ஞாயிறு, 31 அக்டோபர், 2021

 தினங்களுக்கு முன்பு இந்தியா நடத்திய அக்னி5 ஏவுகணை சோதனை பற்றி இதுவரை கூறப்படாத கூடுதல் தகவல்களை க் கூறும் பதிவு இது.

(நண்பர் Achu Appu அவர்களின் விருப்பப் பதிவு)
# கூடுதல் தகவல் (1) அக்னியின் பயண தூரம் 5500கிமீ எப்படி சோதனையில் உறுதி செய்யப் படுகிறது?
#அக்னி5ஏவுகணை,5500கிலோ மீட்டர் பயணித்து அணுஆயுதங்களை இலக்கின் மீது போட்டு ஆசீர்வாதம் பண்ணி எதிரியை துவம்சமாக்குற ஜாதி! இது அனைவரும் அறிந்ததே!
#இதை ஏவப் பொருத்தமான இடம் ஒரிசாவில் உள்ள டாக்டர் கலாம் தீவு! இதன் தெற்கே பல ஆயிரம் கிமீ பரப்புக்கு இந்துமாக்கடல் வியாபித்து உள்ளது! (பதிவின் கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்).
#அதாவது அக்னியின் அறிவிக்கப்பட்ட பயணதூரம் 5000கிமீக்கு மிகவும் மேலதிக தூரம்! போகும் வழி பூரா கடல் நீரின் மீதே சோதனையின் போது இந்த அக்னி5 பறந்து செல்லும்!
#அக்னி5 போகும் 5000 கிமீ நீள பாதைக்கு பக்கத்திலோ, வழியிலோ ஏதாவது நாடுகளோ, தீவுகளோ இருந்தால் அவர்களுக்கு முதலில் எச்சரிக்கைத் தகவல் போகும்! யப்பா கொஞ்சம் உஷாரா இரு, நாங்க ஏவுகணை சோதனை நடத்தறோம்னு ஒரு வார்னிங்!
#இத்தனைக்கும், சோதனை ஏவுகணையில் அணுக்குண்டு , அல்லது வீரியமான வெடிமருந்து சங்கதி சமாச்சாரம் ஏதும் இருக்காது! குறைந்த வீரியமுள்ள வெடிபொருளே அந்த ச் சோதனை ஏவுகணையோட கூம்பு போன்ற மூக்குப் பகுதியில் இருக்கும்!(இதை war head என்பர்).
#அது குறைந்த அளவு சேதாரத்தையே உண்டாக்கும் அளவுக்கு தம்மாத் தூண்டு கணக்குல இருக்கும்! தாக்கப்பட வேண்டிய இடத்துல இலக்காக ஒரு காயலான் கடைக்குப் போக வேண்டிய கப்பலையோ, பெரிய மிதக்கும் அளவிலான மிதவையையோ கடலில் மிதக்க விடுவாங்க!
#அல்லது அங்கே ஏதாவது கொஞ்சம் மினிசைஸ்( ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளது )குட்டித் தீவும் இருக்கலாம்! நம்ம கச்சத்தீவு மாதிரின்னு வையுங்க! இல்ல நம்ம"சென்னை தீவுத்திடல் சைஸ் கூட இருக்கும்!
#அங்கே போய் இந்த சோதனை ஏவுகணை விழும் முன்பு அதற்கான வழிகாட்டப்பட்ட பாதையில் தான் அது போகிறதா என வழியிலேயே விஷேச ரேடார்கள் பொருத்திய கப்பல்களோ, உளவு விமானங்களோ அதை க் கண் கொத்திப் பாம்பாய்க் கண்காணிக்கும்! இந்தப்பாதை நம்ம ஒலிம்பிக்ல சோப்ரா சார் ஈட்டியை ஏவினார் பாருங்க அந்த மாதிரி ஒரு பரவளையப் பாதை!
#அதாவது ஈட்டி மேலெழுந்து கீழே பூமியில் விழற வரை அதன் கூர்முனை பயணிக்கும் பாதை போன்றது இந்தப் பரவளையம்(parabolic curve). 10th ஜியாமெட்ரி மாணவனுக்கு சற்றுப் பரிச்சயமானது இந்தப் பரவளையம்! அடிக்கடி"பரீட்சைல வந்து பயமுறுத்தும் சமாசாரம்!
#பரவளையப் பாதையின் ஆரம்பம் ஒரிசா கலாம் தீவு! ஏவின உடன் 600கிமீ உயரம் வரை மணிக்கு 24000கிமீ வேகத்தில் மேல் எழும்புதல்! உச்ச"பட்ட உயரத்தை த் தொட்டவுடன் மணிக்கு 18000 கிமீ வேகத்தில் கீழிறங்குதல். பிறகு புவி ஈர்ப்பு விசையோடு சேர்ந்து இலக்கை த் தாக்குதல். இவைதாம் அக்னியோட முக்கிய வேலைகள்!
#தாக்க வேண்டிய பாயிண்டுக்கு ஒரு முப்பது"அடி தூரம் இப்படியோ அப்படியோ தள்ளி விழுந்து அடிக்கும் துல்லியமுள்ள ஏவுகணை அக்னி5.
#இப்படியோ அப்படியோ தள்ளி விழுவதை CEP என்பர்(Circular error probable). ஆனால் அணு ஆயுதம் வீசும் போது இந்த CEPக்கு மதிப்பு இல்லை! தள்ளி விழுந்தாலும் அணுக்கதிரியக்கம் பாதிப்பது உறுதி!என்ன பொல்லாத CEP!
#இப்ப நடத்தியது எட்டாவது சோதனை! குறி தவறாம நல்ல பிள்ளையாக சமர்த்தாக அடிச்சிட்டு சீனாவைப் பார்த்து நமட்டு சிரிப்பு"சிரிக்குது"அக்னி5.
#சீன ஏவுகணைகள் இப்படி அடிக்கடி சோதிக்கப்படாதவை! அதனால்"அவற்றின் தரமும் பெரிய கேள்விக்குறி!
#அமெரிக்கா தென் சீனக் கடலில் தனது விமானந்தாங்கிக் கப்பல்களை"அனுப்பி சீனாவை மிரட்டிய"போது தனது DF31B(Dong Feng 31B) கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளை அங்கே சோதித்தது சீனா!(Dong-புயல், Feng-காற்று).
#ஆனால் அவை எதுவும் இலக்கைத் தாக்காமல் தென் சீனக்கடலில் கப்பலேறியது சீனாவின் மானம்! நிஜமாகவே அமெரிக்கா கூட சீனா சண்டை போட்டால் சீனாவின் ஜம்பம் சந்தி சிரிப்பது சர்வ நிச்சயம்!
கூடுதல் தகவல்(2)
#அக்னி5 லேட்டஸ்ட் சோதனையில் கார்பன் இழைகளால் ஆன உலோகம் பிளஸ் அலோகம் கலந்த பல அடுக்கு மல்ட்டி லேயர் பாடியால் செய்யப்பட்ட புதியரக அக்னி ஏவுகணை சோதிக்கப்பட்டது!
#முழுசா"உலோக பாடின்னா அக்னி யோட எடை 50000கிலோ! கார்பன் மல்ட்டி லேயர் (multi layer)பாடி யூஸ் பண்ணா எடை 20000கிலோ தான்! ஆக பழைய எடை அதிகமான"அக்னியை விட இது குறைந்த எரி பொருளையே சாப்பிட்டு"புகையை விடும்!
# அல்லது அதே எரிபொருளை வைத்து தூரத்தையோ வேகத்தையோ கூடுதலாக வைத்து புதிய அக்னியை மாற்றி அமைக்கலாம்!
கூடுதல் தகவல்(3)
#அக்னியை இடைமறிப்பது சீனாவால் முடியுமா?
முடியவே முடியாது! மாக்24(ஒலியைப் போல 24மடங்கு வேகம்)ல் பறக்கும் அக்னியைத் தடுக்க இதுவரை தொழில் நுட்பம் எதுவும் கிடையாது!
#ரஷ்ய ஏவுகணைத்தடுப்பு S400 ஆயுதம் சீனாவசமுள்ளது! அதிலுள்ள இடை மறிப்பு ஏவுகணை குட்டிப் பிசாசுகள் அதிக பட்சம் மாக்10(ஒலியைப் போல 10மடங்கு) வேகத்தில் பயணிக்கும்! ஆனால் மாக்24ல் பயணிக்கும் அக்னி5 அவற்றிடம் சிக்காது!
#அப்படி அக்னியை இடை மறிக்க அது போகும் பாதையை அறிந்து அங்கெல்லாம் S400 நிறுவினால் இது சாத்தியமாகலாம்! ஆனா நடை முறைக்கு ஆகாத செயல் படுத்த முடியாத டுபாக்கூர் முயற்சி இது!
#தவிர S400 ன் மூளையே அதன் சக்தி மிக்க ரேடார் தான்! அக்னி பயணிக்கும் போது அதன் உடலில் இருந்து பல எதிர் சிக்னல்களை வெளியிட்டு அதன் மூளையைக் குழப்பி இந்த S400 ரேடாரை பையித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்!
கூடுதல் தகவல்(4)
இதிலிருந்து"12தனித்தனி குண்டுகளை(மல்ட்டிப்பிள் இன்டி பென்டண்ட் ரீ என்ட்ரி"வெஹிக்கிள் -Mirv) தனித் தனி இலக்குகள் மேல் ஏவலாம்!
#நம்ம"ஊரு ரேஷன் கடைகளில் அரிசியோட"மிளகு, சீரகம், வெந்தயம் எல்லாம் ஒரு பதிமூனு அயிட்டம்"போனஸாத் தராங்களே அது"மாதிரி இது!"ரேஷன் வாங்கறவனுக்கு"களிப்பு, சீனாவுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு! அக்னியின்"உச்சகட்ட கோரமுகம் இந்த Mirv மேட்டர்!
#கூடுதல் தகவல்(5)
இந்த அக்னி5 பாடி"கார்பன் இழைகளால் ஆனது! ஆக அது தனது சொந்த சிக்னல்களை வெளியிடா"விட்டாலும் அதோட கார்பன் பாடி எந்த"ரேடார் சிக்னலையும் ஜீரணித்து விடும்! ஆக S400 அல்லது எந்த கில்லாடி கிங்கர ரேடாருக்கும் அக்னி சிக்காது பறக்கும்!
கூடுதல் தகவல்(6)
#SFC எனப்படும் (strategic force commond) உச்சகட்ட சோதனைக்குழு தான் இப்போது சோதனையை நடத்தி உள்ளது! இவர்களின் சோதனைகளில் தேறுவது யானை வாய்க்குள் மாட்டிய கரும்பை மீட்பது போல!மேலும் அவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப் படுபவை! சீனா சமாசாரம்"இப்படி அல்ல!
கூடுதல் தகவல்(7)
#அக்னி5ஐ ஏவ வேண்டிய லாகின், பாஸ்வேர்டு(Login , Pass word) பூரா சிங்கம் மோடிஜி"கைவசம்! அவர் லாகின் போட்டு"பாஸ்வேர்டு குடுத்ததும் அக்கினி பறந்து படுவேகமாகப் போயி சீனாவை ஆசையாக நலம் விசாரிக்கும்!
#பாகிஸ்தான்"பல்லை உடைக்க ஒரு 500 பிரமோஸில்"மினி சைஸ் அணுஆயுதம் வைத்து"அடித்தால் அரை மணி"நேரத்தில் அவனுக்கு"மீளாத சொரக்கம்!
தேவைன்னா"லாகின் குடுத்து பாஸ்வேர்டு போடத் தயங்காத இரும்பு மனிதர் மோடிஜி கையில் என் பாரதம் பாதுகாப்பாக இருப்பது நம் அனைவருக்கும் நிம்மதி"தானே!
தேசம்"போற்றும் பதிவுகள் தொடரும்! உங்கள் விருப்பமும் உண்டு! அடுத்த"பதிவில் S400ஐ விபரமாக எளிமையாக புரியவைக்கிறேன்! சற்றுக் காத்திருங்கள்!
வாழ்க புண்ணிய பூமி பாரதம்
ஜெய்ஹிந்த்!
S.K.Sankaran BE., MS.,
ஆட்டோமொபைல் பொறியாளர்(ஓய்வு)
அஷோக்லேலண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக