வெள்ளி, 11 ஜனவரி, 2019

நக்சல்பாரிகளின் புலித்தலையை
மோந்து பார்க்க முயலும் நாய்கள்!
நானும் ரௌடிதான் என்னும் வடிவேலுவின் காமெடி!
புலித்தலையை நாய் மோத்தல்  இல்!
கீழ வெண்மணி அழித்தொழிப்பின்
ஒளிவீசும் உண்மைகள்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
வர்க்க எதிரிகளைப் படுகொலை செய்வது
(Annihilation of class enemies) என்ற நடைமுறையை
நக்சல்பாரி இயக்கம் 1970களில் கடைப்பிடித்து
வந்தது. கொடிய நிலப்பிரபுக்கள் நாடு முழுவதும்
படுகொலை செய்யப்பட்டனர்.

லிபரேஷன் கட்சியும் மக்கள் யுத்தக் கட்சியுமே
70களில் 80களில் பெரிய நக்சல்பாரிக் கட்சிகளாக
இருந்தன. இரு கட்சிகளுமே அழித்தொழிப்பை
மேற்கொண்டிருந்தன.

வர்க்க எதிரியைக் கொன்று அந்த ரத்தத்தில்
கை நனைக்காதவன் கம்யூனிஸ்ட்டே அல்ல என்பது
சாரு மஜூம்தார் தலைமையிலான நக்சல்பாரிக்
கட்சி முன்வைத்த முழக்கங்களில் ஒன்றாகும். 

கீழ வெண்மணிப் படுகொலையை நிகழ்த்திய
கோபால கிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது
(அதாவது படுகொலை செய்தது) நக்சல்பாரிக்
கட்சியான லிபரேஷன் கட்சியே.

நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு, ஒரு குறிப்பிட்ட
நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளில் லிபரேஷன்
கட்சியின் ஆயுதப் படைக்குழு கோபாலகிருஷ்ண
நாயுடுவை அழித்தொழித்தது.

கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு புரட்சிகர மக்கள்
நீதிமன்றம் வழ்ங்கிய  தீர்ப்பின்படி அழித்தொழிக்கப்
படுவதாக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும்
நாயுடுவின்  அருகில் வீசியது ப டைக்குழு.

இந்த அழித்தொழிப்பு பற்றி லிபரேஷன் கட்சியின்
அதிகாரபூர்வ ஆங்கில ஏடான லிபரேஷன் ஏட்டிலும்
செய்தி வெளியிடப் பட்டது. நடைபெற்ற
அழித்தொழிப்புக்கு லிபரேஷன் கட்சி பொறுப்பேற்றது.

நீதிமன்றத்தில் ஏற்கப்பட்ட குற்றப் பத்திரிகையிலும்
"சாரு மஜூம்தாரின் அழித்தொழிப்பு வழியைப்
பின்பற்றி, கோபால கிருஷ்ண நாயுடுவை எதிரிகள்
படுகொலை''  செய்ததாகக் கூறப்பட்டு உள்ளது.

இவை அனைத்தும் அழித்தொழிப்பு நடந்து முடிந்த
மறுநாளிலும் அடுத்தடுத்த நாட்களிலும் வெளியான
தமிழ் ஆங்கில நாளிதழ்களில் வெளியாயின.

அழித்தொழிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்ததுமே
நக்சல்பாரிப் படைக்குழுவினர் அனைவரும்
தலைமறைவாகி விட்டனர். காவல்துறையின்
அடக்குமுறையை எதிர்பார்த்து, நக்சல்பாரிக் கட்சி
அணிகளும் படைக்குழுவினருடன் சேர்ந்து
தலைமறைவாகி விட்டனர். நக்சல்பாரி இயக்கம்
சார்ந்த எவரும் அந்த ஊரில் இல்லை என்பதுடன்
அவர்கள் அனைவருமே மாவட்ட எல்லைக்கு
வெளியே கட்சி வழிகாட்டுதலின்படி,
பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர்.

கொலையாளிகளைத் தேடி ஊருக்கு வந்த காவல்
துறையால் உண்மைக் குற்றவாளிகள் ஒருவரையும்
பிடிக்க முடியவில்லை; உண்மைக் குற்றவாளிகள்
யாரென்றும் அறிய முடியவில்லை கடும்
நிர்ப்பந்தத்தில் இருந்த காவல்துறையானது
யாரையாவது கைது செய்து கணக்குக் காட்ட
வேண்டிய நெருக்கடியில் இருந்தது. எனவே
உள்ளூர் ஆட்கள் சிலரைக் கைது செய்தது.
அப்படிக் கைது செய்யப் பட்டவர்களில் சிலர்
உள்ளூர் திராவிடக் கழகத்தினர். அவர்களுக்கும்
நாயுடுவின் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும்
கிடையாது. கைதான திகவினர் அனைவருமே
நிரபராதிகள். பின்னர் அனைவருமே விடுதலை
செய்யப் பட்டனர்.

பல ஆண்டுகள் கழித்து,  அதுவும் பல
பத்தாண்டுகள் கழித்து, இன்று கொளத்தூர் மணி
அவர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை
அழித்தொழித்தது திராவிடர் கழகம்தான் என்று
உரிமை கோருகிறார். மனித நாகரிகமே வெட்கித்
தலை  குனியக்கூடிய மானமற்ற பொய் இது.

திராவிடர் கழகமோ அவர்களின் தலைவர்
பெரியாரோ முற்றிலும் வன்முறைக்கு
எதிரானவர்கள். அழித்தொழிப்பு, அதாவது
படுகொலை செய்வது என்பதை ஒரு
போராட்டமாக அவர்களால் கனவில் கூட
நினைத்துப் பார்க்க இயலாது.

ஆனால் நக்சல்பாரிகளோ, "அழித்தொழிப்பு
என்பது வர்க்கப் போராட்டத்தின் உச்ச கட்டம்"
(Annihilation is the highest form of class struggle) என்று
ஏற்றுக் கொண்டவர்கள். அந்தக் காலத்தில்
வினோத் மிஸ்ரா தலைமையிலான கட்சிக்கு
"only form" என்றே பெயர்.

உண்மை இவ்வாறு இருக்க குட்டி முதலாளித்துவத்
தயிர்சாதத் தலைவர்கள் அழித்தொழிப்புக்கு
உரிமை கோருவது பேதைமையுள் எல்லாம்
பேதைமை ஆகும்.

பசுத்தோல் போர்த்திய புலி என்று நாம் கேள்விப்
பட்டிருக்கிறோம். புலித்தோல் போர்த்திய பசு
பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். சாதுவான பசு
வீரமிக்க புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு
தானும் புலிதான் என்று காட்ட முயற்சி செய்வது
பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்பின்வரும் குறளில்.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலித்தோல் போர்த்துமேய்ந் தற்று.

இந்தக் குறளுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு
"நானும் ரௌடிதான்" என்று கூறிக்கொண்டு
வலுவில் போலீஸ் வேனில் ஏறும் காட்சியை
மனதில் கொள்ளுங்கள்.

கொளத்தூர் மணி அவர்களின் போலியான உரிமை
கோரல் விமர்சனத்துக்கே அருகதை அற்றது
என்பதாலேயே நக்சல்பாரிகள் அவரை உரிய
கடுமையுடன் விமர்சிக்கவில்லை.

ஆங்கிலத்தில் pooh poohed என்று ஒரு தொடர் உண்டு.
இகழ்ச்சியுடன் நிராகரிப்பது என்று அதற்குப் பொருள்.
கொளத்தூர் மணியின் பேச்சு அத்தகையது.

ஆனால் ஒரு குட்டி முதலாளித்துவத் தயிர்சாதம்
கொளத்தூர் மணியின் உரிமை கோரலுக்குப்
பதிலளித்தே ஆக வேண்டும் என்று  தொடர்ந்து
குரைத்து வருகிறது. இந்தத் தயிர்சாதம் காட்டுகிற
அதீத ஆர்வத்தைப் பார்த்தால், கியூ பிராஞ்சு
போலீசுக்கு தகவல் அளிக்கும் போலீஸ் இன்பார்மரின்
(police informer) அக்கறை தன்னை வெளிப்படுத்திக்
கொள்கிறது.

இந்தக் கட்டுரையை அப்படியே காப்பி எடுத்து
கியூ பிராஞ்சு  மட்டுமல்ல,இஸ்ரேலின் மொசாத்துக்கும்
இந்தியாவின் CBIக்கும் மேற்படி தயிர்சாதம்
அளிக்கட்டும். இதனால் எல்லாம் நக்சல்பாரிகளின்
மயிரைக் கூட ஒரு பயலாலும் பிடுங்க முடியாது.

இத்துடன் இந்த விவகாரத்துக்கு நாங்கள் முற்றுப்
புள்ளி வைக்கிறோம். இதற்கு மேலும் தொடர்ந்தால்,
A word for a wise and a rod for a fool
என்ற  அடிப்படையில் கணக்குத் தீர்க்கப்படும்.
*******************************************************
 


     
.






       



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக