வியாழன், 31 ஜனவரி, 2019

எப்போதுமே சீட்டு நாம் முடிவு பண்ணும் விஷயம்.
ஓட்டு மக்கள் முடிவு பண்ணும் விஷயம்.

ஒரு  நோக்கத்தை முனவ்

தோல்விதான்! வெற்றி இல்லை!
------------------------------------------------------
வரையறுக்கப் பட்ட நோக்கத்துடன்
மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும்
வெற்றி தோல்வி உண்டு. மேலும் ஒரு வேலைநிறுத்தம்
என்பது என்ன? அது ஒரு concerted action. லட்சக் கணக்கான
தொழிலாளர்களை சில பல கோரிக்கைகளுடன்
ஐக்கியப்படுத்தி, அவர்களின் கூட்டு பேர சக்தியை
மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. எனவே இதில்
வெற்றி தோல்வி நிச்சயமாக உண்டு.

தொழிற்சங்க இலக்கணப்படி
வேலைநிறுத்தங்களுக்கு வெற்றி தோல்வி உண்டு.
முற்றிலும் தோல்வி அடைந்த ஒரு வேலைநிறுத்தத்தை
"தோல்வியே இல்லை" என்று பார்ப்பது ஆன்மிகப்
பார்வை. வர்க்கப் போராட்ட அரசியலில் அத்தகைய
பிற்போக்கான ஆன்மிகப் பார்வைக்கு
இடம் கிடையாது.   

ஒரு வேலைநிறுத்தம் முடிந்ததுமே  சாதக பாதக
அம்சங்கள், வெற்றி தோல்விகள், படிப்பினைகள்
ஆகிய எல்லாவற்றையும் தொழிற்சங்க இயக்கம்
பரிசீலிக்கும். விமர்சன மற்றும் சுயவிமர்சன
நோக்கில் ஒரு வேலைநிறுத்தத்தின் நெட் ரிசல்ட்
பரிசீலிக்கப்படும். அப்படிப் பரிசீலிப்பது
தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு, நடைமுறை.
அதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. 

இந்த வேலைநிறுத்தத்தைப் பொறுத்த மட்டில்,
அ) முன்வைத்த 9 அம்சக் கோரிக்கையில்
ஒன்றும் நிறைவேறவில்லை.
ஆ) பழிவாங்குதல் நடவடிக்கைகள் ரத்தாகவில்லை
இ) ஜாக்டோ ஜியோ தலைமை முடிவெடுத்து
அறிவிக்கும் முன்னரே வேலைநிறுத்தம் செய்த
ஆசிரியர்களில் 90 சதம் பேர் பணிக்குத்
திரும்பி  விட்டனர்.

அ), ஆ) என்னும் முதல் இரண்டும் வெற்றி
அடையாவிட்டாலும் பரவாயில்லை.  மூன்றாவதாக
உள்ள இ)யில் தோல்வி ஏற்பட்டது அமைப்பு ரீதியாகப்
பெரும் பின்னடைவைத் தருவது. இதை வெற்றி எனப்
பார்ப்பது புத்தி பேதலித்தால்தான் முடியும்.

எனவே  போராடும் தொழிலாளி வர்க்கமாகிய
நாங்கள் இந்தத் தோல்வியில் இருந்து பாடம்  கற்று
அடுத்த முறை வெற்றிக்குத் தயார் ஆவோம்.
தோல்வி அடைந்த வேலைநிறுத்தத்தையும் வெற்றி
எனப் பார்க்கும் ஆதி சங்கரரின் அத்வைத மனநிலை
பாட்டாளி வர்க்கத்திற்கு கிடையாது.


நாங்கள் deferred என்று சொல்லுவோம். deferred என்றால்
ஒத்திவைப்பு அர்த்தம். தமிழ்நாடு அரசு ஊழியர்
இயக்கத்தில் தற்காலிக வாபஸ் என்று சொல்கிறார்கள்.
இரண்டுக்கும் ஒரே பொருள்தான். மீண்டும்  சிறிது
காலம் கழித்து வேலைநிறுத்தம் செய்ய முயன்றால்
புதிதாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.  deferred என்றாலும்
தற்காலிக வாபஸ் என்றாலும் அது மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையின் endஐக் குறிக்கும்.

        
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக