தோல்வியில் முடிந்த ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்!
------------------------------------------------------------------------------------------------
முடிவுக்கு வந்து விட்டது ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்.
காலவரம்பற்ற வேலைநிறுத்தம் என்று அறிவித்து
ஒன்பது நாட்கள் வரை ஜாக்டோ ஜியோவால் நடத்த முடிந்திருக்கிறது இது பாராட்டுக்குரியது.
ஆனால் ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தியும்
உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை. குறைந்தபட்சம்
பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இருக்காது என்ற
ஒரே ஒரு அம்சத்தைக் கொண்ட உடன்பாடு கூட
இல்லாமல் வேலைநிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ
ஒருதலைப்பட்சமாக முடித்துக் கொண்டுள்ளது.
இது அமைப்பு ரீதியாக பெரும் பின்னடைவு மட்டுமல்ல
இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும்.
வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டோம் என்று
அறிவிப்பதைத் தவிர ஜாக்ட்டோ ஜியோ தலைமைக்கு
வேறு வழியில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பு
வரும் முன்னரே 95 சதம் ஆசிரியர்கள் பணியில்
சேர்ந்து விட்டனர்.
செய்முறைத் தேர்வு (practical exam) பிப்ரவரியில்
அறிவிக்கப்படும் சூழலில், ஆசிரியர்கள் மீதான
சமூக நிர்பந்தம் அதிகமாகவே இருந்தது. எனினும்
இந்த நிர்ப்பந்தம் காரணமாகவே ஆசிரியர்கள்
பணியில் சேர்ந்தனர் என்று கூற இயலாது.
அரசு கெடு நிர்ணயித்துள்ள சூழலில், அதை மீறி
வேலைநிறுத்தம் செய்தால், நிகழவிருக்கும்
பாதிப்புகள் குறித்த அச்சமே வேலைநிறுத்தத்தை
முறித்துக் கொண்டு ஆசிரியர்களைப் பணியில்
சேர வைத்தது. இதுவே உண்மை.
இவ்வளவுக்கும் ஜெயலலிதாவைப் போல மூர்க்கத்
தனமான அடக்குமுறையை எடப்பாடி அரசு
ஏவவில்லை என்பது கண்கூடு. தற்காலிக ஆசிரியர்கள்
எவரும் புதிதாக பணி நியமனம் செய்யப்படும்
நடைமுறை இன்னமும் ஆரம்பிக்கப் படவில்லை.
எஸ்மா சட்டமோ டெஸ்மா சட்டமோ பிரயோகிக்கப்
படவில்லை; வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்றும்
அறிவிக்கப் படவில்லை. அடக்குமுறையின் முதல்
கட்டமான அச்சுறுத்தலைக் கொண்டே எடப்பாடி
அரசு வேலைநிறுத்தத்தை முறியடித்து விட்டது.
வேலைநிறுத்தத்தை ஒன்பது நாள் வரை நீடிக்க
விட்டிருக்கக் கூடாது. மூன்றாவது நாள் முடிந்ததுமே
உடன்பாட்டை நோக்கியே ஜாக்டோ ஜியோவின்
தலைமை காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
அதைச் செய்யத் தவறியது தலைமையின்
பெருந்தவறு.
பழிவாங்கல் நடவடிக்கைகள் ரத்து செய்யப் படாமல்
அப்படியே இருக்க, வேலைநிறுத்தத்தில் பங்கேற்று
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்குகள்
சஸ்பென்ஷன் ஆகியவை ரத்து செய்யப்படாத
நிலையில், வேலைநிறுத்தத்தை ஒருதலைப்
பட்சமாக முடித்திருப்பது அமைப்பு ரீதியாகப்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
புறநிலைமைகள் (objective situation) சாதகமாக இல்லை
என்பதைக் கணக்கில் கொண்டு, ஒன்பது நாட்கள்
வரை வேலைநிறுத்தத்தை நீட்டிக்காமல், பழிவாங்கலை
மட்டும் ரத்து செய்யும் ஒரே ஒரு ஷரத்துடன்
ஒரு உடன்பாட்டை எட்டிவிட்டு வேலைநிறுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்
ஜாக்டோ ஜியோ தலைமை.
ஆனால் ஏன் இதை ஜாக்டோ ஜியோ தலைமை
செய்யவில்லை? சொந்த முடிவை எடுக்கும்
ஆற்றலும், சுயேச்சையாகச் செயல்படும் ஆற்றலும்,
ஜாக்டோ ஜியோவின் குட்டி முதலாளித்துவத்
தலைமைக்கு இல்லை. அவர்கள் தங்களின்
எஜமானர்களான அரசியல் கட்சித் தலைவர்களின்
கட்டளைகளை அப்படியே ஏற்றுச் செயல்படும்
ஆமாம் சாமிகளாக மட்டுமே இருக்கிறார்கள்
என்பது இந்த வேலைநிறுத்தத்தின் மோசமான
தோல்வி மூலம் வெளிப்பட்டு இருக்கிறது.
சொந்த மூளையுள்ள சுய சிந்தனையுள்ள
தேவையான நேரத்தில் சுயேச்சையாகச்
செயல்படவல்ல ஆற்றல் மிக்க தலைமை
ஜாக்ட்டோ ஜியோவில் இல்லை என்பதை
இந்த வேலைநிறுத்தம் வெளிச்சம் போட்டுக்
காட்டி விட்டது.
ஒரு வேலைநிறுத்தத்தை எப்படி நடத்த வேண்டும்,
எப்படி முடிக்க வேண்டும், எப்படி உடன்பாடு
போட வேண்டும் என்பது பற்றியெல்லாம்
ஜாக்டோ ஜியோ தலைவர்கள் BSNL தொழிற்சங்கத்
தலைவர்களிடம் (NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்)
பாடம் கற்க வேண்டும்.
வலிமையற்ற எடப்பாடியிடம் வலிமையான
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இயக்கத்தை
தோல்வி அடை யச் செய்திருக்கிறது ஜாக்டோ ஜியோ தலைமை. இத்தோல்விக்கான
காரணங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
**********************************************************
குப்தா இல்லைதான் என்றாலும் குப்தாவிடம்
பாடம் கற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இப்படி 9 நாள் வேலைநிறுத்தம் நடத்தி, வேலைநிறுத்தம்
செய்த ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்
விவேகமற்ற நடைமுறையை யாரும் கைக்கொள்ள
மாட்டார்கள். இப்படி உடன்பாடே போடாமல் ஒரு
வேலைநிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக முடித்துவிட்டு
எந்தத் தலைவராவது வாயில் கூட்டத்தில் வந்து பேச
முடியுமா?
எடப்பாடி அரசு வலிமையற்ற அரசுதான். நாங்கள்
ராமச்சந்திர மேனனின் அடுக்குமுறை,
ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆகியவற்றை
நேரடியாக எதிர்கொண்டவர்கள். அவற்றுடன்
ஒப்புநோக்கும்போது, எடப்பாடி அரசானது
வலிமையற்றதே. பாசிசம் என்பது தத்துவார்த்த
வரையறையைக் கொண்டது. கறார்த்தன்மையற்ற
நெகிழ்ச்சியான பொருளில் அந்தச் சொல்லை அருள்கூர்ந்து
பயன்படுத்த வேண்டாம்.
அதிமுக தலைமைக்கு நெருக்கமான
ஊடக நண்பர் அளித்த செய்தி
ஸ்டாலினுக்கு, அவருடைய அருகதைக்கு எடப்பாடி
என்பவர் பிரம்மாண்டமான எதிரியே. அது ஸ்டாலினின்
ஆளுமைக் குறைபாடு. இங்கு ஜாக்டோ ஜியோ தலைமை
என்பது மார்க்சிஸ்ட் கட்சியால் வழிநடத்தப் படுவது.
எமது விமர்சனம் மார்க்சிஸ்ட் தலைமை இந்த
வேலைநிறுத்தத்தைக் கையாண்ட விவேகமற்ற
அணுகுமுறையைக் குறிப்பதாகும்.
துணிச்சலுடன் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைச்
சொல்லுவதே எமது பணி. இக்கட்டுரைக்கு இரண்டாம்
பாகம் உண்டு. அது நாளைக்கு வெளிவரும்.
அநேகமாக 2000க்குப் பிறகே ஒவ்வொரு துறையாக
புதிய பென்ஷன்தான். மத்திய அரசில் BSNL துறையில்
1.10.2000க்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கு
புதிய பென்ஷன்தான். IAS, IPS அதிகாரிகளும்
அரசு ஊழியர்களே. மத்திய அரசில் புதிய பென்சன்
திட்டம் என்று வந்ததோ அன்று முதல் மத்திய
அரசுப் பணியில் உள்ள IAS அதிகாரிகளுக்கு புதிய
பென்சன் மட்டுமே. அதே போலத்தான் நீதிபதிகளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக