திங்கள், 18 அக்டோபர், 2021

ஜப்பானில் சாதி

==================== 

சாதி என்ற சாக்கடையை இந்து மதம் கொண்டு வந்ததாக சொல்லுகிறீர்கள்...

ஜப்பானில் எந்த இந்து மதம் சாதியையும் தீண்டாமையையும் கொண்டு வந்தது?...
ஜப்பானில் "ஈட்டா (Eta)" என்பது மிகவும் கீழான ஒதுக்கப்பட்ட சாதி.. ஈட்டா என்றால் பெரும் குப்பை என்று பொருள்படும்... "ஈட்டா சாதியினர் சாதாரண மனிதரில் ஏழில் ஒரு பங்குக்குத் தான் சமம்" என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைகூட ஜப்பான் நீதிமன்றங்கள் சொல்லி இருக்கின்றன... இவர்கள் வசிக்கும் கிராமங்களை "ஈட்டா-முறா (eta-mura)" என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது...
ஜப்பானில் "புராக்குமின் விடுதலை முன்னணி (Burakumin Liberation League)" என்றொரு அமைப்பு இருக்கிறது... இந்து மதத்தில் மட்டும் தான் சாதி இருக்கிறது என்று பேசுபவர்களுக்கு இந்த BLL என்றால் என்னவென்று தெரியுமா? ..
தாழ்ந்த சாதியினர் வசிக்கும் கிராமங்களை "புராக்குமின்" என்று அழைக்கிறார்கள்.. புராக்குமின் என்றால் "கிராமத்து ஆட்கள்" என்றும் பொருள்படும்..
இதில் சுமார் 4,000 சாதியினர் (communities) இருப்பதாகவும், இவர்களின் மக்கள்தொகை சுமார் 10 லட்சம் மக்கள் என்று ஜப்பான் அரசின் 1993 மக்கள்தொகை கணக்கீடு சொல்கிறது... சுமார் 6,000 சாதியினர் இருப்பதாகவும், சுமார் 30 லட்சம் மக்கள்தொகை என்றும் BLL அமைப்பினர் சொல்கிறார்கள்...
"புராக்குமின் கிராமப் பட்டியல்" என்ற ஒன்று கள்ளச்சந்தையில் இருப்பதையும், இந்தப் பட்டியலை பயன்படுத்தி - இந்தக் கிராமங்களில் பிறந்தவர்களை ஜப்பானிய நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்வதில்லை என்பதையும் 1970ல் BLL அமைப்பினர் கண்டு பிடித்தார்கள்..
இப்போது வரை இதை எதிர்த்து போராடி வருகிறார்கள்...

1 கருத்து: