புதன், 13 அக்டோபர், 2021

இந்தியாவுக்கு சவாலாகத் 

திகழும் போதை மருந்து!

---------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

போதை மருந்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 

மாநிலம் இந்தியாவிலேயே  எது தெரியுமா?

பஞ்சாப் மாநிலம்தான்!


பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தானுடன் எல்லையைப் 

பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தானில் இருந்தும் 

ஆப்கானிஸ்தானில் இருந்தும் போதை மருந்து 

கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப் 

படுகிறது.


பஞ்சாப்புக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கு 

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள் இந்திய 

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள்.


இன்று பஞ்சாப்பின் இளைஞர்கள் அதீத போதை 

மருந்து பயன்பாட்டால்  தங்கள் உயிரை 

இழக்கிறார்கள்.


பஞ்சாப்பில் ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் 

போதை மருந்தால் உயிரிழந்து கொண்டு 

இருக்கிறார்கள்.


எந்த ஒரு அரசும் போதை மருந்து கடத்தலை 

பயன்பாட்டை மூர்க்கத் தனமாக ஒடுக்க 

வேண்டும்.

-----------------------------------------------------------

பின்குறிப்பு:

இணைக்கப்பட்டுள்ள ஆங்கிலச் செய்தித் துண்டுகளைப் 

படிக்கவும்.

**********************************************************   

ராணுவத்தில் சேராதவனே பஞ்சாப்பில் 

கிடையாது என்ற நிலையை 

பாகிஸ்தான் உடைக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து கடத்திக் கொண்டு 

வரப்படும் ஹெராயின் உள்ளிட்ட 

போதை மருந்துகளால் பஞ்சாப்பின் 

இளைஞர்களை குறிப்பாக சீக்கிய 

இளைஞர்களை பாகிஸ்தானின் 

போதை மருந்துகள் ஆட்கொண்டு 

விடுகின்றன.




     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக