அடிவரவு என்றால் என்ன?
அடிவரவு என்பது நிமோனிக்கா?
===========================
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் படிக்க
வேண்டும். நான் படித்திருக்கிறேன் என்று
சொன்னால் மனப்படமாகத் தெரிந்து
வைத்திருக்கிறேன் என்று பொருள்.
எப்படி மனப்பாடம் செய்வது?
அதற்கு உதவியாக சில ஏற்பாடுகள் உண்டு.
அதுதான் அடிவரவு என்பது.
உரைநடையில் வரி என்று சொல்வதும்
செய்யுளில் அடி என்று சொல்வதும்
தமிழ் மரபு. அடிவரவு என்பதில் உள்ள
அடி என்பது செய்யுளின் அடியைக்
குறிக்கும்.
நாலாயிரம் பாட்டில் முதல் ஆயிரம்
பாட்டைப் பார்ப்போம். அந்த முதல்
ஆயிரத்தில் முதல் 12 பாட்டைப்
பார்ப்போம்.
1 முதல் 12 வரையிலான இந்தப் பாட்டுக்கள்
திருப்பல்லாண்டு என்று பெயர் பெற்றுள்ளன.
இந்தப் பாடல்களை வரிசை மாறாமல்
1 முதல் 12 வரை ஒப்பிக்க வேண்டும்.
அதற்கு உதவியாக திருப்பல்லாண்டு
அடிவரவு உள்ளது. அதில் ஒவ்வொரு
பாடலின் முதல் சீரும்
(அதாவது முதல் வார்த்தை)
வரிசை மாறாமல் எழுதப் பட்டிருக்கும்.
பின்வரும் வரிசையை நினைவில்
கொண்டாலே எளிமையாக இருக்கும்!!
"பல் அடி வாழ் ஏடு அண்டம்
எந்தை தீ நெய் உடுத்து - எந்நாள்
அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்"!
13ஆவது சீர் அடுத்த பகுதியில் உள்ள பாடலின்
முதல் சீரான வண்ணம் என்பதைக் குறிக்கும்.
திருப்பல்லாண்டு முதல் பாடலைப்
பார்ப்போமா!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ,
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு .
---------------------------------------------
பின்குறிப்பு:
அடிவரவு என்பது நிமோனிக் அல்ல.
ஆனாலும் நினைவில் இருத்த உதவி
செய்யும் ஒரு ஏற்பாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக