திங்கள், 21 ஜனவரி, 2019

மின்சார வயரிங் போல மனித மூளையில்
நரம்புகளின் வயரிங்!
நரம்பியல் நிபுணர் வி. எஸ். ராமச்சந்திரன் பேச்சு!
பயனுள்ள கூட்டம்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
வராக மிகிரர் அறிவியல் மன்றம் (Varaha Mikira Science Forum)
என்ற அமைப்பு திங்கள் கிழமை 21.01.2019 மாலையன்று
ஓர் அறைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது.
கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப்
பணியாற்றும், உலகின் தலைசிறந்த நரம்பியல்
நிபுணர் வி எஸ் ராமச்சந்திரன் உரையாற்றினார்.

பொருள்: சிக்மண்ட் ஃபிராய்டின் இன்றைக்கும்
பொருந்தும் கோட்பாடுகள்.  

வி எஸ் ராமச்சந்திரன் தமிழர் ஆவார். ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரியில் MBBS .படித்தவர் இவர்.

கூட்டத்திற்கு 200 பேர் வந்திருந்தனர். வந்தவர்கள்
அனைவரும் துறை சார்ந்த ஆட்கள். நரம்பியல்,
மருத்துவம். உளவியல் மருத்துவம் ஆகிய துறை
சார்ந்து நிறைய மருத்துவர்கள் வந்திருந்தனர்.
பெண்கள் கணிசமாக வந்திருந்தனர்.

150 பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய அந்த
ஏசி அறையில் தரையிலும் சிலர் அமர்ந்து
வி எஸ் ராமச்சந்திரனின் பேச்சைக் கேட்டனர்.

வி எஸ் ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அறிவியல் கூட்டங்களுக்கே உரிய POWER POINT
PRESENTATION திரையில் ஒளிர்ந்தது. 

அவரின் பேச்சின் சாரம் இதுதான்! மின்சார வயரிங்
போல மனித மூளையிலும் நரம்புகளின் வயரிங்
உள்ளது. இதன் காரணமாகவே நடத்தையில்
கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை மிகத்
தெளிவாக விளக்கினார்.

கூட்டத்திற்கு வந்தவர்களில் துறை சாராத, அதாவது
நரம்பியல் மருத்துவம் சாராத ஆட்கள் நானும்
பத்ரி சேஷாத்ரியும்தான் என்று நினைக்கிறேன்.

வி எஸ் ராமச்சந்திரனிடம் சில கேள்விகளைக்
கேட்டு விளக்கம் பெற நினைத்தேன். இயலவில்லை.
திட்டமிட்ட நேரத்தை விட அதிகமாகவே அவர்
பேசிவிட்ட நிலையில், கேள்வி-பதில் நிகழ்ச்சியின்
நேரம் குறைந்து விட்டது. 

பயனுள்ள கூட்டம்!
********************************************************

       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக