செவ்வாய், 8 ஜனவரி, 2019

வைகுண்டராஜனின் சம்பளப் பட்டியலில்
இல்லாத ஒரே ஒரு போராளியைக் காட்ட முடியுமா?
குட்டி முதலாளித்துவமே உன் பதில் என்ன?
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி எந்த திசையில் இருக்கிறது என்று
தெரியாதவர்களும், தூத்துக்குடிக்கு ஒருமுறைகூட
போகாதவர்களும் தூத்துக்குடியின் மாசு குறித்து
தான்தோன்றித் தனமாக எதை எதையோ பேசியும்
எழுதியும் வருகிறார்கள்.

1970களில், நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு
பேருந்தில் சென்றால், வழியெல்லாம்
வெம்பரப்பாக கிடக்கும். இன்று நிலைமை
தலைகீழாக மாறி விட்டது. (வெம்பரப்பு= வெட்ட வெளி,
பொட்டல் காடு).

தூத்துக்குடி பிரிக்கப் படாமல் நெல்லை மாவட்டத்துடன்
இருந்தபோது, நெல்லையின் அவுட்டர் பகுதி போன்றுதான்
தூத்துக்குடி இருந்தது. இன்று மக்கள் நெருக்கமும்
ஏராளமான தொழிற்சாலைகளும், அவை உண்டாக்கும்
மாசும் நச்சுமாக தூத்துக்குடி வாழத் தகுதியற்ற
நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டு விட்டது. இனி உச்சநீதிமன்றம்
திறக்கச்சொல்லி உத்தரவு இட்டாலும், தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட்டைத் திறக்க முடியாது. உள்ளூர்
மக்களின் தீவிரமான எதிர்ப்பையும் மீறி, கடவுளே
வந்தாலும் ஸ்டெர்லைட்டைத் திறந்து நடத்த முடியாது.
இது அனில் அகர்வாலுக்கும் தெரியும்.

2007-2008இல் தூத்துக்குடியில் டைட்டானியம் டை
ஆக்ஸைடு ஆலையை பல்லாயிரம் கோடி முதலீட்டில்
தொடங்க வந்த டாட்டாவின் கதி என்ன ஆனது?

அன்றைய முதல்வர் கலைஞரின் முழுமையான
ஆதரவு இருந்தபோதும், டாட்டாவால் ஆலையைத்
தொடங்க முடியவில்லை. ஓட ஓட விரட்டி அடிக்கப்
பட்டார் டாட்டா.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த விவரம் தெரியுமா?
தெரியாது. தூத்துக்குடி ஊர்க்காரனைத் தவிர
வேறு யாருக்கும் தெரியாது.

டாட்டாவை விரட்டி அடித்தது யார்? மக்களா?
போராட்டமா? எதுவும் .இல்லை. ஒரே ஒரு தனி
மனிதர், சக்தி வாய்ந்த தனி மனிதர்தான் டாட்டாவை
விரட்டி அடித்தார். யார் அவர்? அவர்தான்
வைகுண்டராஜன்.

தூத்துக்குடியில் சகலமும் வைகுண்டராஜனின்
ஏகபோகம் (monopoly)தான். அவரை மீறி அங்கு ஒரு
சருகு கூட அசையாது.
  
சரி, ஆபத்தான டைட்டானியம் டை ஆக்ஸைடு
அலையை விரட்டி அடித்தாரே வைகுண்டராஜன்,
அது பாராட்டுக்கு உரியதுதானே!

டாட்டாவை விரட்டி அடித்த வைகுண்ட ராஜன்
அதே டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலையை
தானே ஆரம்பித்து விட்டார். வெற்றிகரமாக நடத்தி
சூழலை மாசு படுத்தி வருகிறார்.

ஆக, வைகுண்ட ராஜனின் கொள்கை என்ன?
1.தூத்துக்குடியில் என்னைத் தவிர யாரும்
தொழில் தொடங்கள் கூடாது.
2. என்னைத் தவிர யாரும் தூத்துக்குடியை மாசு
படுத்தக் கூடாது.
3. தூத்துக்குடியில் தொழில் தொடங்குவதும்
ஊரையே நச்சுப் படுத்துவதும் என்னுடைய
ஏகபோகம் மட்டுமே!

இவ்வளவு சக்தி வாய்ந்த வைகுண்டராஜனை யாரும்
எதிர்க்க முடியாது. திமுக, அதிமுக, மதிமுக,
கம்யூனிஸ்ட் கட்சிகள் யாரும் எதிர்க்கவில்லை.
சுற்றுச் சூழல் போராளிகளாக வேஷங்கட்டி
ஆடும் எந்த ஒரு கோமாளியும் வைகுண்டராஜனை
எதிர்க்கவில்லை. அனைவரும் வைகுண்டராஜனின்
சம்பளப் பட்டியலில் இருப்பவர்கள்.

மேலும் வைகுண்டராஜனை எதிர்ப்பதும் சுலபமல்ல.
எதிர்ப்பவனை தேரிக்காட்டில் புதைத்து விடுவார்
வைகுண்டர்.

என்றாலும், மொத்தப் பிரபஞ்சத்திலும் ஒரே ஒருவர்
வைகுண்டராஜனை எதிர்த்தார். தீவிரமாக
எதிர்த்தார், சில ஆண்டுகளுக்கு முன்பு. அவர் யார்?
அரசியல் கோமாளி என்று அறியப்படும் தேமுதிக
தலைவர் விஜயகாந்த் தான். அவர் மட்டுமே
வைகுண்டரை எதிர்த்தவர். அரசியலின் ஒரே ஆண்மகன் ஆண்மகன் விஜயகாந்தின்
காலில் விழுந்து வணங்குகிறேன்.
---------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: படத்தில் வேட்டியை மடித்துக் கொண்டு
வைகுண்டராஜன் நடந்து வருவதைக் .கவனியுங்கள்.
அவர் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை
என்பதையும் கவனியுங்கள். ஆம், வைகுண்டராஜனிடம்
செருப்பு அணியும் பழக்கம் இல்லை. தேரிக்காட்டில்
சுடு மணலில், கால்கள் மணலில் புதையப்
புதைய, செருப்பு இல்லாமல், வெறுங்காலுடன்
நடப்பதே வைகுண்டரின் பழக்கம்.

Reebok shoe அணிந்து புதிய ஜனநாயகப் புரட்சி
பேசும்  முழுநேரப் புரட்சியாளர்களுக்கு
சமர்ப்பணம்!
************************************************************









  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக