வெள்ளி, 18 ஜனவரி, 2019

வியாழன் கிரகம் சூரியனைச் சுற்றவில்லையா?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
(அதிக நிறை கொண்டிருப்பதால் வியாழன் கிரகம்
சூரியனைச் சுற்றவில்லை என்றும் ஒரு பொதுவான
புள்ளியையே சூரியனும் வியாழனும் சுற்றுவதாக
அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டு இருப்பதாகவும்
ஒரு செய்தி உலவுகிறது. அதன் மீதான அறிவியல்
விளக்கமே இக்கட்டுரை!).
-----------------------------------------------------------------------------------
நமது சூரியன் ஒரு கருந்துளையாக மாறுமா?
Will our son become a black hole?
சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
1) நமது சூரியன் ஒருபோதும் ஒரு கருந்துளையாக
மாறாது. அதற்கான அருகதை நமது சூரியனுக்கு இல்லை.

2) மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும்
பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகியன உண்டு.

3)தன் அந்திம காலத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரம்
இறந்து விடும்போது என்னவாக ஆகும்?
சிவப்பு  ராட்சசன் (Red giant), வெள்ளைக் குள்ளன்
(White dwarf), நியூட்ரான் நட்சத்திரம், கருந்துளை
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக ஒரு நட்சத்திரம்
தன் இறப்புக்குப் பின்னால் மாறும்.  

4) தகுதி அடிப்படையில் பார்த்தால், நமது சூரியன்
சராசரிக்கும் குறைவான தகுதி உடைய ஒரு
நட்சத்திரமே  (a below average star). Our son is an inferior star.

5) இங்கு தகுதி என்பதை அளவிடும் parametersல்
ஒன்று நிறை (mass) ஆகும். நமது சூரியனின் நிறை
1.98 x 10^30 kg மட்டுமே.
இந்த நிறையை வைத்துக் கொண்டு
கருந்துளையாக மாற முடியாது.

6) நமது சூரியன்  ஹைட்ரஜனை ஹீலியமாக
ஆக்கும் அணுக்கருச் சேர்க்கையை (nuclear fusion)
மட்டுமே செய்கிறது.

7) கருந்துளையாக மாறவேண்டுமெனில் இரும்பு
வரை உண்டாக்க வேண்டும். நமது சூரியனால்
இரும்பை உண்டாக்க முடியாது. கருந்துளையாக 
மாறுவது என்பது இரும்பு அடிக்கிற இடம். அந்த
இடத்தில் நமது சூரியனைப் போன்ற ஈக்கு என்ன
வேலை?

8) கருந்துளையைப் பற்றிப் பேசும்போது, அனிச்சைச்
செயலாக நமக்கு ஒருவர் நினைவுக்கு வர வேண்டும்.
அவர் யார்? அவர்தான் சுப்பிரமணியம் சந்திரசேகர்.
இவர் ஒரு தமிழர். நட்சத்திரங்களின் பிறப்பு
இறப்பு பற்றி ஆராய்ந்து அதற்காக இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர்.

9) சந்திரசேகர் வரம்பு (Chandrasekar limit) என்று இவர்
கண்டறிந்த கோட்பாட்டுக்குப் பெயர். நமது
சூரியனைப் போல் 1.44 மடங்கு நிறைக்குள்
ஒரு நட்சத்திரம் இருந்தால் மட்டுமே, அது சமநிலையை
இழக்காமல் இருக்கும் என்றும்  இதற்கு மேல்
நிறை உடைய எந்த ஒரு நட்சத்திரமும்
gravitational collapseக்கு இலக்காகும் என்றும்
சந்திரசேகர் கண்டறிந்தார்.

10) ஆக சந்திரசேகர் வரம்பின்படி, நமது சூரியன்
gravitational collapseக்கு உள்ளாகாது. எனவே நமது
சூரியனின் இறப்பு என்பது இயற்கை மரணமாகவே
இருக்கும்.

11) சிவப்பு ராட்சசன் என்னும் நிலையை நமது சூரியன்
அடையும்போது அதன் நிறை (mass) குறையும். அதே
நேரத்தில் அதன் அளவு  விரிவடையும்
(radius of the sun will increase). இவ்வாறு விரிவடையும்
சூரியனின் நீளும் கரங்களில் சிக்காமல்
பூமி தப்புமா?  

12) நிறையக் கற்பனைக்கு இடமளிக்கும் கேள்வி
இது. இதற்கான விடை பற்றிப் பின்னர் பார்ப்போம்.
******************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக