திங்கள், 7 ஜனவரி, 2019

செத்துப் போச்சு ஐயா, செத்துப் போச்சு!!
----------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏட்டின் ஆண்டு மலருக்காக,
அகல்விரிவானதும் ஆழமானதுமான ஓர் அறிவியல்
கட்டுரையை எழுதி அனுப்பியுள்ளேன். 2016 பிப்ரவரியில்
ஆண்டு மலர் வெளியாகும்.
கட்டுரை இணைய நடுநிலை பற்றியது. இணையம் பற்றி
எழுத நேரும் போதெல்லாம், புழக்கத்தில் உள்ள கணக்கற்ற
ஆங்கிலச் சொற்கள், தொடர்கள், சொற்குறுக்கங்கள்
ஆகியவற்றைத் தமிழில் எழுதுவது பெரிதும் இடர்
மிகுந்ததாகவே இருக்கிறது.
OTT services என்ற தொடரை மேடைச் சேவைகள் என்று
மொழிபெயர்த்தேன்.பின்னர் கைவிட்டேன்.
(முன்னதாக, பரண் சேவைகள், மாடிச் சேவைகள் என்றெல்லாம்
உருவாக்கிக் கழித்துக் கட்டினேன்). மேடைச் சேவைகள்
என்பது அற்புதமான தமிழாக்கம்தான். இருந்தும் கைவிடக்
காரணம் என்ன?
OTT services என்றவுடனே Over The Top services என்று ஆங்கில
வாசகன் புரிந்து கொள்வான். இந்தத் தொடர் முதன் முதலாக
2011இல் டீன் பப்லே (Dean Bubley) என்பவரால் உருவாக்கப்
பட்டு நன்கு புழக்கத்தில் இருக்கிறது.
ஆனால் "மேடைச் சேவைகள்" என்ற தொடரை இந்த உலகில்
நான்தான் முதன் முதலில் உருவாக்குகிறேன். இது ஒருநாளும்
புழக்கத்துக்கு வராது என்பதையும் நான் அறிவேன்.
ஏனெனில், தமிழில் எழுதப் படும் அறிவியல் கட்டுரைகளை
வாசகர்கள் படிப்பதில்லை. ஒரு சிலர் மட்டும் படிப்பதால் சொல்
புழக்கத்துக்கு வராது. எட்டுக் கோடித் தமிழர்களும்
படித்து விவாதிக்கும் போதுதான் சொல் புழக்கத்துக்கு
வரும். தனி ஒருவர் தம் சொந்த முயற்சியால் புதிய சொல்லை
உருவாக்கி விடலாம். ஆனால் மொத்தச் சமூகமும்
ஒத்துழைத்தால்தான் ஒரு சொல் புழக்கத்துக்கு வர முடியும்.
அறிவியல் முயற்சிகளுக்கு தமிழன் ஒருநாளும்
ஒத்துழைக்க மாட்டான். இவன் சினிமாமோகி.
சாதிப்பித்தன். தமிழ்தேசியக் குட்டையில் ஊறிக்
கிடக்கும் குட்டைத் தவளை. எனவே இந்த வேசிமகனை
நம்பி நேரத்தைச் செலவிட்டுப் புதுப்புதுச் சொற்களை
உருவாக்குவது விழலுக்கு இறைக்கும் நீரே என்ற
முடிவுக்கு வந்தேன்.
telco என்ற சிறியவொரு சொல்லால் ஆங்கிலத்தில்
சுலபமாகக் குறிப்பிட முடிகிறது. ஆனால், தொலை...
தொடர்பு...நிறுவனம் என்று நீட்டி முழக்கித் தமிழில்
எழுதுவதற்குள் தாலி அறுந்து விடுகிறது.
Application என்று ஒரு சொல் இணையப் பயன்பாட்டில்
உண்டு. App, Apps, App developers என்றெல்லாம்
சொற்கள் விரியும். இதற்கு உண்டான தமிழ்ச் சொற்கள்
எங்கே? Application என்றால் விண்ணப்பம் என்று
மட்டும் தமிழ் வாசகன் அறிவான். அனால் இணையப்
பயன்பாட்டில், இச்சொல் விண்ணப்பம் என்ற பொருளில்
வராது.
Application என்றால் பயனுறு பகுதி என்று பொருள்.
Application means the outcome of the application of theory.
தியரியை அப்ளை பண்ணும்போது கிடைப்பது
அப்ளிகேஷன். applied chemistry போன்ற சொற்களை
நினைத்துப் பாருங்கள்.
Application என்ற சொல்லை "செயலி" என்று மொழி
பெயர்க்கிறார் ஜெயமோகனின் நண்பர் ஒருவர்.
இது முழுக்க முழுக்கத் தவறு. ஏனெனில், processor
என்ற சொல்லுக்கு செயலி என்ற சொல் ஏற்கனவே
நன்கு புழக்கத்துக்கு வந்து விட்டது. micro processor என்றால்
நுண்செயலி என்பது வரை வந்து விட்டது.
நமக்குப் பொண்டாட்டி வேண்டும் என்றால் ஒரு
பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்தவன் பொண்டாட்டியைக் கையைப் பிடித்து
இழுக்கக் கூடாது.
சமூகத்தின் பொருள் உற்பத்தித் துறையில் இருந்து
தமிழ் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டுக் கிடக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், பொருள் உற்பத்தித்
துறையைப் பொறுத்த மட்டில், தமிழ் செத்துப் போய்,
பல காலம் ஆகி விட்டது. பண்பாட்டுத் துறையில்
மட்டுமே தமிழ் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக