ஞாயிறு, 3 அக்டோபர், 2021

போதை மருந்து கடத்தல்!

குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்க முடியாது!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------

காலங்காலமாக இந்தியாவிலும் உலகெங்கும் இரண்டு 

கடத்தல்கள் கன கச்சிதமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

1) தங்கக் கடத்தல் 

2) போதை மருந்து கடத்தல்.


இவற்றில் அவ்வப்போது சிலர் பிடிபடுவதும் இவ்வளவு 

தங்கம் பிடிபட்டது என்றும், இவ்வளவு போதை மருந்து 

பிடிபட்டது என்றும் செய்திகள் வருவதும் உண்டு. 

ஆனால் வழக்கு நடத்தப்பட்டு குற்றவாளிகள் 

தண்டிக்கப்படுவது மிகவும் அற்பமே. இதற்குக் 

காரணம் என்ன? இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.


காங்கிரசும்  குரோனி முதலாளித்துவமும்!

--------------------------------------------------

குரோனி முதலாளித்துவம் இந்தியாவில் 

ராட்சசத் தனமாக வளர்ந்து நிற்கிறது. டாக்டர் 

மன்மோகன்சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சி (2004-2014) குரோனி முதலாளித்துவத்தின் பொற்காலமாக இருந்தது.


கோடானுகோடி அரசுச் சொத்துக்களை குரோனிகள் 

கொள்ளை அடித்தனர். ஒருவன் கூட மாட்டவில்லை.


இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர் டாட்டாவின் 

வோல்டாஸ் நிறுவனச் சொத்துக்களை தமிழ்நாட்டில் 

உள்ள ஒரு குரோனித் தற்குறிப் பெண்மணி டாட்டாவை 

மிரட்டி வாங்கி விட்டார். குரோனிகள் உச்சத்துக்குச்      

சென்ற காலம் அது. மன்மோகன்சிங்கின் ஆட்சியில் 

குரோனிகள் பூலோக சொர்க்கத்தையே அனுபவித்தனர்.


காங்கிரசின் ஆட்சி முடிந்து பாஜகவின் ஆட்சி வந்தது.

காங்கிரஸ் ஆட்சியும் முதலாளித்துவ ஆடசியே.

பாஜக ஆட்சியும் முதலாளித்துவ ஆட்சியே.

காங்கிரஸ் ஆட்சி சரியில்லை என்ற காரணத்தால் 

இந்திய முதலாளிகள் பாஜகவின் ஆட்சியைக் கொண்டு

வந்தார்கள். மந்திரத்தில் மாங்காய் விழுந்தது போல 

பாஜகவின் ஆட்சி வரவில்லை. இந்திய முதலாளித்துவம் 

தனது சொந்த முயற்சியில் பாஜகவின் ஆட்சியைக்

கொண்டு வந்தது.


எங்கும் ஒழுங்கீனம் என்று ஆக்கி விட்டது காங்கிரஸ். 

இந்தியச் சமூகத்தின் முதலாளித்துவத்தை  அழிவுப் 

பாதையில் திருப்பி விட்டு விட்டது காங்கிரஸ் என்று 

இந்திய முதலாளித்துவம் கருதியது.


குறைந்தபட்ச பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்டியே 

ஆக வேண்டும் என்றும் அப்போதுதான் 

முதலாளித்துவ ஆட்சியை நடத்த முடியும் என்றும் 

இந்திய ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தவாதிகள் 

கருதினர்.


அவ்வாறே பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் 

அறிவுறுத்தல்களை வழங்கியது இந்திய 

முதலாளித்துவம். அந்த அறிவுரைகளை 

ஏற்றுக் கொண்டு பாஜக ஆட்சியானது

இந்திய சமூகத்தில் பூர்ஷ்வா ஒழுங்கை 

(Bourgeois order) நிலைநாட்டி வருகிறது.


இங்கு பூர்ஷ்வா ஒழுங்கு என்றால் என்ன என்று 

தெரிய வேண்டும். அநேகமாக அதுபற்றித் 

தெரிந்தவர்கள் குறைவு.


குறைந்தபட்ச ஒழுக்கமும் குறைந்தபட்ச நேர்மையும் 

முதலாளித்துவச் செயல்பாடுகளில் இருக்க வேண்டும்.

அதை உறுதி செய்வது பூர்ஷ்வா ஒழுங்கை உறுதி 

செய்வது ஆகும்.


ஒரு சமூகத்தில் முதலாளித்துவமானது வருமானவரியை 

விதித்தால் அந்த வரியை முக்கால்வாசிப் பேராவது 

ஒழுங்காகக் கட்ட வேண்டும். ஆனால் இந்தியாவில் 

வரிஏய்ப்பு பிசாசுத்தனமாக இருந்தது. இந்த வரிஏய்ப்பை

ஒழித்து வரி வருவாயைப் பெருக்குவது பூர்ஷ்வா 

ஒழுங்கை நிலைநாட்டுவது ஆகும்.


ஒரு சமூகத்தில் கள்ளநோட்டுப் புழக்கம் கட்டுக் 

கடங்காமல் இருக்குமானால் அச்சமுகத்தில் 

பூர்ஷ்வா ஒழுங்கு குலைந்து விட்டது என்று பொருள்.

மோடியின் ஆட்சி இதில் உடனடியாக நல்ல ரிசல்ட் 

காட்ட வேண்டும் என்று இந்திய முதலாளித்துவம் 

வலியுறுத்தியது. அதன்படியே மோடி பணமதிப்பிழப்பு 

உள்ளிட்ட பல்வேறு அரசியல் நடவடிக்கைகளை 

மேற்கொண்டார்.கவனிக்கவும்: பணமதிப்பிழப்பு  

(demonetisation) என்பது அரசியல் நடவடிக்கை!

பொருளாதார நடவடிக்கை அல்ல.


முதலாளித்துவ சமூகத்தில் ஊழல் என்பது தவிர்க்க 

இயலாத ஒன்று. என்றாலும் அந்த ஊழல் மிகவும் 

குறைவாகவும் முதலாளித்துவ ஒழுங்கைக் 

குலைக்காமலும் இருக்க வேண்டும் என்பதுதான் 

முதலாளித்துவத்தின் எதிர்பார்ப்பு. ஆனால் 

மன்மோகன்சிங்கின் ஆட்சி என்பது ராட்சஸத் 

தனமான ஊழல் ஆட்சி. பூர்ஷ்வா ஒழுங்கை 

கடித்துக் குதறிப் போட்டு விட்டது மன்மோகனின் ஆட்சி.


எனவே இந்திய ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவக்  

கோட்பாட்டாளர்கள் பாஜக ஆட்சியில் ஊழல் 

இருக்கக்கூடாது என்று மோடிக்கு கட்டளை இட்டனர்.

அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு  2014 முதல் 

ஊழல் இல்லாமல் இருக்கிறது.     


பூர்ஷ்வா ஒழுங்கு என்றால் என்ன என்று லேசாகவாவது 

புரிகிறதா? புரிந்தால்தான் மேற்கொண்டு எழுதப் 

பட்ட விஷயங்களை வாசித்துப் புரிந்து கொள்ள

முடியும்.


காங்கிரஸ் ஆட்சி என்பது பூர்ஷ்வா ஒழுங்கானது  

முற்றிலும் குலைந்துபோன  ஒரு ஆட்சியைத் தந்தது.

எனவே இந்திய முதலாளித்துவம் காங்கிரசை ஆட்சியை 

விட்டு நீக்கியது.


மோடி தலைமையிலான பாஜக ஆட்சியானது 

குலைந்துபோன பூர்ஷ்வா ஒழுங்கை மீட்டெடுத்து 

வருகிறது. பூர்ஷ்வா ஒழுங்கு என்கிற இந்த ஒரு 

அம்சத்தைத் தவிர, காங்கிரஸ் ஆட்சிக்கும்

பாஜக ஆட்சிக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

இரண்டுமே முதலாளித்துவ ஆட்சிகளே! ஆங்கிலத்தில் 

entropy என்ற ஓர் அற்புதமான சொல் உண்டு. ஒழுங்கு 

குலைந்து கொண்டே இருப்பதைச் சுட்டிக் காட்டும் 

சொல் அது. இயற்பியலில் பெருமளவு பயன்படும் அச்சொல்லை 

இங்கு வேண்டுமென்றே தவிர்த்து உள்ளேன். 


தங்கக் கடத்தலும்  போதைமருந்து கடத்தலும் 

காங்கிரஸ் ஆட்சியில் நடந்தன. மோடி ஆட்சியிலும்

அது போலவே கடத்தல்கள் நடைபெற்று வருகின்றன.


ஆனால்  இரண்டு ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

காங்கிரஸ் ஆட்சியில் கடத்தல்காரர்கள் பிடிபடுவது 

இல்லை. அவர்களைப்  பிடிப்பது இல்லை.

கண்துடைப்பாக சிலரைப் பிடித்து அவர்கள்மீது கேஸ் 

போடுவார்கள். அவ்வளவுதான். ஏனெனில் பூர்ஷ்வா 

ஒழுங்கு என்பது காங்கிரஸ் ஆட்சியில் கிடையாது.


மோடி ஆட்சியிலும் முன்பு போலவே இப்போதும் கடத்தல்கள் 

நடைபெற்று வரும்போது,கடத்தல்காரர்களால் தப்பிக்க 

முடிவதில்லை. மோடி ஆட்சி கடத்தல்காரர்களைப் பிடித்து விடுகிறது. ஏனெனில் பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்ட 

வேண்டுமெனில் கடத்தலைத் தடுக்க வேண்டும். அதற்கு 

கடத்தல்காரர்களைப் பிடிக்க வேண்டும்; சிறையில் 

அடைக்க  வேண்டும். வழக்கைச் சரியாக நடத்தி 

கடத்தல்காரர்களுக்கு தண்டனை வாங்கித் தர 

வேண்டும். பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்ட 

இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற தேவை 

மோடி அரசுக்கு இருக்கிறது. அதனால் மோடி அரசு 

போதை மருந்து கடத்தலை, தங்கக் கடத்தலை

அக்கறையுடன் பிடித்து வருகிறது.


 பினராயி விஜயனின் ஆட்சியில் நடைபெற்ற தங்கக் 

கடத்தலை, கேரள அரசு ஊழியரான ஸ்வப்னா என்ற 

பெண்மணி மூலம் மிகப்பெரிய விஐபிக்கள் பங்கு பெற்ற 

தங்கக் கடத்தலை மோடி அரசு பிடித்திருக்கிறது.

இது ஒன்றும் புதிய கடத்தல் அல்ல. காலங்காலமாக 

நடந்து வரும் அருதப் பழசான கடத்தல்தான். காங்கிரஸ் 

ஆட்சியில் பிடிக்காமல் விட்டார்கள். மோடி ஆட்சியில் 

பிடிக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்!


இப்போது மும்பை கப்பலில் நடந்த பெரும் பணக்கார

வீட்டுக் கழிசடைகள் பங்கேற்ற போதை விருந்தில் 

ஒரு பெரிய விஐபியின் மகன் மாட்டிக் கொண்டான்.

மும்பைக் கூத்தாடி ஷாருக் கானின் மகனான அர்யன் கான்

இன்று பிடிபட்டு விட்டான். 


இதுவே காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் என்ன 

ஆயிருக்கும்? யாரையும் பிடிக்க மாட்டார்கள். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஷாருக் கான் வீட்டுக்குப் 

போய் லஞ்சக் காசை வாங்கிக் கொண்டு, அந்தப் பணத்தில் 

பட்டுச் சேலை வாங்கிக்  கொண்டு போய் வைப்பாட்டியிடம் 

கொடுப்பார்கள்.  

  

உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இன்று தலைகீழாக 

நின்று தண்ணீர் குடித்தார்கள். அதிகாரிகளை 

வெளிப்படையாகவே மிரட்டினார் சரத் பவார்.

ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லையே!


அதே நேரத்தில் ஷாருக் கானின் மகனைக் கைது 

செய்து சிறையில் அடைத்து வழக்கு நடத்தி 

தண்டனை வாங்கி கொடுப்பது என்பதெல்லாம் 

கற்பனையில்தான் நடக்கும். இதுதான் இன்றைய 

இந்திய சமூக நிலைமை.


ஏனெனில்  சம்மந்தப் பட்ட அதிகாரி முதல் அமித்ஷா 

வரை ஷாருக் கானின் தரப்பில் இருந்து அழுத்தம் 

அதிகமாக இருக்கும். ஷாருக் கானின் மகனையெல்லாம் 

இந்தியாவில் எந்த மோடியால் தண்டிக்க முடியாது.


போதையில் காரை வெறித்தனமாக ஓட்டி  பல பேரைக்

கொன்றானே கூத்தாடி சல்மான் கான். அவன் மயிரைக் 

கூட இந்தியாவின் சட்டத்தால் புடுங்க முடியவில்லை.

சர்வதேச அளவில் அழுத்தம் வரும். தாவுத் இப்ராகிமின் 

ஆட்கள்தான் இன்னும் மும்பை சினிமா உலகை 

தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு 

இருக்கிறார்கள். அவர்களை மீறி அமித்ஷாவோ 

மோடியோ ஷாருக் கான், சல்மான் கான், அர்யன் கான்

ஆகியோர் மீது கைவைக்க முடியாது. மீறிக் கைவைத்தால் 

என்ன நடக்கும் தெரியுமா? Present tense, future tense போட 

வேண்டிய இடங்களில் past tense போட வேண்டியது வரும்.


எனவே பின்வருமாறு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்!   

மோடியோ அமித்ஷாவோ அஜித் தோவலோ யாராக  

இருந்தாலும் இவர்களால் ஷாருக் கானின் மகனின் 

மயிரைக் கூடப் புடுங்க முடியாது. சல்மான் கானின் 

மயிரைப் புடுங்க முடிந்ததா! இல்லை அல்லவா!

அது போலத்தான் இதுவும்!

**************************************************  



 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக