பணி செய்து வருகிறோம். வருகிற 10.10.2021 ஞாயிறு அன்று வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளோம். இந்த சூழலில் நான் கடலூர் வந்துள்ளேன். என்னை சந்திக்க, தேர்தலை புறக்கணிக்கும் மக்கள் அதிகாரம் அணியினைச் சார்ந்த தோழர்கள் வந்தார்கள். அவர்களுடன் விசிக வழக்கறிஞர்களும் வந்தார்கள். வந்தவர்கள் எல்லோரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் என்றுதான் நம்பினேன். நாங்கள் யாரும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இயல்பாக நான் திருமாவளவன் உடைய ஒழுக்க கேடுகள், கோடி கோடியாய் சொத்து சேர்ப்பு, அரசியல் பித்தலாட்டங்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டினேன். யாரும் குறுக்கிடவில்லை, அமைதியாக இருந்தனர். அவர்கள் என்னிடம் விடைபெற்றுச் சென்ற பிறகு என்னுடைய வழக்கறிஞர் தோழர் வந்தவர்களில் சிலர் விசிக வழக்கறிஞர்கள் என்று சொன்னார். பின்பு நான் மக்கள் அதிகார தோழர்களிடம் விசாரித்தேன். ஒரு உண்மை வெளிவந்தது. விசிகவைச் சார்ந்த வழக்கறிஞர்கள் யாரும் உங்களை வெறுப்பதில்லை நேசிக்கிறார்கள். அவரின் நிலை அப்படி பிழைப்புக்காக பலர் இந்த முத்திரையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் யாரும் திருமாவளவனிடம் பற்று கொள்ளவில்லை. மாறாக என்னை போன்றவர்களிடம் மனம் திறந்து பேசுகிறார்கள். இவர் விரைவாக அரசியலை விட்டு ஓடி விடுவார் என்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இவரது அசிங்கங்கள் நிறைய தெரியும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இவர்களது முகமூடி சாம்ராஜ்யம் சரியத் தொடங்கிவிட்டது. நாங்கள் அதை விரைவுப்படுத்துகிறோம். யாராலும் இந்த சரிவை தடுத்துவிட முடியாது. விசிகாவில் ஒரு பகுதியினர் கட்டப்பஞ்சாயத்து மூலம் ஏராளமான சொத்துக்களை சேகரித்துள்ளனர். அதில் போட்டி அதிகரித்துள்ளது. எங்களைப் போன்றவர்கள் சற்று ஒதுங்கி இருந்து எங்கள் தலித் மக்களுக்கான சட்ட உதவிப் பணிகளை தளர்வின்றி செய்கிறோம். தற்பொழுது திருமாவளவன் கும்பலின் அடாவடித்தனம் அதிகரித்துவிட்டதால் எங்கள் கவனம் இதை நோக்கி திரும்பியிருக்கிறது. எனவே பவுத்த பொதுவுடைமை இயக்கம் உருவாக்கியுள்ளோம். மக்கள் மூடநம்பிக்கையைப் பரப்பும் மதத்திலிருந்தும் சீரழிவை உருவாக்கும் சாதியத்தின் இருந்தோம் விடுபடவேண்டும். சாதி மறுப்போம், மதம் வெறுப்போம். பௌத்த நெறிகளை உள்வாங்க வைத்து பௌத்த குடும்பங்களாக வளர்த்தெடுப்போம். வருகிற அக்டோபர் 14 அன்று மாமனிதர் அம்பேத்கரும் நாக்பூரில் புத்தம் தழுவியதை நினைவு கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட புத்த குடும்பங்களை மேலவளவு பகுதியில் திரள செய்வோம்.
இந்த அணுகுமுறையை தமிழகமெங்கும் விரிவுப்படுத்துவோம்.
தலித் மக்கள் எழுச்சியை முடமாக்கும் மோசடிகள் என்ற சிறு நூலை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். கவிதா என்ற பணக்கார வீட்டு பெண் திருமாவளவனுக்கு காதலியானார். அவர் திருமணமாகி குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து பார்த்தார். கோவையை சேர்ந்த அவர் குழந்தையின் பிறந்தநாளை திருமாவளவனை அழைத்து நடத்தினார். அந்த குழந்தையை திருமாவளவன் கையில் வைத்திருக்கிற படத்தை நெற்றிக்கண் வார ஏட்டில் வெளியிட்டனர். அதை எடுத்து நாங்களும் அட்டையில் வெளியிட்டோம். கவிதா திருமாவளவன் அவரது கும்பலைச் சார்ந்தவர்கள் மோசடி செய்து விட்டனர் என முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அவர் கோவை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனை சந்தித்தார். ஊடகங்களில் அவரது பேட்டி பரபரப்பாக வந்தது. அதை பார்த்த நான் கோவை சென்று தகவலை திரட்டி ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தினேன். ஜெயராஜ் என்கின்ற வன்னியரசு எனக்கு முன் கோவை வந்துவிட்டார். சட்டக்கல்லூரி தலித் மாணவர்களிடம் பொய்களைச் சொல்லி கூட்டிவந்து பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மோசடி வழக்கறிஞர் ரத்தினம் ஒழிக என மிரண்ட முகங்களோடு முழக்கமிட்டனர். பத்திரிகையாளர்கள் அவர்களை தங்களுடைய செய்தி சேர்க்கும் உரிமையில் தலையிடுவதாக கண்டித்தனர். முழக்கமிட்ட மாணவர்களே பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்துக் கொண்டனர். வெளியேறும்படி கண்டித்தனர். தடுமாறிய அவர்களை நோக்கி காவல்துறையினர் ஒரு குழு அறைக்குள் நுழைந்தது. கழுத்தில் கையை வைத்து அந்த மாணவர்களை இழுத்துச் சென்றனர். காவல்துறையினர் எனக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். அப்படி ஒன்றும் தேவையில்லை. சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சிறிது நேரத்தில் சென்று விடுவேன் என்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.
நான் நாமக்கல் சென்றடைந்தபோது வழக்கறிஞர் நண்பர்கள் தொலைபேசியில் என்னிடம் பேசினார்கள். அந்த மாணவர்களை இரவு பத்து மணிக்கு மேலாகி காவல்துறையினர் விடுவிக்கவில்லை என தெரிவித்தனர். நான் உடனே தொடர்பு கொண்டு விவரம் அறியாத அப்பாவி மாணவர்கள் அவர்களை உடனடியாக விடுவிக்க கேட்டுக் கொண்டேன். அதன்பின் அப்படியே நடந்தது . அந்த மாணவர்களில் ஒருவர் தடா பெரியசாமி உறவினர். அவரும் மற்ற மாணவர்களும் வருத்தம் தெரிவித்தனர். தங்களிடம் பொய்களைச் சொல்லி ஜெயராஜ் என்ற வன்னியரசு கூட்டிவந்து சிக்கலில் மாட்டி விட்டார் என்று அவரை திட்டி தீர்த்தனர். இப்படித்தான் வன்னிஅரசு பவனி வருகிறார். இது எத்தனை நாள்களுக்கு தாக்குப் பிடிக்கும். இவர்கள் அமைத்த சாம்ராஜ்யம் வேகமாக சரிகிறது. அந்த சரிவை இவர்களே உருவாக்குகிறார்கள். மிஞ்சப் போவது எதுவுமில்லை. கொள்ளையடித்த சொத்துகள் விரைவில் இவர்கள் கையில் இருந்து நழுவி விடும். தலித் பெண்களே இவர்களை துடைப்பத்துடன் வரவேற்பார்கள். அதனை இவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. என்னோடு பழக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இவர்கள் சீரழிந்து சீழ் படிகிறதே என்பதுதான் என்னுடைய கவலை.
சுவையை கூட்டுவதற்காக இதனை சொல்லுகிறேன். திருச்சி மாநகரத்தில் மேயர் தேர்தல் நடந்தது விசிகவினர் ஒரு பெண்ணை தேர்தலின் நிறுத்தினர். அவர் வெற்றி பெறவில்லை. அன்று நான் திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பயணியர் விடுதியில் விசிக இளைஞர்கள் தங்கியிருந்தனர். நானும் அங்கு தங்கியிருந்தேன். அப்போது ஒருவர் ஓடிவந்து வேதனைப்பட்டார். எங்கள் தலைவர் எங்கே மாட்டிக் கொள்ளப் போகிறாரோ என்று புலம்பினார். அவர்கள் சொன்ன கதை இதுதான். இவர் தலையை முண்டாசு கட்டிக் கொண்டு ஆட்டோ பிடித்து அந்த பெண்ணின் வீட்டுக்கு அவசரமாக ஓடினார். அவரது கணவர் சென்னை சென்றிருப்பதாக நம்பி அவசரப்பட்ட சென்றார். ஆனால் அவர் திரும்பி விட்டார். அது இவருக்குத் தெரியாது. இதை அறிந்த இளைஞர்கள் ஆட்டோக்களில் ஓடினார்கள். அவரது வீட்டுக்கு அருகில் தடுத்து நிறுத்தி அவரை மீட்டு வந்தனர். அந்தப் பெண்ணுக்கும் ஒப்புதல் இல்லாத சூழல் தான். ஆனால் இவர் அவசரப்பட்டார். அன்று இரவு முழுவதும் மாறி மாறி குடித்துக்கொண்டு இளைஞர்கள், என்னிடம் இவரின் திருவிளையாடல்களின் கதைகளை சொல்லிச் சொல்லி இரவை கழித்தனர்.
நான் இப்படி ஏராளமான கதைகள் அடங்கிய நூல் தயாரித்துக் கொண்டு உள்ளேன். அது வெளிவந்தால் ஒருவேளை, தற்கொலை கூட செய்து கொள்வார். தவிர்க்க முடியாத சூழலில் நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். எனக்கு கவலையாக உள்ளது.
அவ்வப்போது சுவையான இவருடைய திருவிளையாடல்களை நாங்கள் வெளியிடுவோம்.
தொடரும்.....
பொ. இரத்தினம் வழக்கறிஞர் 9442881456

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக