வெள்ளி, 4 ஜனவரி, 2019

மீண்டும் இயங்கியல் வகுப்புகள்!
வரும் ஞாயிறு 06.01.2019 மாலை 5.30  மணி முதல்.
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
இடம்: 5. மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம்,
சென்னை 600 024.(:மேனகா கார்ட்ஸ் எதிரில்)
அடையாளம்: சேகர் எம்போரியம்
கோடம்பாக்கம் மேம்பாலம் எதிரில் உள்ள தெரு.

நாள்: ஞாயிறு 06.01.2019 மாலை 5.30 மணி முதல்

பொருள்: இயங்கியல் வகுப்பு-6
மீள்பார்வை மற்றும் சார்பியல் கொள்கை,
குவான்டம் கொள்கை, இயங்கியல்.

உரை: பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம். 
அனைவரும் வருக!
 **************************************************

இன்று ஜனவரி 4 நியூட்டன் பிறந்த  நாள்!
கிரகோரி காலண்டரின்படியும்,
உலகப் பொதுக் காலண்டரின்படியும்
ஜனவரி 4 நியூட்டன் பிறந்த நாள்!
இந்த உலகம் நியூட்டனுக்கு கடன் பட்டுள்ளது!  


மருதுபாண்டியன் திருப்பூர் குணா செந்தழல் ஞானம்

அ கா ஈஸ்வரன்

சிலம்பரசன் சே 
     கிருஷ்ணசாமி தியாகராஜன்

திரு தேனமுதன் Then Amudhan அவர்களின் பதிவு!
------------------------------------------------
பொருள்முதல்வாதம் கற்பீர்!
இன்று ஜனவரி 4. குவான்டம் இயற்பியல் அறிஞர்
எர்வின் ஷ்ராடிங்கர் மறைந்த நாள்.

ஷ்ராடிங்கரின் சமன்பாடுகள் பற்றி எதுவும்
தெரியாமல், பொருள்முதல்வாதம் கற்றதாக
எவரும் கூற இயலாது.

எனினும் ஷ்ராடிங்கரின் சமன்பாடு பற்றி அறிய
இயற்பியலில் வலுவான அடிப்படையும்
நல்ல புலமையும் அவசியம்.
*************************************** 
ஷ்ராடிங்கரின் பூனை
---------------------------------------
ஷ்ராடிங்கரின் பூனை என்ற தலைப்பில்
நான் எழுதிய கட்டுரையை அறிவியல் ஒளி
இதழில் படிக்கலாம்.


அறிவியலைக் கற்காமல்
பொருள்முதல்வாதத்தைக் கற்க முடியாது.
அறிவியல் கற்காதவன் பொருள்முதல்வாதம்
கற்றதாகக் கூறுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்  


நித்யானந்தா ஐன்ஸ்டீனுக்கு எதிராகக் கூறிய
எதுவும் சாரமற்றதாகவும் விமர்சிப்பதற்கான
அருகதையற்றதாகவும் உள்ளது.


Schrodinger's cat is unparalleled in the history of science.
Butterfly analogy was used by Edward Lorenz while explaining
chaos theory and this is less popular than Schrodinger's cat.

Russian Doctor Pavlov made many experiments
with dogs.Thus animals and insects were used by scientists and
of all these, Schrodinger's cat stood first in explaining the
complex quantum theory to the laymen.


aangilam

ஆங்கிலம் அறிக!
hedgehog என்றால் என்ன?
porcupine என்றால் என்ன?
பொருள் அறிக! விடை தருக!
  

நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்கள்
முதலிலேயே விடை எழுத வேண்டாம் என்று
கேட்டுக் கொள்கிறேன்.

இலக்கணக் குறிப்புத் :தருக:-
1. வாடாமலர் 2. ஆடிய பாதம்
3. தேங்காய் பழம் 4. அவனும் அவளும்.
5.தேடிய செல்வம்.

பண்ணட்டுமே! நல்லதுதானே!
 

-
 ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
என்பதற்கு இணையான ஆங்கிலப்
பழமொழி இதுதான். சிறந்த ஆங்கிலப் புலமை
உடைய கோதை நாச்சியார் விடையளித்து விட்டார்.
நன்றி..


கடந்த 11 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும்
அறிவியல் மாத இதழே அறிவியல் ஒளி. இது
கடைகளில் கிடைக்காது. சந்தா கட்டிப்
பெற்றுக்  கொள்ள வேண்டும். இதழின் ஆசிரியர்
திரு நா சு சிதம்பரம் அவர்களைத் தொடர்பு
கொள்ளவும்.
அலைபேசி: 94440 63497.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in 


இலக்கணக் குறிப்பு:
கேள்வியும் பதிலும்!
------------------------------------
கேள்வி:
இலக்கணக் குறிப்புத் :தருக:-
1. வாடாமலர் 2. ஆடிய பாதம்
3. தேங்காய் பழம் 4. அவனும் அவளும்.
5.தேடிய செல்வம்.

பதில்கள்:
------------------ 
1. வாடா மலர் = ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
 வாடாத என்றால்  ஈறு கெடவில்லை.
வாடா என்றால் ஈறு கெடுகிறது.
 வாடிய என்றால் நேர்மறை; வாடாத என்றால்
எதிர்மறை.

2. ஆடிய பாதம் = பெயரெச்சம்.
ஆடிய என்பதில் செய்தி முற்றுப்பெறவில்லை.
எனவே இது எச்சம். ஆடினான் ஆடினாள் என்றால்
அது முற்று. செய்தி முற்றுப்பெற்ற நிலை.
ஆடிய தேடிய படித்த உண்ட பூத்த சமைத்த
ஆகியவை எச்சங்கள். ஆடினான், தேடினான்,
படித்தான், உண்டான், பூத்தது, சமைத்தான்
ஆகியவை முற்றுப் பெற்றவை.

ஆடிய என்னும் எச்சம் பாதம் என்னும் பெயரைத்
தழுவி நிற்பதால் இது பெயரெச்சம்.
 
எச்சம் பெயரைத் தழுவுமாயின் பெயரெச்சம்.
வினையைத் தழுவுமாயின் வினையெச்சம்.
படுத்து உறங்கினான் என்பதில் படுத்து
என்னும் எச்சம் உறங்கினான் என்னும் வினையைத்
தழுவி நிற்பதால் அது வினையெச்சம் ஆகும்.

கடித்துத் தின்றான், பார்த்து மகிழ்ந்தான் ஆகியவை
வினையெச்சங்கள்.

3. தேங்காய் பழம் = உம்மைத்தொகை
தேங்காயும் பழமும் என்று வர வேண்டும்.
அவ்வாறு வராமல் உம் என்பது (உம்மை)
தொக்கி நிற்கிறது. அதாவது மறைந்து
நிற்கிறது. எனவே இது உம்மைத்தொகை.

ஆண் பெண், பட்டி தொட்டி, நாடு நகரம்,
வெற்றிலை பாக்கு, கணவன் மனைவி,
தாய் தந்தை ஆகியவையும் உம்மைத்தொகையே.

4. அவனும் அவளும் = எண்ணும்மை.
ஆணும் பெண்ணும், ஆடும் மாடும் போன்றவற்றில்
வரும் உம்மை எண்ணுபம் எண்ணுப் பொருளில்,
எண்ணிக்கைப் பொருளில் வருவதால் எண்ணும்மை
ஆகும். உம்மைத்தொகை எண்ணும்மை இரண்டுக்கும்
உள்ள வேறுபாட்டையும் அறிந்திடுக.

5. தேடிய செல்வம் = பெயரெச்சம்.
-----------------------------------------------------------------------

சரியான விடையும் விளக்கமும்
-------------------------------------------------------
ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்
( Native speakers of English) porcupine, hedgehog இரண்டையும்
ஒரே பொருளில் பயன்படுத்துகிறார்கள். முள்ளெலி,
முள்ளம்பன்றி, கடலில் வாழும் ஒருவகை முள் மீன்
ஆகிய அனைத்தையும் குறிப்பிட hedgehog
பயன்படுகிறது. அதாவது முதுகில் முள்ளடர்ந்த
விலங்கு என்றே இரண்டும் பொருள்படுகின்றன.
Cambridge அகராதி முள்ளடர்ந்த விலங்கு என்றே
குறிப்பிடுகிறது. 

மேலும் விவரம் அறிய விரும்புவோர் Cambridge Dictionaryஐப்
புரட்டவும்.  விடையளித்த அனைவருக்கும் நன்றி.

------------------------
நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
பதிவுகளைப் படிக்காதவர்கள்
நிறையவே இழக்கிறார்கள்!
பெருத்த சேதாரத்துடன் கூடிய இழப்பு!
------------------------------------------------------------------

வரம்பற்ற குரங்குகள் தேற்றம்!
புதிய தமிழ்ச் சொற்களுக்கு வழி வகுக்குமா?
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
வரம்பற்ற குரங்குகள் தேற்றம் என்று ஒரு
தேற்றம் நிகழ்தகவில் உண்டு.
Infinite monkey theorem என்று ஆங்கிலத்தில்
கூறுவார்கள்.

நிறையவே குரங்குகள் வேண்டும்.
குரங்குகளின் எண்ணிக்கை வரம்பிலியாக
(infinity) இருக்க வேண்டும். அந்தக் குரங்குகளிடம்
தட்டச்சு எந்திரத்தின் கீ போர்டுகளைக்
(keyboards) கொடுக்க வேண்டும். அவைகள்
டைப் அடிக்கும்.

குரங்குகள் எவ்வளவு நேரம் டைப் அடிக்கும்?
நேரத்துக்கு வரம்பு கிடையாது.
வரம்பற்ற நேரம் (infinite time) அவை டைப் அடிக்கும்.

அப்படி வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற நேரம்
டைப் அடிக்குமானால், அக்குரங்குகளால்
சேக்ஸ்பியரின் நாடகங்கள் முழுவதையும்
மிகச்சரியாக டைப் அடித்துக் கொடுக்க இயலும்.

ஒவ்வொரு குரங்கும் காமா சோமா என்று டைப்
அடிக்கும்தான். என்றாலும் வரம்பற்ற குரங்குகள்
வரம்பற்ற நேரம் டைப் அடிப்பதால், அவற்றுள்
சேக்ஸ்பியரின் படைப்புகள் சரியாக டைப்
அடிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு
மிக மிக அதிகம். இதுதான் வரம்பற்ற குரங்குகள்
தேற்றம் (infinite monkey theorem)

சிந்தித்துப் பாருங்கள். இது ஒரு உறுதியாக
நடக்கக் கூடிய நிகழ்வாக இருக்கக் கூடும் (sure event).

காமா சோமா என்று தமிழ் எழுத்துக்களைத்
தட்டச்சு செய்தால், அவற்றில் இருந்து 
அர்த்தமுள்ள சொற்களை உருவாக்க இயலும்
என்று சில கணிப்பொறி நிபுணர்கள் முயற்சி
செய்து .வருகின்றனர். அவர்களின் முயற்சி
பலனளிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
****************************************** 

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக