புதன், 13 அக்டோபர், 2021

 போதை மருந்து வழக்கில் 8 மாதம் சிறையில் 

இருந்த மகாராஷ்டிர அமைச்சரின் மருமகன்!

-----------------------------------------

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனை, 

காங்கிரஸ். சரத் பவாரின் கட்சி ஆகிய 

கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.  

பாஜக ஆட்சியில் இல்லை; எதிர்க் கட்சியாக

மட்டுமே இருக்கிறது.


வாரிசு அரசியல் அடிப்படையில் சிவசேனையின் 

உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்வராக 

இருக்கிறார். சரத் பவரின் கட்சியான NCP 

சார்பாக 16 அமைச்சர்கள் உள்ளனர். துணை 

முதல்வர் அஜித் பவார் NCP கட்சியே.


மேற்கூறிய NCP அமைச்சர்களில் நவாப் மாலிக் 

என்பவரும் ஒருவர். இவர் சிறுபான்மை நலத்துறை 

அமைச்சராக இருக்கிறார்.


இவரின் மகளைத் திருமணம் புரிந்தவர் சமீர் கான்.

அமைச்சரின் மருமகன் சமீர் கான் இந்த ஆண்டு 

ஜனவரி 9ஆம் தேதியன்று (09.01.2021) NCB எனப்படும் 

போதை மருந்து தடுப்பு அமைப்பால் கைது 

செய்யப் பட்டார்.     


NDPS சட்டத்தின் சில பிரிவுகளில் சமீர் கான் 

கைது செய்யப் பட்டார். எட்டு மாதங்கள் 

சிறையில் இருந்த பின்னர், செப்டம்பர் மாத 

இறுதியில் அவருக்கு ஒரு நீதிமன்றம் சில 

நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. 

தற்போது அமைச்சரின் மருமகன் ஜாமீனில் 

இருக்கிறார்.


(NCB = Narcotics Control Bureau

NDPS = Narcotics Drugs and Psychotropics 

Substances Act 1985. இந்தச் சட்டம் ராஜிவ் காந்தி 

பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டம்.

இது பற்றி படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்).   


இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள்?

விடை தெரியுமா? தெரியாது. நல்லது. 

28 மாநிலங்கள் உள்ளன. இந்த 28 மாநிலங்களில் 

போதை மருந்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் 

பட்ட மாநிலம் பஞ்சாப். இரண்டாவதாக பாதிக்கப் 

பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரம். 


மகாராஷ்டிரத்தில் சினிமாக் கூத்தாடிகளால் 

போதை மருந்துக் கலாச்சாரம் இளைஞர்களிடம் 

இளம் பெண்களிடமும் பரவி உள்ளது. பாதாள 

உலகக் கயவாளிகள் (under world dons) சரத் பவார் 

போன்ற இழிந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடன் 

போதை மருந்து வியாபாரத்தில் கொடி கட்டிப் 

பறக்கின்றனர். பாலிவுட் கூத்தாடிகளுக்கு

போதை மருந்து பாகிஸ்தானில் இருந்து கடத்தப் 

பட்டு வருகிறது.


தற்போது கூத்தாடி ஷாருக் கானின் மகன் 

ஆர்யன் கான் போதை மருந்து கடத்தல் 

மற்றும் பயன்பாடு ஆகிய குற்றங்களுக்காகச் 

சிறையில் உள்ளான். பல்லாயிரம் கோடி 

ரூபாய் செலவில் ஒரு பவர்புல் ப்ராஜக்ட்டுடன் 

கூத்தாடி ஷாருக் கான் தன் மகனுக்கு ஜாமீன் 

பெற களத்தில் இறங்கி உள்ளான்.


இந்தியாவின் போலி முற்போக்குகள் 

போலி இடதுசாரிகள் 

போலி மதச்சார்புக் கயவர்கள் 

என்று இழிவு சக்திகள் அத்தனை பேரும் 

ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, மக்களுக்கு 

எதிராகவும் போதை மருந்துச் சீரழிவுக்கு 

இலக்கான கான் குடும்பத்துக்கு ஆதரவாகவும் 

கூலி வாங்கி கொண்டு கூச்சல் இடுவதைப்  

பார்க்கிறோம்.      

 

ஆனால் நீதி இறுதியில் வெல்லும். இடையிலும் 

வெல்லும். ஏன், தொடக்கத்திலும்கூட வெல்லும்.

***********************************************

பின்குறிப்பு:

கமெண்ட் பகுதியில் கொடுத்துள்ள பத்திரிக்கைச்

செய்திகளைப்  படியுங்கள். அவை ஆங்கிலத்தில் 

உள்ளன. தமிழ் ஏடுகளில் இந்தச் செய்திகள் 

வராது. எனவே படியுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக