திங்கள், 11 அக்டோபர், 2021

52 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் 

தாராப்பூர் அணுமின் நிலையம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அடுத்து 

installed capacityயில் 2ஆம் இடத்தில் உள்ளது. 

-------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

1) தாராப்பூர் அணுமின்நிலையம் மகாராஷ்டிர மாநிலம்

தானே மாவட்டத்தில் உள்ளது.


2) எதிர்வரும் அக்டோபர 28ல் 52 ஆண்டுகளை விபத்து 

எதுவும் இன்றி வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.


3) இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1969, அக்டோபர 28ல்

அமெரிக்க உதவியுடன் இந்த அணுஉலை செயல்பாட்டுக்கு 

வந்தது.


4) 1969ல்  BWR எனப்படும் இரண்டு Boiling Water Reactorகள் 

செயல்பாட்டுக்கு வந்தன. பின் PHWR (Pressurised Heavy Water Reactor) 

எனப்படும் இரண்டு அணு உலைகள் 2005ல் மற்றும் 2006ல்

செயல்பாட்டுக்கு வந்தன. 


5) BWR உலைகளின் INSTALLED CAPACITY = 2 x 160 = 320 MW.  

PHWR உலைகளின் INSTALLED CAPACITY =  2 x 540 = 1080 MW.

மொத்தம் = 1400 MW.


6) கூடங்குளத்தில் 2 உலைகள் செயல்படுகின்றன.

அவற்றின் INSTALLED CAPACITY = 2 x 1000 = 2000 MW.

இரண்டாவது இடத்தில் 1400MWவுடன் தாராப்பூர் உள்ளது.


இந்திய அணுமின்சாரத்தின் தந்தை 

ஹோமி ஜஹாங்கிர் பாபா நினைவைப் போற்றுவோம்!

----------------------------------------------------------------

         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக