கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை
அனுபவித்தபின் விடுதலையான
முன்னாள் வளர்ப்பு மகன் வி என் சுதாகரன்!
-------------------------------------------------------------
கோடி கோடியாக கொள்ளை அடித்த
கயவாளிப் பயல் வி என் சுதாகரன் தற்போது
பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில்
இருந்து விடுதல் ஆகியுள்ளான்.
நீதிபதி குன்ஹா இவனுக்கும் 4 ஆண்டு சிறை
தண்டனை விதித்தார். இறுதி மேல் முறையீட்டில்
4 ஆண்டு சிறை உறுதி ஆனது
இத்துடன் ரூ 10 கோடி அபராதம் கட்ட வேண்டும்
என்று தீர்ப்பானது. அபராதத் தொகையை
சுதாகரன் கட்டவில்லை; கட்ட இயலவில்லை.
கட்ட இயலவில்லை என்றால் பணம் இல்லை என்று
பொருள் அல்ல. எல்லாம் கறுப்புப் பணம். அதை
எடுத்து நீதிமன்றத்தில் கட்டி மாட்டிக் கொள்ள
சுதாகரன் குடும்பத்தினர் விரும்பவில்லை.
எனவே, அபராதம் கட்டத் தவறினால் மேலும்
ஓராண்டு சிறை என்ற தீர்ப்பின்படி, மொத்தம்
5 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து
விட்டு அண்மையில் விடுதலை ஆகி உள்ளான்.
இவனுடைய வாழ்க்கை மற்ற ஊழல் பேர்வழிகளுக்கு
ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக
ஊடகக் கயவர்கள் இவன் குடும்பத்திடம் கவர்
வாங்கிக் கொண்டு இந்தச் செய்தியே வெளியே
வராமல் பார்த்துக் கொண்டனர்.
கோடி கோடியாய் கொள்ளை அடித்து சொத்துக்களாய்
வாங்கிக் குவித்து வைத்திருந்தபோதிலும்,
அபராதத்தொகை ரூ 10 கோடியைக் கட்ட முடியாமல்
ஒரு வருஷம் சிறைத் தண்டனையை அனுபவித்த
இந்தக் கயவனின் வாழ்க்கை யாருக்கெல்லாம்
பாடம்? ஏற்கனவே சிறையில் இருந்த, ஊழல்
புரிந்து வழக்குகளில் சிக்கி உள்ள ஊழல்
பேர்வழிகள் அனைவருக்கும் பாடம்!
------------------------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக