வெள்ளி, 29 அக்டோபர், 2021

 மார்க்சிஸ்ட் புரட்சியாளரின் மகனுக்கு இன்றுதான்

ஜாமீன் கிடைத்தது! ஒரு வருஷ சிறைவாசத்தின் பின்!

-----------------------------------------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

உங்களுக்கு கொடியேரி பாலகிருஷ்ணன் யார் 

என்று தெரியுமா? தெரியாது.  கேரள மாநில

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக

இருந்தவர் இவர்.கேரள மாநிலத்தின் உள்துறை 

அமைச்சராக இருந்தவர். பெரும்புள்ளி!


இவரின் இளைய மகன் பினிஷ் கொடியேரி. இவரை கடந்த 

ஆண்டு அக்டோபர் 30, 2020ல் அமலாக்கப் பிரிவு 

கைது செய்தது. இவர் மீதான 

வழக்கு ஒரு Money laundering case ஆகும்.


இந்தக் கட்டுரை கொடியேரி பாலகிருஷ்ணனின் 

இளைய மகனைப் பற்றிய கட்டுரை. அவரின் 

மூத்த மகன் பினாய் பற்றிய கட்டுரை அடுத்து 

வெளியாகும். பினாய் மீது ஒரு கற்பழிப்பு 

வழக்கு இருக்கிறது. அமீரகத்தில் பினாய் மீது 

ரூ 13 கோடி நிதி மோசடி வழக்கு இருக்கிறது.   

What is Money Laundering?

Money laundering is the illegal process of making large 

amounts of money generated by a criminal activity, such 

as drug trafficking or terrorist funding.     


மார்க்சியப் புரட்சியாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின்

மகன் பினிஷ் கொடியேரி பெங்களூரு பரப்பன 

அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டார்.

அடைக்கப்பட்ட தேதி 29 அக்டோபர் 2020.

இன்றும் அதே தேதி: 29. ஆனால் வருஷம் 2021.


இன்றைக்கு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

சரியாக ஒரு வருஷம் பரப்பன அக்ரஹாரா 

சிறையில் அடைபட்டுக் கிடந்தார் ஊழல் 

புரட்சியாளர் பினிஷ் கொடியேரி. 


365 நாள் கம்பி எண்ணிய பிறகுதான் 

பினிஷ் கொடியேரிக்கு ஜாமீன் கிடைத்தது.

இன்று கொடியேரி வீட்டில் விருந்து. சக்கப் பிரதமன்

செய்து இருக்கிறார்கள்.


சக்கப் பிரதமன் என்றால் என்ன என்று தெரியுமா?

சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை. வாழ்நாளில் 

ஒரே ஒரு முறையாவது சக்கப் பிரதமன் சாப்பாட்டுப்    

பாருங்கள். அது பலாப்பழத்தில் செய்கிற ஒரு 

ஸ்வீட்டு. திருநெல்வேலி, கன்னியாகுமரி,

திருவனந்தபுரம் செல்லுங்கள்; சக்கப் பிரதமன் 

சாப்பிட்டு விட்டு வாருங்கள். வாழ்க்கையில் 

என்றைக்காவது ஒரு நல்ல பொருள் சாப்பிடுங்கப்பா.


கொடியேரியின் மகன் பினீஷுக்கு ஜாமீன் கிடைக்க 

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார்கள்.CPM 

கட்சியினர். கேரளத்தில் பல ஆண்டுகளாக CPM 

கட்சியின் ஆட்சிதான் நடந்து வருகிறது. அவர்களின் 

ஆட்சி நடக்கும்போதுதான் பினிஷ் கைது செய்யப் 

பட்டார். இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


முதல்வர் பினராயி விஜயனே களத்தில் இறங்கியும்

பயனில்லை. முன்னாள் முதல்வரும் சென்ட்ரல் கமிட்டி 

மெம்பருமான அச்சுதானந்தன் எவ்வளவோ முயன்று 

பார்த்தார். சீத்தாராம் எச்சூரி பெங்களூருக்கே வந்து 

ஜாமீனுக்கு முயற்சி செய்தார். பயனில்லை. மகளிர் 

குல மாணிக்கம் பிருந்தா காரத் வந்து பார்த்தார்.

ஜாமீன் கிடைக்கவில்லை.


உண்மையில் இந்த வழக்கு போதை மருந்து 

வழக்குத்தான். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் 

கெஞ்சிக் கூத்தாடியதன் பேரில், MONEY LAUNDERING 

வழக்காகப் போட்டார்கள். போதை மருந்து வழக்காகப் 

போட்டால் (NDPS Act) ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் 

ஆகும் என்பதால் money laundering வழக்காகப் 

போட்டும் ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் 

ஆகி விட்டது.  

 

ஆனால் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்,

போதை மருந்து வழக்கில் கைதானபோதும். 

20 நாட்களுக்குள் ஜாமீன் வாங்கி விட்டார். 

ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் ஆகும் 

என்பதெல்லாம் குப்பனுக்கும் 

சுப்பனுக்கும்தானே தவிர, முஸ்லீம் VIPக்கு அல்ல.   


கேரளா மார்க்சிஸ்ட் 

மாநிலச் செயலாளர் என்ற உயர்ந்த பதவியில் 

இருந்தும் தன் மகனுக்கு ஜாமீன் வாங்க முடியவில்லை 

கொடியேரியால். சீதாராம் யெச்சூரி தலையிட்டும் 

ஜாமீன் கிடைக்கவில்லை.


சல்மான் என்னும் முஸ்லீம் VIP அறிய வகை மானை 

சட்டத்தை மீறி வேட்டையாடி மான் கறியும் மதுவும் 

கலந்து உண்டான். அவன் விடுதலை ஆகி விட்டான்


இதே சல்மான்கான் குடிபோதையில் காரை ஒட்டி 

பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த .  

நாலைந்து பேர் மீது (இவர்களும் முஸ்லிம்களே)

காரை ஏற்றிக் கொன்றான். அவன் விடுதலை 

ஆகி விட்டான்.


இந்த நாட்டின் சட்டங்களாலும் நீதி பரிபாலன 

முறையாலும் சல்மானை கானையோ ஆர்யன் 

கானையோ ஒன்றும் செய்ய இயலாது. உண்மையை 

உரக்கச் சொல்லப் போனால், முஸ்லீம் VIPகள் 

எவ்வளவு கொடிய குற்றங்களைச் செய்திருந்தாலும்         

அவர்களின் மயிரைக்கூட இந்தியச் சட்டத்தாலும் 

நீதிபரிபாலன முறையாலும் புடுங்க முடியாது.

-----------------------------------------------------------------------

பின்குறிப்பு:

நான் கூறிய செய்திகள் எல்லாம் தமிழ்ப் 

பத்திரிகைகளில் வராது. இங்கிலீஷ் தெரியுமா?

தெரிந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளைப் 

படியுங்கள். அல்லது ஆங்கில டிவி சானல்களில் 

செய்தி கேளுங்கள். இங்கிலீஷ் தெரியாது என்றால் 

கொக்கோக சாஸ்திரம் படியுங்கள்.

********************************************* 




   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக