வெள்ளி, 11 ஜனவரி, 2019

நம் ஊர் எம்.பி.க்களும் ஒரு ஒடிசா எம்.பி.யும்!
எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும் எம்பி!
----------------------------------------------------------------------------
தத்கத சத்பதி (THATHKATHA SATPATHY)!
இவர் ஒரு எம்.பி. நான்காவது முறையாக எம்.பி.யாக 
இருக்கும் இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச்
சேர்ந்தவர். வயது 59தான்; அரசியலில் இளமைதான்
இந்த வயது. இவரின் தொகுதி தென்கனல் (DHENKANAL).
இவர் ஓடிஸா முன்னாள் முதல்வர் திருமதி நந்தினி
சத்பதியின் இளைய மகன் ஆவார்.
**
இவர் ஒரு பத்திரிகையாளர். "தரித்ரி"( DHARITRI) என்ற
நாளிதழின் ஆசிரியர்; உரிமையாளர். இணையதள அன்பர்கள்
"REDDIT" என்ற சமூக வலைத்தளத்தை (website) அறிவார்கள்.
ASK ME ANYTHING என்ற நிகழ்ச்சியை இத்தளம் நடத்தி
வருகிறது. இதில் பங்கேற்று கேள்விகளுக்குப் பதில்
அளித்தார் இவர். இந்தத் துணிச்சல் எத்தனை எம்.பி.க்களுக்கு
இருக்கிறது?
**
நிற்க. இவரை இங்கு நாம் குறிப்பிடக் காரணம் இதுதான்.
NETWORK NEUTRALITYஐ ஆதரித்தும், தனியார் நிறுவனங்களின்
லாப வெறியை எதிர்த்தும் இவர் TRAI தலைவருக்குக்
கடிதம் எழுதி உள்ளார்.
**
நம்மூர் எம்.பி.க்கள் நிலை என்ன? 37 கூமுட்டைகளும்
எந்தக் கோவிலில் தீச்சட்டி எடுத்துக் கொண்டு
நிற்கின்றனவோ?
மற்றக் கட்சிகளின் எம்.பி.க்களும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
மாநிலங்களவை எம்.பி.க்களும் அப்படியே.
எல்லோருமே GOOD FOR NOTHING வகைதான்.
முட்டாளாய் இருந்தால்தானே தமிழ்நாட்டில் MP ஆக முடியும்
என்கிறார்கள் நெட்டிசன்கள்.
------------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு 16/04/2015.
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக